காதலா?? உள்ளதா??
காதலா??
காதல் உண்மையா??
ஒரு வாசகராக நான் இத்தளத்தில் நுழைந்த போது பலரிடம் வாதிட்டது உண்டு..
(காதல் பொய் என்று..)
ஒருவேளை காதல் உண்மையாக இருந்தால் அது நம் பெற்றோர்களின் காலத்தில் உள்ள காதலாக இருக்கும் என வாதிட்டதுன்டு..
ஆனால், நான் ஒரு எழுத்தாராக மாறிய பிறகு காதலை பற்றி எழுத நேரிட்டது..
எழுதுனேன்..
காதலை நல்ல விதமாகவே எழுதுனேன்..
கதைக்காக மட்டுமே எழுதுனேன்..
அதே நேரத்தில் சொல்லுவேன்.. என் நட்புகளிடம்..
அது கதைக்காக எழுதியது..
காதல் என்பது ஒன்று இல்லை..
ஒரு வேலை இருக்கலாம்..
ஆயிரத்தில் ஒரு ஜோடி..
அசந்து விட்டேன்..
tharakannan கண்ணா காகா கதையை படிக்கும் நேரம்.. ஆச்சிரியம் அடைந்தேன்..
ஆம், அந்த ஆயிரத்தில் ஒரு ஜோடி இவர்கள் தாம் என்று..
என் தோழியிடம் நீ குடுத்து வைத்தவள் என கூறுவேன்..
காதலே பொய், காதலே இல்லை என சொன்ன நீ.. ஆயிரத்தில் ஒரு ஜோடி இருக்கு என ஒத்துக்கொண்டாயே..
அதே போல்.. ஒத்துக்கொள்வாயடி என் தோழியே.. காதல் இருக்கு என்று என் தோழி தாரா கூறினாள்..
ஹாஹா.. சிரித்து விடுவேன்..
ஏதோ என் காகா மாதிரி எல்லோரும் இருக்க முடியாது..
உலகத்தில் காதலால் நடக்கும் அத்தனை குற்றத்தையும்(ஆசிட் ஊற்றுவது, காதலை ஏற்றுக்கொள்ளாததால் காதலித்தவளயே கத்தியால் குத்தி கொன்றது) அவளிடம் பகிர்வேன்..
பெருமையாக சொல்லுவேன்.. பார்த்தியா நான் ஜெய்ச்சிட்டேனு.. இது தான் காதலாம்னு..
என் காகா சொல்லும்.. என்னை போல் என் தங்கைக்கு ஒருவன் வருவானு.. தோழி சிரிப்பாள்.. நானும் சிரித்து விடுவேன்..
பின்னே இந்த உலகத்தில் வந்து என் காகா பிறந்ததே அதிசியம்..
இதுல இன்னொருத்தனா?? என்று..
ஆனால், இப்பொழுது உணர்கிறேன்.. காகா சொன்னது உண்மையாகி விட்டதோ??
என் எண்ணம் பொய்யாகி விட்டதோ??
காதல் இந்த உலகத்தில் இன்றும் இருக்கிறதோ??
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro