ஆனந்தம் - 10
ஊரில் உள்ள மேலும் சிறிய வேலைகள் சிலவற்றை முடித்து வீடு திரும்ப தேவாவிற்கு இரவு பத்தரையை தாண்டி இருந்தது.
வீட்டினர் உறங்கியது போல் மொத்த வீடும் அமைதியாக காட்சியளிக்க, தன்னிடம் இருந்த சாவியை வைத்து திறந்து வந்தான். கையில் ஒரு பார்சலோடு. அவளுக்காக.
அரை மணி நேரம் பயணம் செய்து அதிகம் ருசியாக இருக்கும் ஒரு கடையில் வாங்கி வந்தான். இப்பொழுது வீடு இருக்கும் அமைதியில் அவளும் உறங்கியிருக்க கூடும் என்ற ஏமாற்றத்தில் இருவருக்காகவும் வாங்கியிருந்த உணவை உணவு மேஜையில் வைத்து மேலே ஏறி தன்னுடைய அறைக்கு வெளியில் நின்றான்.
சற்று தயக்கமாக, மனைவியிடம் என்ன தான் தைரியமாக உனக்கான இடம் தருகிறேன் என கூறினாலும் அவளோடு ஒரே அறையில், அடிக்கடி அவள் முகம் பார்த்து எந்த விதமான ஆசையையும் வளர்க்காமல் இருக்க முடியுமா என கேட்டால் சந்தேகம் தான்.
'தேவா நிதானம், கண்ணு எங்கையும் எல்லை மீறி போக விட்டுடாதடா சோளமுத்தா' தனக்கு தானே போதித்து மெதுவாக கதவை திறந்து உள்ளே செல்ல, கண்களில் வெளிச்சம் பட்டு கண்ணை ப்ரகாசமாகியது.
கட்டிலில் அமர்த்த வாக்கிலே உறங்கும் மனைவியை பார்த்ததும் மெல்லிய புன்னகை சிந்தியது.
'ஏன் இப்டி தூங்குறா, நல்லா படுத்து தூங்கிருக்கலாமே'
மெல்ல முணுமுணுத்தவன் விளக்கை அனைத்து குளிக்க தேவையான உடையை எடுக்க நினைத்து அலமாரியை திறக்க நினைக்கையில் தான் அது இருந்த கோலம் நினைவு வர, இதை திறந்தால் நிச்சயம் சத்தத்தில் வீடே எழுந்துவிடுமென குளியலறை சென்று குளித்து உள் பனியன், த்ரீ பை போர்த் ஷார்ட்ஸ் அழுக்கு ஒன்றை அணிந்து வந்தான்.
மீண்டும் விளக்கை போட்டு கண்ணாடி முன்பு நிற்க, அதன் அருகில் இருந்த பெரிய பை ஒன்று புதிதாக பட, லேசாக திறந்து பார்த்தவன் வேகமாக சென்று அலமாரியை மெல்ல திறக்க, எந்த துணியும் கீழே விழவில்லை.
நன்றாக திறக்க இது தன்னுடைய அறை தானா என்ற சந்தேகம் வந்தது. அத்தனையும் அழகாக அடங்கியிருந்தது, எது எது தேவையோ அது மட்டும் இருக்க, மற்ற அலமாரிகளை திறந்து பார்த்தான், அத்தனையும் நேர்த்தியாக அடுக்கியிருந்தது.
"சாரி உங்களுக்கு புடிக்குமான்னு தெரியல" திடீரென மனைவி குரல் கேட்டு தேவா திரும்ப, நின்றுகொண்டிருந்தாள் சோர்வாக.
"பிரீயா இருந்தேன், அதான் அரேஞ் பண்ணேன், அப்டியே அங்க என்னோட திங்ஸ் வச்சிட்டேன். உங்களுக்கு ப்ராபலம் இல்லையே?" என்றவள் தயக்கம் முகத்திலே தெரிந்தது.
அதிர்ச்சியிலிருந்தவன் முகம் உடனே புன்னகைத்தது, "எனக்கே என் ரூமை அடையாளம் தெரியல சக்கர"
அவன் சிரிப்பில் தானும் மெல்ல சிரித்தவள் முகத்தை பார்த்து, "சாப்ட்டியா?" என்றான்.
தலையை ஆட்டினாள், "உங்களுக்காக தான் வெயிட் பண்ணேன்" எத்தனை சந்தோசத்தை அவள் வார்த்தைகள் தந்ததென அவளுக்கு தெரியவில்லை.
எப்பொழுதும் தேவா இல்லம் திரும்பும் நேரம் அவன் வீட்டினர் அனைவரும் உறங்கியிருப்பார்கள், இல்லை விழித்திருந்தால், "சாப்பாடு டைனிங் டேபிள்ல தான் தேவா இருக்கு, வச்சு சாப்புடு" என தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் அவன் அன்னை சமையலறை பக்கமே வர மாட்டார்.
காலை நேரம் பெரும்பாலும் தேவா விடியகாலையிலே தோட்டம் சென்றிடுவான், அப்படி வீட்டில் இருந்தாலும் அவன் அன்னை கல்லூரி செல்லும் பரபரப்பில் அவனுக்கு உணவு வைப்பதில்லை.
வீட்டில் அன்னை தனக்காக காத்திருந்து உணவு பரிமாறி பல வருடங்கள் ஆகியது. தனிமையிலே உண்டு, உறங்குபவனுக்கு அவள் காத்திருப்பு தேனாய் தித்தித்தது.
"இங்கையே இரு" என்றவன் அவள் உடையை பார்த்து, "உனக்கு எந்த டிரஸ் கம்பர்ட்டபிலா இருக்கோ அதை போட்டுக்கோ"
கீழே வந்து தான் வாங்கிய உணவு, இரண்டு தட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்து ஆம்லெட் இரண்டை போட்டு மேலே வர அவன் மனைவியும் எளிமையான ஒரு சுடிதார் அணிந்து முகம் அலம்பி குளியலறை விட்டு வந்தாள். கணவன் கையிலிருந்த உணவை பார்த்து,
"கீழயே போய் சாப்பிடலாமே ஆனந்த்" அவனோ அதற்குள் கீழே அமர்ந்து இருவருக்குமான உணவை பரிமாற துவங்கினான்,
"அட ஒக்காரு. கீழ போனா யாராவது சத்தம் கேட்டு வருவாங்க" அளவிற்கு மீறி அவன் தன்னுடைய தட்டில் உணவை வைக்க, "போதும், நான் இவ்ளோ எல்லாம் சாப்புட மாட்டேன். அப்றம் இந்த ஆம்லெட் வேணாம்" என்றாள் வேகமாக.
"அதெல்லாம் சாப்பிடலாம். ஆமா ஏன் இவ்ளோ நேரம் சாப்புடாம இருந்த? மதியமும் நீ ஒழுங்காவே சாப்டல" என தக்காளி சாஸ் கொஞ்சம் தட்டின் ஓரம் வைத்தான்.
"சும்மா தான்..." மங்கி போன அவள் குரலிலே ஏதோ சரியில்லை என யூகித்தவன் சரி என தலை அசைத்து உண்ண துவங்கினான்.
"போன வேலை நல்லபடியா முடிஞ்சதா?" - பைரவி
"கொஞ்சம் பிரச்சனை தான், ஆனாலும் வெற்றி நமக்கு தான்" என்றவன் பசியில் வேகமாக உணவை உண்ண, "சின்ன இடம் தான், ஆனாலும் அது வேற ஒரு காரணத்துக்காக வாங்குறேன்" என்றான்.
"ஓ... டெய்லி முக்காமணி நேரம் ட்ராவல் பண்ணி போய்ட்டு வருவீங்களா?" - பைரவி
"ஆமா பைரவி, வீட்டுலையும் அம்மா அப்பா அதிகம் இருக்க மாட்டாங்க, இஷாக்கு துணைக்கு நான் இருக்கணும்ல, அதான் ட்ராவல் பண்றது பத்தி எல்லாம் யோசிக்க மாட்டேன்" சாதாரணமாக கூறினான்,
"எனக்கு பைக் ரொம்ப புடிக்கும், அதான் எவ்ளோ தூரம் போக சொன்னாலும் அசராம போவேன், சில நேரம் வேலை அதிகம்னா மட்டும் நைட் அங்க தங்கிட்டு அடுத்த நாள் வருவேன்" - தேவா
சரி என தலை அசைத்து உண்ணவை உண்ண, "டேஸ்ட் நல்லா இருக்கு?" என்றாள்.
"நல்லா இருக்குல்ல? அதான் வாங்குனேன், ஆம்லெட் விட ஹால்ஃப் பாயில் தா நல்லா இருக்கும். அங்கையே வாங்கி சாப்ட்டா இத இப்டி ஒரு வாய் எடுத்து, முட்டையை ஒரே வாயில தூக்கி போட்டுடுவேன்" பைரவியின் முகம் சுருங்கியது ஒவ்வாமையில்.
"ஏய் என்னடி முகத்தை சுளிக்கிற? மதுரைகாரன் சாப்பாடை கொண்டாடுறவன். எத எது கூட வச்சு அடிச்சு சாப்ட்டா ருசி வரும், எது கூட வச்சு சாப்பிட்ட சொர்கம் வரும், எப்படி பொரட்டுனா சரக்கே இல்லாம போதை ஏறும், எங்க சாப்டா அய்யர் வீடு ருசி வரும்,
எங்க சாப்பிட்ட கடல்ல வச்சு பொரிச்ச மாதிரி ருசி வரும்னு ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு வகையா கண்டு புடிச்சு வச்சிருப்போம். இனி இங்க தான இருப்ப, உன்ன எப்டி மாத்துறேன்னு மட்டும் பாரு" உணவை பற்றி கூறவும் அவனுக்கு வந்த கோவத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது பைரவிக்கு.
"ஒரு வாய் சாப்பிட்டாலும் ருசியா சாப்புடனும்" உணவை ருசி பார்த்து சாப்பிட்டவள் அவனுக்கு கூற தலை தூக்கி பார்த்தான், "தாத்தா சொல்லுவாங்க. உங்கள பாக்குறப்போ எனக்கு தாத்தா தான் நியாபகம் வர்றாங்க. நீங்க தாத்தா மாதிரி தான்" - பைரவி
ஆர்வமாக அவள் விழிகளை சந்தித்தான், அதன் தாக்கம் அதிகமிருக்க பைரவி தலையை தாழ்த்தி உணவை உண்டாள், "என்ன தான் ருசியா இருந்தாலும் அவங்க சாப்புடுறது அளவா தான் இருக்கும், உங்கள பாருங்க" அவன் தட்டை காட்டினாள்.
பேச்சில் இருந்த அவன் தீவிரம் உணவில் இல்லை, ஒரு பொட்டலத்தை கூட முடிக்காமல் மிச்சம் வைத்திருந்தான். அடித்து உணவை உள்ளே தள்ளும் பழக்கம் அவனிடம் எப்பொழுதும் இல்லை.
அதுவும் கடையில் வாங்கும் உணவிற்கு எப்பொழுதும் தேவா பிரியமானவன் அல்ல. ஆனால் எப்பொழுதும் இருப்பதை விட இன்று இன்னும் குறைவு. ஏதோ மகிழ்ச்சி அவன் வயிற்றை நிறைத்தது போல்.
தலையை தாழ்த்தி உணவோடு விளையாடிக்கொண்டே, "இதுக்கு காரணம் பசி இல்ல சக்கரை, சந்தோசம்" பைரவி அவனை புரியாமல் பார்த்தாள்.
"மாடா உழைச்சாலும் வீட்டுக்கு வந்தா கூட பேச நாலு பேர் வேணும்னு மனசு சொல்லும்ல? நாலு பேர் இல்லனாலும் ஒருத்தர்? அப்பா அம்மா எப்பவும் பிஸி காலேஜ், எக்ஸாம்ஸ், எவாளுவேஷன், மீட்டிங் லொட்டு லொசுக்குன்னு. தங்கச்சி நான் கிண்டல் பண்ணுவேன்னு பக்கத்துலயே வர மாட்டா" சிரித்தான் சன்னமாக.
"காலேஜ் நேரத்துல ப்ர்ன்ட்ஸ் கூட ஒக்காந்து சாப்பிட்டது. அப்றம் அப்பா அம்மாக்கு நான் வேலைக்கு போகாம தோட்டம் பாக்குறேன்னு கோவம். சோ டிஸ்டன்ஸ் நீண்டுடுச்சு. ஆச்சி வீட்டுல அவங்க தூங்குற நேரம் தான் நான் மதிய சாப்பாடு சாப்புட போவேன்.
அத்தி பூத்தார் போல அவங்க கூட எப்போவாவது சேந்து சாப்புடுவேன் கூட நாலஞ்சு பேர் இருக்கப்போ. ஆனா எனக்கே எனக்காகன்னு ஒருத்தர் கூட இருந்ததில்லை"
நிறுத்தினான் சில நொடிகள், "துணைக்கு ஒருத்தர் கூட பேசிட்டே சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு, அதான் பேச மட்டும் தான் தோணுது சாப்புட தோணல" என்றவன் வேகமாக தன்னுடைய உணவை முடித்து தலையை அவளை பார்க்க தூக்க பல வகையான எண்ணங்களோடு அவனை கண் சிமிட்டாமல் பார்க்கும் அவன் மனைவியின் பார்வை புதிது.
"ஹே என்ன பீல் ஆகிட்டியா? சாப்புடு, ஏதோ ஒரு வேகத்துல மனசுல தோணுனத சொல்லிட்டேன். சாப்பாடு பத்தலையா? இன்னொன்னு வேணா வாங்கிட்டு வரவா?" அவள் தட்டினை ஆராய்ந்து கேட்டான்.
வேண்டாம் என கூறியவள் தான் இன்னும் எடுக்காமல் இருந்த உணவை அவன் தட்டில் வைத்தாள். "என்னால இதையே சாப்புட முடியல சொல்றேன், நீ இன்னும் வக்கிர? சாப்புடு ஒழுங்கா"
அவன் மிரட்டலை தவிர்த்தவள், "சாப்புடுங்க ஆனந்த் எப்பவும் நீங்க சாப்புடுறத விட ரொம்ப கம்மியா தான் சாப்டிங்க" ஆணையாக கூற, "முடியவே முடியாது" என்றான் கணவன்.
"நீங்க சாப்ட்டா தான் நான் இத சாப்புடுவேன், இல்லையா நானும் சாப்புடல" அந்த மிரட்டல் வேலை செய்ய உடனே உண்டான் கடினப்பட்டு. வயிறு நிறைந்ததோ, மனம் ததும்பி நிறைந்தது.
இருவரும் உண்ணவும் பார்சல் கவர், தட்டு அனைத்தையும் எடுத்து தேவா கீழே போக, அவன் பின்னே வந்த அவன் மனைவி அடுப்பில் சூடாக தண்ணீர் ஊற்றி அவன் முன் நீட்டினாள், "லேட் நைட் சிக்கன் முட்டை எல்லாம் சாப்ட்ருக்கோம், சூடா தண்ணி குடிக்கிறது நல்லது" எனவும் அமைதியாய் வாங்கி குடித்தான்.
தேவா அமைதியாக தண்ணீரை குடிக்க அவனையே பார்த்திருந்தவள் ஏதோ அவன் கேட்க வர, பின் தயங்க என இருப்பது தெரிந்தது. அவள் முகம் பார்த்தவன், "வெளிய போகலாம் வர்றியா?" என்றான்.
பைரவி எதுவும் பேசாமல் இருக்க, "இப்ப" என்றான் அழுத்தி.
உடல் இளக்கமுற்று துவண்டது பைரவிக்கு, இவ்வளவு ஆசையாய் கேட்பவனிடம் எப்படி அவனிடம் மறுப்பு தெரிவிப்பது? பயம் மனதெங்கும் வியாபித்து மீண்டும் கூட்டிற்குள் சென்றடைய தூண்டியது.
அவள் முகத்தையே ஒரு ஏக்கத்தோடு பார்த்தவனின் பார்வையை தவிர்ப்பதே தவிர வேறு எதுவும் அந்த பெண்மானால் செய்ய முடியவில்லை.
"பொண்டாட்டி என்ன அமைதியா இருக்க?" கேட்டவன் குரலில் சிறுக சிறுக ஏமாற்றம் உதிக்க மூச்சும் பைரவிக்கு பலமானது.
மீண்டும் மனைவியிடம் அமைதியே கிடைக்க அவள் முகம் பார்த்தவன் தன்னுடைய ஏமாற்றத்தை உள்ளித்து, "ஹே சக்கரை இதுக்கு ஏன் முகம் இப்டி வாடுது? சரி விடு" பிரிட்ஜெ திறந்து உள்ளே இருந்த ஐஸ் கிரீம் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.
"ம்ம்ஹ்ம் வேணாம்" என்றவள் எடுத்த இடத்திலே அதை வைத்து, "போகலாம்" என்றாள்.
"சரி வா" என படி ஏறி செல்லவிருந்தவனை தடுத்து, "நான் வெளிய சொன்னேன் ஆனந்த்" என்றாள் மெதுவாக.
மனைவி தன்னோடு வெளியே வருகிறேன் என சொன்னது உலகையே தன்னுடைய கைக்குள் கொண்டு வந்தது போல் மகிழ்ச்சி கரைபுரண்டோட, துள்ளி குதித்தான் தேவா.
"ஒரே நிமிஷம் இரு" இரண்டு மொன்று படிகளாக தாவி எறியவன் அடுத்த இரண்டு நிமிடத்தில் ஒரு முழு கை ஆலிவ் கிறீன் டீ-ஷர்ட் ஒன்று அணிந்து வந்து வீட்டின் வாசலை திறந்தான்.
வெளியில் வந்ததும், "ஷ் வண்டி சாவி மறந்துட்டேன்" மீண்டும் வீட்டிற்குள் அவன் சென்றதும் அவன் இரு சக்கர வாகனத்திலா என்ற சோர்வு பைரவிக்கு.
வாசல் தாண்டி இறங்கி தனக்கே ஆயிரம் அறிவுரை கூறி நின்ற சமயம் அவள் முன்னாள் நின்ற தேவாவின் தந்தை சார் கீங் கீங் என்ற சத்தத்தோடு ஒளிக்க, பின்னால் வந்து நின்ற கணவனை நன்றியோடு பார்த்தது அவள் விழிகள்.
அவளது தயக்கம் அறிந்து தான் அவன் கார் சாவியை எடுத்தது. "நீ வண்டில ஏறு நான் தண்ணி கொஞ்சம் எடுத்துட்டு வர்றேன்" தண்ணீர் எடுத்து வந்த பொழுது முன் சீட்டில் அமர்ந்திருந்தாள் அவனை எதிர் பார்த்து.
பாட்டிலை அவளிடம் கொடுத்து வாகனத்தை சாலையில் செலுத்த எங்கு அழைத்து செல்வான் என்ற ஒரு ஆவல் அவளிடம் உதித்தது. இருவது நிமிட பயணத்திற்கு பிறகு தெப்பக்குளம் இருந்த இடத்திற்கு வர, இரவு பன்னிரெண்டை நெருங்கியிருந்த சமயமும் ஜெகஜோதியாக மின்னியது தூங்காநகரம்.
"இங்க எதுவும் திருவிழாவா?" - பைரவி
"இங்க எப்பயும் இப்டி தான் கோலாகலாமா கூட்டம் திருவிழா மாதிரி இருந்துட்டே தான் இருக்கும். தைரியமா லேடீஸ் கூட இந்நேரம் இருப்பாங்க" வாகனம் அதிகமில்லாத ஒரு கடை முன்பு காரை நிறுத்தி இறங்க அவளும் இறங்கி வந்தாள் அவன் அருகில்.
ரோட்டை தாண்டி சென்று தெப்பக்குளத்தை திட்டில் தேவா அமர, தண்ணீர் நிரம்பி வழிந்த அந்த குளத்தின் குளுமை அவ்விடமெங்கும் காற்றில் பரப்பிக்கொண்டிருந்தது. துப்பட்டாவை தோளோடு போட்டு அவன் அருகில் அமர்ந்தவள் இரவின் ஒளியில் மின்னிய குளத்தை மெல்லிய புன்னகையோடு ரசிக்க, அவளை ரசிக்கும் வேலையில் தேவா இறங்கினான்.
"இந்த இடம் எனக்கு ரொம்ப புடிக்கும். அப்டியே திருவிழா நேரத்துல கலர் கலரா பொண்ணுங்க போக வர இருப்பாங்களா பாக்க பாக்க குஜாலா இருக்கும்... ப்ரன்ட்ஸ் கூட அதிகம் வருவேன், ஒரு தடவ என் ப்ரன்ட் ஒருத்தன வேணும்னே உள்ள தள்ளி விட்டுட்டோம், மொத்த இடமும் கூடி பெரிய பிரச்சனை ஆச்சு" அந்த நாள் நினைவில் சிரித்தான்.
"இப்பயும் காலேஜ் ப்ரன்ட்ஸ் கூட அடிக்கடி மீட்அப் வச்சுப்பிங்களா?" - பைரவி
"ரொம்ப ரேர் எல்லாரும் ஒவ்வொரு இடத்துல இருக்காங்க, கொஞ்சம் நடக்கலாமா?" - தேவா
அவன் கேட்கவும் தன்னால் அவள் எழுந்திட கடைகள் சூழ்ந்திருந்த ஒரு தெருவை நோக்கி நடந்தான். சில கடைகளை வீதிகளை கடக்கும் பொழுது அங்கு அவனுக்கு நேர்ந்த சில நினைவுகளை பகிர்ந்து கொள்வான்.
அவளும் அமைதியாக கேட்டுக்கொண்டே வர ஒரு கடையின் முன்பு நின்று, "இங்க பட்டர் பன் ரொம்ப நல்லா இருக்கும்" கடைக்காரரும் அவனும் மிகவும் சகஜமாக பேச அவனுக்கு இந்த கடை எவ்வளவு பரிட்சயமானதென புரிந்துகொண்டாள்.
சுட சுட வெண்ணை வழிந்தோட பாலில் சக்கரை கரைந்து தன் கைக்கு வந்த அந்த பட்டர் பன்னை பார்த்ததுமே எவருக்கானாலும் எச்சில் ஊறுவது உறுதி.
காரத்தை விட இனிப்பை விரும்பும் பைரவிக்கு சொல்லவே தேவையில்லை, சற்று முன்னர் தான் உன்னடாது கூட மறந்து போய் ஆர்வமாய் ருசிக்க துவங்க, பஞ்சு போல் ஒரு முழு பன் உள்ளே சென்றதற்கான தடயமே இல்லாமல் போனது.
அவள் உண்பதை பார்த்து தன்னுடையதை அவளிடம் வைத்து தனக்கு வேறு ஒன்றை சொல்லிக்கொண்டான்.
அதன் பிறகு வேறொரு கடைக்கு சென்று டீயை குடித்து முடிக்க, பைரவிக்கு கொஞ்சம் இருந்த உறக்கமும் காணாமல் போனது.
அந்த இரவு புதிய ஏகாந்தத்தை தந்தது அவளுள், இத்தனை நாட்கள் வீட்டினுள் அடைபட்டு சுவரை தாண்டி வேறு உலகம் இல்லையென தன்னையே முட்டாளாக்கி எண்ணியிருந்தவளுள் சிறு மாற்றம் என்னும் வேரினை உதிக்க செய்திருந்தான் தேவானந்த்.
அவன் செல்லும் இடங்கள் எல்லாம் செல்லும் அவள் கால்களும், அவன் வார்த்தைகள் ஏதோ மாயம் செய்து கட்டி போட்டதை போல சலிக்காமல் கேட்க வைத்தது.
அவனையே பார்த்திருந்தவள் தான் எங்கு வந்துளோம் என்பதை கூட கவனிக்காமல் இருந்த நேரம், "ஐபோன் யூஸ் பண்ண தெரியுமா?" அவன் கேள்வியில் தான் ஒரு சிறிய செல்போன் கடைக்கு வெளியில் நிற்பது தெரிந்தது.
"எதுக்கு?" - பைரவி
"உனக்கு தான்" - தேவா
"இல்ல வேணாம், அண்ணண் வாங்கி தரேன்னு சொல்லிருக்காங்க" அவனிடம் பெறுவதில் இன்னும் தயக்கம் தான் அவளுக்கு.
"உனக்கு புடிச்ச போன் மட்டும் பாரு" என்றான் சற்று துளிர்த்த கோவத்தில்.
"ஐபோன் யூஸ் பண்ண தெரியாது, வேற விலை கம்மியா வாங்கி தாங்க" அவனிடம் பதில் சொன்னாலும் தன்னிடம் கைபேசி இல்லை என்பதை எப்படி கண்டுகொண்டான் என்ற சந்தேகம் அவளிடம்.
அதிகம் பேசியதில்லை, பார்த்ததில்லை ஆனால் தன்னை பற்றிய சின்ன சின்ன தகவல்களை கூட தெரிந்து வைத்திருப்பதன் காரணம் என்னவென தெரியாமல் விழித்தாள்.
அதே எதிர்வினையை தன்னிடமிருந்து அவன் உடனே எதிர் பார்த்தால் என்ன செய்வதென அச்சமும் கூடியது.
அவன் காட்டிய அத்தனை கைபேசிக்கும் தலையை தலையை அவள் ஆட்ட அவளிடம் கேட்காமல் தானே கூகிள் பிக்சல் 6 ப்ரோ ஒன்றை வாங்கி அதற்கான கவர், டெம்பர் கிளாஸ் என அனைத்தையும் முடித்து நாளை சிம் வாங்கி தருவதாக கூறினான்.
அதோடு நிறுத்தாமல் அவளுக்காக சில ஹாண்ட்பேக், பர்ஸ் என கேட்காமலே வாங்கி திணித்தான். அதற்கும் மேலும் அவன் பணத்தை செலவழிக்க விருப்பமில்லாமல் உடல் அசதியை காரணம் காட்டி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
வீட்டிற்கு வரும் பொழுது பின் சீட்டில் நிறைந்து கிடந்த பொருட்களை பார்த்து, "இருந்தாலும் எனக்கு இவ்ளோ கஸ்ட்லியாண போன் தேவையில்லை" என்றாள்.
அவன் அமைதியாக வரவும், "அண்ணா வாங்கி தர்றேன்னு சொல்லிருந்தாங்க, தேவையில்லாம உங்களுக்கு தான் செலவு" மீண்டும் அதிலே வந்து நிற்க வாகனத்தை ஓரமாக நிறுத்தி அவளை பார்த்து திரும்பி அமர்ந்தான்.
"இங்க பாரு, நீ என்னோட பொண்டாட்டி. ஊசி, ஹேர்பின்ல இருந்து போன், கார், பைக் வர உனக்கு வாங்கி தர வேண்டியது உன்னோட புருஷனாகிய என்னோட கடமை.
கடமையை விட அது எனக்கான உரிமை. இல்லை எனக்கு செலவு மிச்சம் பண்ற, என்கிட்ட கேக்க தயக்கமா இருக்குனு உன் அப்பா வீட்டுல நீ போய் ஒரு ரூபாய் வாங்கினாலும் உனக்குன்னு எதுவும் செய்ய துப்பில்லாதவனா நான் மாறிட்டேனு அர்த்தம்"
சாந்தமாக காட்சியளிக்கும் அவன் முகத்திற்கும் கூர்மையாக பேசும் அவன் வார்த்தைக்கும் என்னென்ன வேறுபாடுகள், பயத்தோடு அவனை பார்த்து விழித்தாள்.
"இவ்ளோ சொல்லியும் உன் அண்ணண் வாங்கி தருவான்னு சொன்னேனா" ஜன்னலை திறந்து விட்டான், "தாராளமா வெளிய தூக்கி போட்டுடு" என்றான்.
கண்ணீர் மல்க அவனை பார்த்த பைரவி கைபேசியை வயிற்றோடு அணைத்து மாட்டேன் என தலை அசைக்க பேசாமல் மீண்டும் வாகனத்தை செலுத்தும் வேலையை துவங்கினான்.
வாகனம் நகர்ந்ததும் மறு பக்கம் முகத்தை திருப்பி கண்ணீரை துடைக்க அவள் வருத்தம் புரிந்தவன், "சாரி பைரவி. உனக்காக நான் ஆசையா ஒரு பொருள் வாங்கி தர்றப்போ ஏன் ஏன்னு புடிக்காம நீ பேசுறப்போ கஷ்டமா இருக்குடி" என்றான்.
அவளோ அவன் பக்கமே திரும்பவில்லை, "நான் புடிக்கலனு சொல்லலையே" என்றாள் அழுகையோடு.
"ப்ச் அழுகாதடி. உன்ன வெளிய நான் கூட்டிட்டு வந்ததே இத வாங்க தான். பத்தாயிரம் ரூபா கூட இல்லாத பிச்சைகாரன் ரேன்ஜ்க்கு என் அப்பா என்ன பேசுவார், அதுக்கு சப்போர்ட்டா நீயும் உன் அண்ணண் வாங்கி குடுதான்னு நின்னனா அத விட எனக்கு அசிங்கம் வேற என்ன இருக்கு சொல்லு பாப்போம்?" பொறுமையாக அவளுக்கு விளக்கம் தந்தான்.
"சரி அத கூட விடு, எனக்கு பழகிடுச்சு. உனக்கு ஒவ்வொரு பொருளும் வாங்கி குடுக்குறப்போ எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? உனக்கு செலவழிக்காம நான் வேற யாருக்கு செலவழிப்பேன்? நீயும் சந்தோசத்தை அனுபவிச்சு என்னையும் அனுபவிக்க விடு பைரவி" கெஞ்சலாக கேட்டான்.
சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு, "சாரி இனி இப்டி பண்ண மாட்டேன்" அவன் முகம் நோக்கினாள்.
"வெளிய கூட்டிட்டு வந்து உன்ன கஷ்டப்படுத்திட்டேன்ல?" அவன் குரலும் சோர்ந்து போனது.
இல்லை என தலை அசைத்து மெல்ல சிரிக்க அவள் கன்னம் வருடி அந்த கண்ணில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதிக்க தேவாவின் மனம் பேராசை கொண்டது.
"ரொம்ப நாள் ஆச்சு வெளிய வந்து, அதுவும் நைட் நேரம் நான் வெளிய வந்ததே இல்லை" கண்களை சாலை பக்கம் திருப்பினாள், "எல்லாமே அழகா இருக்கு" அவள் குரலின் மென்மை அந்த இரவின் அவளது சுகந்தத்தை கூறியது.
நிறைவான மனநிலையோடு இல்லம் புகுந்தவர்கள் பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே நுழையும் நேரம் தண்ணீர் குடிக்கவென வந்த அவனது அன்னை இருவரையும் பார்த்து, பைரவியை பார்க்க,
"என்ன அங்க பார்வை? நீங்க வச்சிருக்க பேக் பழசா இருக்கு புதுசு வாங்கலாம்னு சொன்னா, சரி நைட் விலை கம்மியா இருக்குமேனு வாங்கிட்டு வந்தோம்" என்றான்.
அன்னையின் பார்வையோ எங்கு என்பதை போல கேட்க, "சோபால வச்சிருக்கேன் பாருங்க, உங்க மகளுக்கு ஒரு பர்ஸ், போன் கவர் இருக்கு" என்றான் கூடுதல் தகவலாக.
அதை அவர் ஆர்வமில்லா ஆவலோடு எடுக்க சென்றிட மனைவியை சைகை செய்து மேலே அனுப்பினான்.
அறைக்குள் வந்து பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து ஒரு போர்வையை எடுத்து தேவா தரையில் விரிக்க, "நீங்க ஏன் கீழ படுக்குறீங்க, நான் படுத்துக்குறேன்" வேகமாக பைரவி அவனுக்கு உதவினாள்.
"நீ சொன்னாலும் சொல்லலானாலும் நீ தான் படுக்கணும். எனக்கு பெட்ல படுத்தா தான் அழகு அழகா கனவு வரும்" என்றான் கனவு சிரிப்போடு.
அவன் பேச்சில் இல்லாத தெளிவு அவளை அதிகம் சிந்திக்க விடவில்லை, படுத்து போர்வையை பொருத்திக்கொள்ள தேவா எ.சி போட்டு விட்டு தானும் அமைதியாக படுக்க உறக்கம் வந்த பாடில்லை. புரண்டு புரண்டு படுத்து பார்த்து மனைவியை பார்க்க அவளும் உறங்கவில்லை என்பது அவள் தலையை கோதிய கைகள் கூறின.
என்று இருவருக்கும் திருமணம் என முடிவானதோ அன்றே மற்ற பெண்களிடம் காட்டும் ஈடுபாட்டை மொத்தமாய் மனைவி மேல் திருப்பினான்.
அவளது ஒவ்வொரு அசைவையும் தூரத்தில் ஆராய்ந்தவன் அவளுக்கு எது விருப்பமானது, எது இல்லை, எதை அவள் மனம் ரசிக்கும் என சில விசயங்களை தெரிந்து வைத்திருந்தான்.
அதில் சில தான் இன்று செய்தது. உணவில் ருசி அதிகம் இருக்கும் காரத்தை எறும்பு உண்ணும் அளவு உண்டு மீதம் வைப்பவள், முதலில் உண்பது இனிப்பு பதார்த்தங்களை தான்.
இன்றைய கால கட்டத்தில் கையை விட கைபேசி தான் பெரிதாக பட, அவளிடம் ஒருநாளும் கைபேசி இருப்பதற்கான தடயமே இருந்ததில்லை. அசைவங்களில் அவள் விரும்பி உண்பது முட்டை, சிக்கன் மட்டுமே. அர்ஜுனன் வீடு செல்லும் பொழுது அவள் அன்னையை மெல்லிய புன்னகையோடு வரவேற்பவள் கண்கள் அவர் போட்டு வரும் ஹாண்ட்பேக்கை தான் பார்க்கும் சில நொடிகள்.
வீட்டினர் எந்த நிகழ்வாக இருந்தாலும் அவளிடம் கைபேசியை கொடுத்து புகைப்படம் எடுக்க சொல்வது அவளது திறமையை காட்டியது. அதை எல்லாம் மனதில் வைத்து தான் இன்று நடந்த மினி ஷாப்பிங்.
அவனுக்கு அவளை அவளுடைய கூட்டிலிருந்து வெளியில் அழைத்து வர வேண்டும், அது மட்டுமே அவன் முதல் நோக்கம்.
அதன் பிறகு அவளிடம் மெல்ல மெல்ல உணர்வுகளை கொடுத்து உணர்ச்சிகளை உயிர்ப்பிக்க வைத்திடலாம் என்பதே தேவாவின் திட்டம். அதே சமயம் அவளிடம் இப்பொழுதே உரிமையோடு ஒரு சதவீதம் ஆசையும் முளைத்துவிட்டதே என்ற பயம் ஒரு பக்கம் அவனை ஆட்டுவித்து.
அதே உரிமையில் தான், "இன்னைக்கு வெயிட் பண்ண மாதிரியே எனக்காக இனி வெயிட் பண்ணுவியா சக்கரை?" என்றான் எதிர் பார்ப்போடு.
அவள் திரும்பி அவனை பார்க்க தானே, "டெய்லி வேணாம், வாரத்துல ரெண்டு நாள், ஒரு நாள்?" ஆசையாக கேட்டான்.
ஜன்னல் வழியே உலகை சில காலங்களாக பார்த்து பழகியவளை கதவை திறந்து வானவில்லை காட்டியவனுக்காக அவன் கேட்கும் இந்த சிறு உதவியை செய்ய மாட்டேன் என சொல்லும் அளவு கல் நெஞ்சம் இல்லையே அவள் மனம்?
"டெய்லி வைட் பண்ணுவேன்" மிகவும் சாதாரணமாக இருந்த முகபாவனையில் பல சத்தியங்கள்.
Hi how is the chapter?
Pudichiruka?
Comments plzz
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro