20
திருமணத்தில் ஆருத்ராவின் விருப்பத்திற்கு மாறாய் எந்த முடிவும் எடுக்க மாட்டோம் என்று வந்தியத்தேவரும் வானமாதேவியும் திட்டவட்டமாய் கூறிவிட கனன்ற கோபத்துடன் அவர்களிடம் இருந்து விடை பெற்று வெளியே வந்த மேகதூதன் தன் தந்தையின் புறம் திரும்பியவன் "தந்தையே அவளின் விருப்பத்தோடோ விருப்பமின்மையோடோ அவளோடான எனது திருமணம் நடந்தே தீர வேண்டும் "என்க
அவனின் தந்தையோ "மூடனை போல் பிதற்றாதே மேகதூதா அவளிற்கு விருப்பம் உண்டென்றால் எமக்கும் மட்டற்ற மகிழ்ச்சியே எனில் அவளின் விருப்பமின்மையோடு திருமணம் நடக்க உமது தமக்கையும் அவளின் மணாளனும் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டார்கள் "என்க
மேகதூதனோ "எமக்கு எமது விருப்பமே முதன்மையானது தந்தையே அப்படி ஒரு கால் அவள் எமக்கு கிடைக்காது போனால் எமக்கு கிடைக்காததை இவ்வுலகில் எவனிற்கும் கிடைக்க விடாது செய்யவும் தயங்க மாட்டேன் "என்றவன் தன் புரவியில் ஏறி பறந்துவிட்டான் .அவன் செல்வதையே ஒரு வித திகிலோடு பார்த்திருந்தனர் பெற்றோர் இருவரும் .
அன்றைய இரவு அனைவரும் உணவிற்காக ஒன்று கூடி இருக்க ஆதேஷை மேசையில் அமர வைத்தவாறு ஊட்டிக்கொண்டே தன் உணவை உண்டுகொண்டிருந்த ஆருத்ராவை நோக்கிய வந்தியத்தேவன் "என்னம்மா ஆருத்ரா உனது திருமணத்தை குறித்து என்ன முடிவெடுத்திருக்கிறாய் ?"என்க
அவள் உணவை எடுத்த கை அந்தரத்திலேயே நிற்க "அது ....அது தமையனே "என்க
உண்பதை நிறுத்திவிட்டு ஒரு குறுநகையோடு அவளை கண்ட வந்தியத்தேவன் "சிறுவயதில் உனக்கு பேச்சு வரும்முன்னே உனது அழுகையின் பாகுபாட்டை அறிந்து உன்னை வளர்த்தவனம்மா நான் உனது மனதை பற்றி அறியாமல் இருப்பேனா?"என்க
அவள் வானமாதேவியை அதிர்ச்சியோடு நோக்க அவரோ அதே அதிர்ச்சியோடு எனக்கு எதுவும் தெரியாது என்று தலை அசைக்க அவர்களின் சம்பாஷணைகளை கண்டுகொண்ட வந்தியத்தேவன் "அங்கே என்ன ரகசிய விவாதம் புரிகின்றீர்கள்? "என்க
ஆருத்ரா அவரின் புறம் திரும்ப" யாரந்த ஆடவன் எமது தங்கையையே காதல் வலையில் வீழச்செய்தவன் ?"என்க
அவளோ வெட்கத்தில் தலையை தாழ்த்தியவள் "அவர் நாமம் விஷாகன் அண்ணா என்னுடன் மருத்துவம் பயின்றவர் .முதலில் நட்பாய் பழகிய எமது உறவு இரண்டு வருடங்களுக்கு முன் காதலாய் மலர்ந்தது .அவரிற்கு அன்னை தந்தை உறவுகள் என யாரும் இல்லை .இம்முறை என்னுடன் நமது ராஜ்யத்திற்கு வருவதாய் கூறி இருந்தார் எனில் நான் தான் உம்மிடம் சிறிது காலங்களிற்கு பின் கூறி சம்மதம் பெற்றபின் அவரை அழைக்கும் எண்ணத்தில் இருந்தேன்.அவரை அழைக்கவா தமையனே? "என்று தயக்கமாய் வந்தியத்தேவரின் முகத்தை ஏறிட
அவரோ சிறு சிரிப்போடு அவள் அருகில் வந்தவர் அவள் தலையை ஆதூரமாய் வருடியவர் "அவரை நமது ராஜ்யத்திற்கு விரைந்து வரச்சொல்லம்மா எமது செல்ல தங்கையின் மணாளனை காண ஆவலாய் உள்ளேன் "என்க
அவளோ முகத்தில் பிரகாசத்தை ஒளிரவிட்டவள் அவர் கழுத்தோடு தன் கைகளை கோர்த்து கன்னத்தில் மகிழ்ச்சியில் முத்தமிட்டவாறு "நன்றி தமையனே "என்று துள்ளி குதித்து ஓடிவிட்டாள் .
பின் அடுத்தநாளே விஷாகனிற்கு கடிதம் வரைந்தவள் அவனின் வரவை நோக்கி ஆவலோடு காத்திருக்க அடுத்து இரண்டு நாட்களில் வானமாதேவியின் பெற்றோர் அவர்களின் முடிவை அறிந்துகொள்ள வேண்டி வந்திருக்க மேகதூதனோ இரண்டில் ஒன்றை பார்த்துவிடும் நோக்கோடு வந்திருந்தான் .
உள்ளே வந்தவர்களை முகம் மலர வரவேற்ற வந்தியத்தேவன் அவர்களை அரியாசனத்தில் அமர சொல்ல தயக்கமாய் அமர்ந்தவர்கள் எப்படி பேச ஆரம்பிப்பது என்று யோசிக்க மேகதூதனோ பொறுமை இழந்து இருக்கையில் இருந்து எழுந்தவன் "மாமா முடிவாக என்ன கூறுகிறீர் ஆருத்ராவிற்கும் எனக்குமான திருமணம் எப்பொழுது "என்க
வந்தியத்தேவனோ அவனை உறுத்து நோக்கியவாறு "உனக்கும் அவளிற்குமான திருமணமா ? மன்னிக்க வேண்டும் மேகதூதா எனது தங்கை வேறு ஒருவரை மனதார நேசிக்கின்றாள் எனவே இந்த திருமணம் நடைபெறாது "என்க
உச்சக்கட்ட கோபத்தை அடைந்தவன் "என்ன யாரை கேட்டு முடிவெடுக்கின்றீர் ?"என்க
வாசலில் ஆருத்ராவின் குரல் கேட்டது "யாரை கேட்க வேண்டுமென்கிறீர் ?"என்று
அவளின் குரல் கேட்டு கண்கள் சிவக்க அவள் அருகில் சென்றவன் அவள் முகத்திற்கு மிக நெருக்கத்தில் குனிந்து அடக்கப்பட்ட கோபத்துடன் அழுத்தமான குரலில் "என்னை கேட்க வேண்டும் .சிறுவயதில் இருந்து ஆருத்ரா ஆருத்ரா என்று உன் மேல் பித்து கொண்டு உடலில் ஒவ்வொரு நாடி நரம்பும் உன் பெயர் ஜபிக்க உன்னை மணமுடிக்கும் நாளிற்காக காத்திருந்த என்னை கேட்க வேண்டும் "என்க
அவளோ நேரிடையாய் அவன் கண்ணிற்கு கண் நோக்கியவள் "எனக்கு உன் மேல் அத்தகைய எண்ணம் ஏதும் இல்லை மேகதூதா. என் மனம் வேறொருவரின் சொந்தம் ஆன அந்த நொடியே யான் மனதளவில் அவரின் மனைவி ஆவேன். மாற்றான் மனைவியை மணமுடிக்க எண்ணாதே "என்க
மேகதூதனோ கட்டுக்கடங்காத கோபம் கொண்டவன் சற்று நேரம் வேறுப்புறம் வெறித்துவிட்டு" எனில் நீ உயிருடன் இருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லையடி "என்று தன் இடையிலிருந்த வாளை உருவி சட்டென அவள் கழுத்திற்கு வீச ஆருத்ராவோ சுதாரித்து கீழே குனிந்தவள் அவனிற்கு பின் புறம் சென்று நிற்க தனக்கு பின் புறத்தில் திரும்பியவன் ரௌத்திரமாய் அவளை நெருங்க தன் காலால் அவனின் கையிலிருந்த வாளை அவள் எத்த அது அவன் கையை விட்டு பறக்க சுதாரித்து அவன் எழும்முன் அவன் கழுத்திற்கு குறுக்கே அவள் கைகளின் பிடியில் இருந்ததவன் வாள்.
அது வரை பார்வையாளனாக தனது தங்கையே சமாளித்துக்கொள்ளட்டும் என்று பார்த்துக்கொண்டிருந்த வந்தியத்தேவன் காவலர்களே என்று உரத்த குரலில் அழைத்தவர் இருவர் உள்ளே வரவும் "இளவரசியை தாக்க முயன்ற குற்றத்திற்காக இவனை நம் அரசவைக்கு அழைத்துவாருங்கள் .இவனுக்கான தண்டனையை யாம் அங்கு அமல்படுத்துகின்றோம் " என்க அடிபட்ட வேங்கையாய் ஆருத்ராவையே முறைத்துவிட்டு நின்றான் மேகதூதன் .
அவனை சளைக்காத பார்வை பார்த்தவள் வானமாதேவியின் புறம் திரும்ப அவரின் கலங்கிய முகம் அவளிற்குள் ஏதோ செய்ய வந்தியத்தேவனிடம் திரும்பியவள்"தமயனாரே அவனை விட்டுவிடுங்கள் என்னவென்றாலும் அண்ணியாரின் இளவனவன்.இந்த பிரச்சனையை இத்தோடு விட்டுவிடுங்கள் "என்க
தங்கையின் சொல்லிற்கு கட்டுப்பட்டவர் காவலர்களை நோக்கி கண்ஜாடை காட்ட அவர்கள் அவனின் தோளை விட்ட அடுத்த நொடி ஆருத்ராவை ஓர் தீர்க்கமான பார்வை பார்த்தவன் "நீ என்னிடம் இருந்து தப்ப முடியாதடி "என்பதை போல் பார்த்துவிட்டு அங்கிருந்து விறு விறுவென வெளியேறியவன் தன் புரவியில் ஏறி காட்டிற்குள் சென்று மறைந்தான் .
அவனின் பெற்றோர் அவனின் இச்செயலிற்கு மன்னிப்பு கோர மனமிரங்கிய வந்தியத்தேவன் ஆருத்ராவின் திருமணத்தை பற்றி கூறியவர் அவர்களை முறைப்படி வந்து அழைப்பதாகக் கூறி வழி அனுப்பி வைத்தார் .
அவர்கள் அங்கிருந்து அகன்றதும் வந்தியத்தேவரும் அங்கிருந்து அகன்றுவிட ஆருத்ராவின் அருகில் வந்த வானமாதேவி கலங்கிய கண்களோடு அவள் கையை பற்றியவர் "நன்றி ஆருத்ரா "என்க
அவளோ அவரின் கையை பற்றியவள் "அண்ணி என்ன கூறுகின்ரீர்? என்னிடம் தாம் நன்றி கூறுவதா வேண்டாம் அண்ணி "என்று அவர் கண்ணீரை துடைக்க
அவளை நோக்கிய வானமாதேவி "உனக்கு அவன் செய்த காரியத்தால் கோபம் எழவில்லையா ஆருத்ரா ?"என்று வினவ
அவளோ "எனக்கு எந்த கோபமும் இல்லை அண்ணியாரே வருத்தம் தான் இதை இவர் சற்று முன்னே கூறியிருந்தால் இத்தனை குழப்பங்கள் வந்திருக்காது "என்று கூறி புன்னகைக்க
அவளின் நெற்றியில் முத்தமிட்டவாறு "எப்பொழுது உன் மனம் கவர்ந்தவர் வரவிருக்கிறார் ?"என்று கேட்க
அவளோ சிரித்தவள் "இன்று மாலை வந்துவிடுவார் அண்ணியாரே" என்க அவளை நோக்கி சிரித்தவாறு தன் வேலைகளை கவனிக்க சென்றார் .
அன்று மாலை சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் அந்த சூரியனின் ஒளியை தன் முகத்தில் கொண்டவன் போல் அவ்வரண்மனைக்கு வந்திறங்கினான் விஷாகன் .பார்ப்போரை வசீகரித்து ஆண்களையும் இருமுறை பார்க்க வைக்கும் முகம், முகத்தில் உறைந்திருந்த புன்னகை என்று வந்திறங்கியவனை பார்த்ததும் அனைவருக்கும் பிடித்துப்போக வந்தியத்தேவருக்கு ஏனோ அவனை பார்க்கையில் ஒரு சிறு நெருடல் மனதிற்குள் உதித்தது .
பின் தன் தங்கையின் ஆனந்தம் நிரம்பி வழியும் முகத்தை பார்த்தவர் தனது மனதின் நெருடலை புறம் தள்ளி விட்டு அவனை வரவேற்றவர் அவனின் பின்னே இருவர் வந்திருப்பதை குழப்பத்துடன் பார்க்க ஆருத்ராவே அவர்களை அறிமுகப்படுத்தினாள் "தமயனாரே இவள் மீனாட்சி என்னுடன் பயின்றவள் இது அவளின் கணவன் இப்பொழுது தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது ."என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்.பின் அனைவரும் உள்ளே செல்ல ஜாதகம் சரி பார்க்கப்பட்டு அவளிற்கும் விஷாகனிற்கும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது .
இங்கே திருமண ஏற்பாடுகள் கோலாகலமாய் நடக்க அன்று அவசரமாய் வெளியே சென்ற மேகதூதனை எவரும் தேடும் முனைப்பில் இல்லை .தனது புரவியை எடுத்துக்கொண்டு அது செல்லும் வழியிலேயே தானும் சென்றவன் அது களைத்து ஓய்ந்து நிற்கும் வரை தன் சிந்தனையில் இருந்து வெளி வரவே இல்லை .
அதன் பின் தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்க்க அவ்விடம் கருமையின் ஆளுகைக்குள் உட்பட்டு ஆதவன் மறைந்து பல நாழிகைகள் ஆகி இருந்ததை உணர்தியது .எந்த இடமென்றும் புரியவில்லை தனது கோபத்தில் தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி தலையில் அடித்துக்கொண்டவன் அங்கே தன் பார்வையை சுழல விட அங்கே ஓர் சிறு குகை இருந்ததை பார்த்தான்.பின் இன்றிரவு அங்கே தங்கிவிட்டு பொழுது புலர்ந்ததும் ராஜ்ஜியம் திரும்பிவிடலாம் என்றெண்ணியவன் அங்கே அருகிருந்த சுள்ளிகளை வைத்து நெருப்பு மூட்டி அதன் அருகே அமர ஆருத்ரா பேசிய வார்த்தைகளும் அவள் முடியாது என்று கூறியதும் கண்முன் வந்து காதுகளில் ரீங்காரமிட்டு அவள் மேல் கட்டுக்கடங்காத கோபம் எழ அவளை எப்படியும் பழிவாங்கிவிட வேண்டுமென்று நினைத்தவாறே அமர்ந்திருந்தான்.
சற்று நேரம் அந்த நெருப்பு ஜுவாலையையே வெறித்தபடி உட்கார்ந்திருந்தவனின் காதுகளில் விசித்திரமான சத்தங்கள் விழா முதலில் கவனிக்காது விட்டவன் பின் நேரம் செல்ல செல்ல அந்த சத்தங்கள் அதிகமாவதையும் அருகில் ஒரு காலடி சத்தம் கேட்பதையும் உணர்ந்தவன் தன் இடையில் இருந்த வாளை கையிலேந்தி "யாரது ?"என்க பதிலே வரவில்லை .
தான் அமர்ந்திருந்த இடத்தில இருந்து எழுந்தவன் குகைக்கு வெளியே சென்று அங்கும் இங்கும் பார்க்க அவன் பின்னே ஓர் நிழலாடுவதை உணர்ந்தவன் தன் வாளோடு பின்னே சுழன்று எதிரிருந்தவனின் கழுத்திற்கு நேராய் வைத்து" யார் நீ?" என்க அந்த இடத்தில் அப்பொழுது வரை தென்றலாய் வீசிக்கொண்டிருந்த காற்று புயலென உருமாறி வேகத்தோடு தாக்க எதிரிருந்தவனின் முகத்தை மறைத்திருந்த துணி விலக அவன் முன் தன் கோரமுகம் தெரிய சிரித்தவாறு நின்றிருந்தான் சம்ஹித்த வம்சத்தின் குலத்தலைவன் நாகனேயன்.
அவனை கண்டு திகைத்தவன் பின் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தியவாறே "நீ சம்ஹித்த வம்சத்தின் தலைவன் அன்றோ எம்மை காண வேண்டி வந்ததன் காரணம் என்ன ?"என்க
நாகனேயனோ அக்காடே அதிரும் அளவு சிரித்தவன் " எதிரியின் எதிரி நண்பன் அன்றோ மேகதூதா?"என்க
மேகதூதன் சிறிது சிறிதாய் அவன் கழுத்திலிருந்த தனது வாளை எடுத்து தன் இடையில் சொருகியவன் "விளங்கவில்லை "என்க
அவனோ "உன் காதலை மறுத்த ஆருத்ராவை பழிவாங்க நீ துடிக்கிறாய் எனது எதிரிக்குலமாகிய ஆதவக்குலத்தில் தோன்றி எமது கையை துண்டித்த அவளின் சிரசை துண்டிக்க யான் துடிக்கிறேன் ஆக உன் நோக்கமும் என் நோக்கமும் ஒன்றன்றோ .எனவே நாம் இணைந்து பணியாற்றுவதில் பிழை இல்லையே"என்க
மேகதூதனின் மதியை அவன் ஆருத்ராவின் மேல் கொண்டிருந்த வன்மம் மறைத்துவிட அவளை பழிவாங்கிட அவனோடு சேர்ந்திட எண்ணியவன் பின் "எனில் அவளின் திருமணத்தை தடை செய்ய சகாயம் செய்திடுங்கள் "என்க
அவனோ அந்த காடே அதிரும் அளவு சிரித்தவன் "முட்டாளே அவளின் திருமணம் வேற்றுக்குலத்தானோடு தான் நடந்திட வேண்டும் "என்க
மேகதூதனோ சினம் கொண்டு "அவளின் திருமணம் முடிந்து அவளின் நல்வாழ்வை காண்பதால் எனக்கென்ன லாபம் ?"என்றிட
அவனின் தோளில் கை வைத்த நாகனேயன் "காரணம் உண்டடா .அவள் பிறந்த லக்கினமும் நேரமும் அவளிற்கு பிறப்பிலேயே அதீத சக்திகளை கொடுத்துள்ளது .அது அவளோடு சேர்த்து அவளின் குலத்தையும் காத்து வருகின்றது எனில் எப்படிப்பட்ட சக்திக்கும் ஒரு தடை இருக்கும் அப்படிப்பட்ட தடையே இருபது வருடங்களுக்கு ஒருமுறை வரும் சிவனின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி .அன்றைய நாளில் சக்தியின் அம்சம் அனைத்தும் சிவனின் பாதத்தில் சேர்ந்திட சக்தியின் அம்சம் பொருந்தி பிறந்த அனைவரும் தமது மாந்த்ரீக ஷக்தியையும் உடல் வலிமையையும் பாதிக்கு பாதி இழந்திருப்பர்.அப்படிப்பட்ட அந்த இரவு வருவதற்கு இன்னும் ஆறு வருடங்கள் உள்ளன "என்க
மேகதூதனோ "எனில் அப்படி ஓர் தாக்குதலை தாம் அவளிற்கு எட்டு வயதிருக்கையில் தொடுத்த போதோ ஒன்றும் நடக்கவில்லையே அவளின் கையால் தமது கை துண்டிக்க பட்டது தானே நடந்தது "என்க
அன்றைய தினத்தின் நினைவில் இன்றும் அந்த தலைவனின் கண்கள் கோவைப்பழமாய் கோபத்தில் சிவந்தது தன்னை கட்டுப்படுத்தியவன் "அதே சந்தேகம் எனக்கும் உதித்தது பின் அவள் ஜாதக அமைப்பை யான் மறுபரிசீலனை செய்த போதே ஒன்றை அறிந்தோம் .ஆருத்ராவிற்கு வேற்று குளத்தை சேர்ந்தவனோடு திருமணம் நடந்து அவளிற்கு மகவுகள் பிறந்தால் அவளின் மொத்த தெய்வீக சக்திகளும் அவளின் மகவுகளிற்கு இருமடங்காக சேர்ந்து விடும்.குழந்தை பேரிற்கு பின் ஆருத்ரா இப்பொழுதை போல் தெய்வீக அம்சம் பொருந்திய மாந்திரீகத்தில் சிறந்தவள் அன்று சக மனுஷி மாத்திரமே .அப்படிப்பட்ட சமயத்தில் அவள் மீதும் அவளின் குலத்தவர் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டால் ஆதவக்குலம் அழிந்து சம்ஹித்த வம்சத்தின் ஆட்சி நிறுவப்படும் தெய்வசக்தி மடிந்து அமானுஷ்ய சக்திகள் உலகில் தாண்டவமாடும் .அற்ப மானுடனாய் இருக்கும் நீ எனது வாரிசாக அறிவிக்கப்பட்டு சம்ஹித்த வம்சத்தின் அரசனாய் மாறுவாய்."என்று கூறி விட்டு சிரிக்க
மேகதூதனிற்கு அவளின் மேல் கொண்ட வஞ்சமும் இப்பொழுது புதியதாய் தோன்றிய அதிகார ஆசையும் மூளையை மழுங்கடிக்க விஷமச்சிரிப்போடு அவன் கையை பற்றியவன் "இனி ஆட்டத்தை நாம் தொடரலாம் "என்க அங்கே தன்னை சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலைகளை பற்றி ஏதும் அறியாது திருமணக்கனவுகளோடு தயாராகிக்கொண்டிருந்தாள் ஆருத்ரா .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro