34
இவர்கள் இருவரும் அரண்மனையிலிருந்து வெளியேறி விட அக்காட்டிலிருந்து எப்புறம் அருவிக்கரைக்கு செல்வதென்று குழப்பமாய் இருந்தது ஆராதனாவிற்கும் ஆதிராவிற்கும் .
ஆராதனா "ஆதி அரண்மனையிலிருந்து தப்பி விட்டோம் இனி எவ்வாறு அந்த அருவிக்கரையை அடைவது ?"என்க
அதை யோசித்துக்கொண்டிருந்த ஆதிராவின் மூலையில் எப்பொழுதோ அவர்கள் கிளம்பிய போது அருள்மொழி கூறியது நினைவில் வந்தது "இங்கிருந்து கிழக்கு திசையில் சென்றால் இரண்டு காத தூரத்தில் அருவி வந்துவிடும் என்று அவர்கள் பயணத்தை ஆரம்பிக்கும் நாள் அவன் கூறி இருந்தான் .அவர்கள் பயணிக்கும் பொழுது திசை மாறி நடக்கவே இல்லை ஒற்றை திசையில் வடக்கு நோக்கி தான் பயணித்துக்கொண்டிருந்தனர் .
பிறகு அந்த செயற்கை நீர்வீழ்சியை பார்க்க அதுவும் போல் ஓடிக்கொண்டிருந்தது .அதை பார்த்தவள் மனதில் ஒரு யோசனை தோன்ற ஆராதனாவின் புறம் திரும்பியவள் "அக்கா இந்த ஆறு எதுவும் கிளைகளாக பிரியுமா?"என்று கேட்க
ஆராதனாவோ யோசித்தவள் "இல்லை ஆதி இந்த ஆற்றின் பெயரே ஒற்றைதிசை ஆறு தான்.மொத்தம் இரண்டு நீர்வீழ்ச்சிகள் சேர்ந்து ஒற்றை ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது . இவ்வாற்றின் எந்த பகுதியில் குதித்தாலும் அது ஒரே திசையில் தான் நம்மை அழைத்து செல்லும் அந்த நீர்வீழ்ச்சிகள் சங்கமிக்கும் இடத்திற்கு தான் அழைத்து செல்லும் என்று கூற அப்பொழுதே அவளிற்கு மின்னல் வெட்டியது
ஆதிரா கௌண்டமணி ஸ்டைலில் "ஒன்னு இந்தா இருக்கு அப்போ இன்னொன்னு "என்க
ஆராதனாவோ அதே குறும்பு தொனிக்கும் குரலில் "அது தான் அது "என்று கூற பிறகென்ன சகோதரிகள் இருவரும் அந்த ஆற்றில் பயணம் செய்வதற்காக ஓர் கட்டுமரம் அமைப்பதற்கு மூங்கில்களை சேகரிக்க துவங்கினர் .
அங்கே அந்த நீர்வீழ்ச்சிப்படுகையின் இரு புறங்களிலும் மூங்கில் மரங்கள் அதிகமாய் இருப்பதாலும் ஆதிரா தனது விடுமுறை நாட்களில் forest survival கேம்ப்களுக்கு சென்று வந்திருந்ததாலும் ஆராதனாவும் ஆதிராவும் இணைந்து இருவர் செல்லுமளவு உறுதியான கட்டுமரத்தினை உருவாகிவிட்டனர்.பின் அங்கிருந்த பழமரங்களில் சிறிது பழங்களை பறித்துக்கொண்டவர்கள் அந்த கட்டுமரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே ஆற்றில் அதன் போக்கில் பயணிக்க துவங்கினர் .
கொஞ்ச நேரம் ஆதிரா ஓட்ட பின் கொஞ்ச நேரம் ஆராதனா ஓட்ட அந்த பயணத்தில் அவர்கள் தொலைத்த இருபது வருட கதைகளையும் பேசிக்கொண்டிருந்தனர் .இரவு முடிந்து பொழுது புலர்ந்திட்ட நேரம் அந்த ஆற்று பாதை இரு பாதையாய் பிரிய அந்த இன்னொரு பாதை அந்த நீர்வீழ்ச்சிக்கு தம்மை அழைத்து செல்லுமென்று அறிந்தவர்கள் அந்த பாதையில் கட்டுமரத்தை செலுத்த அந்த ஏவல்களின் ஆளுகைக்குள் கட்டுமரம் வரும்நேரம் அவர்கள் செல்வதையே மரத்தின் மறைவிலிருந்து வெறித்துக்கொண்டிருந்தது ஓர் முகம் எரிந்த ஆன்மா .அந்த இடத்தில் அவர்கள் நுழைந்ததும் சுட்டெரிக்கும் சூரியனை கரும்மேகங்கள் சூழ்ந்துகொண்டு பகலை இரவாக்க முயல காற்று எங்கிருந்தோ அந்த கட்டுமரத்தையே அடித்து வீழ்த்திவிடுமாறு அடிக்க திடீரென அந்த கட்டுமரத்தில் எங்கிருந்தோ வந்த திஜுவாலையால் தீப்பற்றிக்கொள்ள இது அந்த ஏவல்களின் வேலை தான் என்று அறிந்து கொண்ட இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு தண்ணீரில் குதித்தனர் .
பின் இருவரும் நீச்சல் அடித்து அந்த கரையை அடைய அதுவரை கரையாய் இருந்த இடம் மொத்தமாய் மரங்கள் சூழ்ந்துகொள்ள எதிரே மரங்களாய் இருந்தது பாதை இல்லாததை போல் மாயையை ஏற்படுத்தியது .ஆராதனா வலது புறம் திரும்ப அங்கே பாதை போல் இருக்க அந்த புறம் செல்ல போனவள் கையை பிடித்து தடுத்தால் ஆதிரா .
ஆராதனா "ஆதி அங்க தான் பாதை இருக்கு ஏன் நிறுத்துற "என்க
ஆதிராவோ இடவலமாய் தலை அசைத்தவள் "அது வழி மாதிரி தெரியுது ஆனா அது வழி இல்ல அக்கா முன்னாடி தான் போகணும் "என்க ஆராதனா புரியாமல் பார்க்க ஆதிராவோ கீழே இருந்த கல்லை எடுத்து எதிரே இருந்த மரத்தின் மேல் எரிய அதுவோ ஏதோ தண்ணீருக்குள் செல்வதை போல் அந்த புறம் சென்று விழுந்தது .அதை பார்த்த ஆராதனா வாயை பிளக்க அவள் வாயை மூடியவள் அவள் கையை கோர்த்துக்கொண்டு முன்னே நடக்க ஆரம்பித்தாள் .
அவர்கள் நடக்க நடக்க சுற்றிலும் யார் யாரோ கத்துவதை போன்ற மரண ஓலங்களும் அழுகிய மாமிசத்தினா வாடையும் குடலை பிரட்டை இடை விடாது "ஆராதனா ஆதிரா "என்ற குரல்கள் காதை துளைக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தது .ஆராதனா சற்றே தடுமாறி அவ்வப்போது தலையை திருப்ப முயல ஆதிராவோ அவள் கையில் அழுத்தத்தை அதிகரித்தவள் "அக்கா என்ன ஆனாலும் எந்த பக்கமும் திரும்பிராத என் கைய விட்டுறாத "என்க
திரும்பி ஆராதனா பார்க்க ஆதிராவின் முகமே பாதி எரிந்து போய் அவள் தோள்கள் எரிவதை போன்ற பிரம்மையை கொடுக்க பயத்தில் அலறியவள் "யார் நீ விடு விடு ஆதி "என்று கத்த ஆரம்பிக்க ஆதிராவிற்கு தெளிவாய் புரிந்தது இது அந்த ஏவல்களின் வேலை தான் என்று .
அவள் எவ்வளவோ போராடிப்பார்க ஆராதனா அவளின் கையிலிருந்து திமிறிக்கொண்டு இருந்தாள்.அவளின் கண்களிற்கு ஆதிராவின் தோற்றம் ஒரு புற முகம் எரிந்து போய் இருக்க ஒரு புற முகம் அழுகி போய் இருக்க தலை முடிகள் புழுக்களை தெரிய ஓர் பயங்கர பேயை போல் தெரிந்தாள்.அதனால் பதற்றத்தில் மதி இழந்து அவள் கையை உருவப்போக அவள் தன் கையை விட்டால் நிச்சயம் அந்த ஏவல்கள் அவளை பிடித்துக்கொள்ளும் என்றும் அவளின் உயிரே பறிபோக கூடும் என்று அறிந்தவள் அவளின் தோளை இறுகப்பற்றி தன்னோடு சேர்த்தணைத்தவள்
ஓம் நம சிவாய ஹரி ஓம் நாராயணாய ஓம் நம சிவாய ஹரி ஓம் நாராயணாய ஓம் நம சிவாய ஹரி ஓம் நாராயணாய என்று இடை விடாது சிவன் ஸ்லோகத்தையும் விஷ்ணுவின் ஸ்லோகத்தையும் மாற்றி மாற்றி சொல்ல அனிச்சையாய் ஆராதனாவும் அந்த மந்திரத்தை கூற ஆரம்பித்தாள்.
பின் இரண்டு நிமிடத்தில் அவளது தோற்றம் மறுபடியும் மனிதனைபா போல் தெரிய ஆராதனா அப்பொழுதே தெளிந்தால் .அவள் இயல்பாகி விட்டால் என்பதாகி உணர்ந்தவள் அவளை முறைக்க ஆராதனாவோ சமாளிக்க தெரியாமல் ஈஈ என்று இளித்து வைத்தால் .தலையில் அடித்த ஆதிரா அப்பொழுதே நீர்வீழ்ச்சியின் இரைச்சல் கேட்பதையும் தன் முகத்தில் மழை சாரல் போன்று நீர்த்துளிகள் விழுவதையும் அப்பொழுதே உணர்ந்தாள் .
இருவரும் அந்த குளுமையையும் இரைச்சலையும் உணர்ந்தவர்கள் திரும்பி பார்க்க அந்த ஓங்கி உயர்ந்து இருபது வருடங்களுக்கு முன் தெய்வீக ஒளியால் நிரம்பி வழிந்திருந்த அவ்வருவி இன்றோ கருமை நிறம் படிய விழுதுகள் கொள்ளிவாய் பிசாசுகள் மண்டியிட்டிருப்பதை போல் தோன்ற மொத்தமாய் தீய சக்திகளின் ஆளுகைக்குள் இருப்பதற்கு சாட்சியாய் ஒளி இழந்து இருக்க அதன் பாக்கவாட்டில் அமைந்திருந்த அம்மன் சிலையிலிருந்து அம்மனின் கண்களோ கருவிழிகள் மேலே பார்க்குமாறும் கரையான் அறித்தும் இரண்டு மூன்று பாம்புகள் சூழ்ந்தும் தனது தெய்வீக கலையை இழந்திருந்தது .
பின் அந்த அம்மன் சிலையை பார்த்துக் கொண்டவர்கள் கைகளை கோர்த்தவாறே அதன் அருகில் சென்றனர் .இங்கே குகை போல் ஏதும் இருக்கிறதா என்று கண்ணில் காட்டம்மா என்று இருவரும் அதை தொழ ஆராதனாவின் கைகளில் மேலே விழுதில் தொங்கிக்கொண்டிருந்த பாம்பு அவள் மேல் விழ பதறியபடி அவள் கைகளை அப்படியும் இப்படியும் ஆட்ட அவள் கை அங்கிருந்த அம்மன் சிலையின் கிரீடத்தில் இருந்த ஓர் பச்சை நிற கல்லில் அமிழ்ந்த திடீரென அந்த அமன் சிலை விலகி ஒருவர் செல்லும் அளவு படிக்கட்டுகள் கொண்ட பாதையினை உருவாக்கியது .
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஆதிராவும் ஆராதனாவும் பின் ஒரு கட்டையை எடுத்து அதில் உலர்ந்த கொடியின் வெளிப்புறத்தை துணியினை போல் சுற்றியவர்கள் சிக்கி முக்கி கல்லை கொண்டு தீ மூட்டி பந்தம் போல்
ஆக்கி உள்ளே ஒருவர் பின் ஒருவராய் இறங்கினர் இத்தனை நடக்கும் பொழுதும் இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் விடவில்லை .
அந்த பாதை சென்றுகொண்டே இருக்க என்ன போய்கிட்டே இருக்கு என்று யோசித்து ஆதிரா கீழே காலை வைக்க போக திடீரென முன்னே பார்த்த ஆராதனா அவளை பிடித்து பின்னே இழுத்தாள் .அவள் இழுத்ததும் தடுமாறியவள் "என்ன அக்கா ?"என்க
அவளோ "லூசு முன்னாடி பாக்காம தேமேன்னு போய்ட்டு இருக்க. என்ன இருக்குனு பாருடி "என்க அவள் கீழே பார்க்க அவள் காலிற்கு சரியாய் கீழே தகிக்கும் தனலென நெருப்பு குழம்பு ஆறென ஓடிக்கொண்டிருந்தது .
அதை தாண்டி ஓர் இரும்பு கதவு தென்பட அதை எப்படி அடைவதென்று அறியாமல் இருவரும் விழி பிதுங்கி நின்றனர் ஏனெனில் அந்த ஆறு பத்தடி அகலமாவது இருக்கும் குதித்தெல்லாம் செல்ல முடியாது தவறினால் பொசுங்கிவிடுவார்கள் .
அவர்கள் விழி பிதுங்கி நிற்க அப்பொழுதே அந்த பாதையை உற்று பார்த்தனர் அந்த நெருப்புக்குழம்பின் நடுவே பாதையை போல் கற்கள் ஆங்காங்கே பதிந்திருந்தது .ஆதிரா "ஹப்பா வழி இருக்கு "என்று அதில் வைக்க போக
ஆராதனாவோ அவளின் தலையில் கொட்டியவள்"லூசு கல்லு இருந்தா கால வச்சுருவியா ?அறிவுக்கொழுந்து" என்று அவர்களின் முன் இருந்த மூன்று கற்களில் ஒரு கல்லில் ஆதிராவின் கையிலிருந்த கொள்ளிக்கட்டையை அழுத்தி ஊன அடுத்த நிமிடம் அந்த கல் நெருப்புக்குழம்புக்குள் மூழ்கியது .
அதை பார்த்து திகைத்த சகோதரிகள் "இப்போ என்ன செய்ய ?"என்று யோசிக்க அப்பொழுதே கவனித்தார்கள் அந்த கற்களின் மேல் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது .
அதை வெளிச்சத்தில் பார்க்க அதில் சில பல வரைபடங்கள் இருக்க மூன்று கல்லில் ஒரு கல்லில் மட்டும் எங்கோ சம்ஹித்த வம்சத்தின் லட்சினை பொறிக்க பட்டிருந்தது .அதை பார்த்து ஒருவரை மற்றொருவர் கூர்ந்து பார்த்தவர்கள் அந்த கல்லில் இன்னொரு கட்டையை வைக்க அந்த கல் மூழ்கவில்லை திடமாய் இருந்தது .அதில் இருவரும் காலை வைத்து இவ்வாறே அந்த லட்சினையை கண்டுபிடித்து கண்டுபிடித்து காலை வைத்து அந்த நெருப்புப்படுகையை கடந்தனர் .
நெருப்பு படுகையை கடந்தவர்கள் முன்னே பூதாகாரமாக நின்றது ஓங்கி உயர்ந்த இரும்புக்கதவொன்று .அதை இருவரும் தள்ளப்பார்க்க தள்ளமுடியவில்லை அந்த கதவில் ஏதோ எழுத்துக்கள் தாறுமாறாக இருக்க ஒவ்வொரு கதையிலும் ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் அப்படியே ஒவ்வொரு நிறத்தில் இருந்தது.அவை என்ன என்று புரியாது அந்த கதவையே வெறித்தனர் சகோதரிகள் இருவரும்,அந்த கதவின் ஒருபக்கத்தில் இவர்கள் அந்த மாயமுடிச்சு என்னவென்று தெரியாது குழம்பி நிற்க அதன் உள் பகுதியிலோ விழுதுகள் மண்டிக்கிடந்த இருள்சூழந்த அறையில் ஓர் பெட்டிக்குள்ளிருந்து தட தடவென்று சத்தம் காதை பிளக்க சிறிது சிறிதாய் அந்த மூடி மேலெழும் நேரம் ஒளி கசிந்தது .
sorry guys inniku updateaah thandhu tholla panradhuku indha kadhaya naalaikulla mudika vendiya kattaayathul airukken innum 2 chapters +epiloguela kadha mudunjurum mostly naalaike mudunjurum .kochukaama padingo hehehe
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro