13
அவர் கூறிய வார்த்தைகளையே உருபோட்டுக்கொண்டு வந்த ஆதிரா வீட்டிற்கு வந்ததும் மீண்டும் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். அவளிற்கு மனது ஒரு நிலையில் இல்லாது தவிக்க இன்று காலையிலிருந்து நடந்தவற்றையெல்லாம் அசைப் போட துவங்கினால் .
என்ன தான் நடக்குது இந்த ஊருல ?என்றவள் தன் கையை எடுத்து அந்த பச்சை குத்தி இருந்த இடத்தை பார்த்தாள் அதை தன் இன்னொரு கையால் வருடியவளிற்கு அந்த பெண்மணி தன் கையை பார்த்ததும் ஏதோ கூற வந்து பின் நிறுத்தியது நினைவு வந்தது .
அவர் கண்களில் அந்த நிமிடம் தெரிந்த உணர்ச்சிகளோ ஆயிரம் கதைகள் கூறியது ஆச்சர்யம் ,மரியாதை ,நிம்மதி ,அச்சம் என கலவையான பார்வை. ஏன் என்று ஒன்றும் விளங்வில்லை அவளிற்கு நேற்று கோவிலில் தன் கையில் ஏற்பட்ட அதீத வலி ,அதன் பின் அந்த புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் போதே எரிந்து போனது ,தனக்கு வந்த கனவு என்று ஒவ்வொன்றாய் நினைவுகூர்ந்தவளின் சிந்தனையில் அந்த கனவில் ஏதோ ஒரே அருவி தோன்றியது நினைவில் எழ உயிர் கொல்லும் அருவியென பெயர் பெற்ற அருவி அது தானோ என்ற எண்ணம் துளிர்த்தது அவளிற்கு .
பின் அவள் காதில் கேட்ட வரிகள் காதில் எதிரொலித்துக்கொண்டிருந்தது
முடிவின் மர்மத்தை அவிழ்க்க
ஆரம்பத்தின் எல்லைக்கு சென்றிடு
இங்கே நடந்துகிட்டு இருக்க எல்லாத்துக்கும் முடிவு தெரியணும்னா இந்த பிரெச்சனைகள் ஆரம்பிச்ச அந்த அருவிக்கரைக்கு போகனும் .போவேன் நாளைக்கே கிளம்புறேன்.ஆனா என்னோட கனவுல வந்த அந்த ஆள் யாரு? அவர் கையில இருந்த கொழந்த யாரு? ஒண்ணுமே புரியலையே ஆண்டவா என்று நினைத்தவள் கண்கள் அங்கே அவள் மேஜையில் இருந்த ஆதேஷின் மணிப்பர்சிற்கு சென்றது .
இன்று ஊரிலிருந்து நடந்து வருகையில் அவனது purse கீழே விழுந்து விட்டது அதை அவனிடம் கொடுக்க வேண்டுமென்று நினைத்திருந்தவள் அப்படியே மறந்து போய் விட்டிருந்தாள்.சரி நாளை கொடுத்துக்கொள்ளலாம் என்று மேஜையில் வைக்க போக ஏனோ உள்ளுணர்வு உந்த அந்த pursai திறந்தாள் ஆதிரா அதில் புகைப்படம் வைக்கும் இடத்தில சிரித்தமுகமாய் இருந்த ஆதேஷின் புகைப்படம் இருக்க அதை பார்த்தவள் முகமும் புன்னகையை தத்தெடுத்துக்கொண்டது .
அதை வருடி முத்தமொன்றை கொடுத்தவள் பர்சிலிருந்து அந்த போட்டோவை மட்டும் எடுத்து தனியாய் தன் பர்சில் வைத்துக்கொண்டால்.பின் என்ன வைத்திருக்கிறான் என்று பார்க்க அதில் கார்டயும் பணத்தையும் தவிர்த்து ஏதுமில்லை .
ஒன்றுமில்லை என்று மூடி வைக்க போக அவனது பர்சிலிருந்து கீழே விழுந்தது ஓர் காகிதம்(அந்த முதியவரை ஆதேஷ் பார்த்தபோது கீழே இருந்த காகிதம்) .அதை குனிந்து எடுத்தவள் அதை பிரித்து பார்க்க அதிலோ எழுத்துக்கள் ஏதுமின்றி வெத்து காகிதமாய் இருந்தது .
வெறும் பேப்பரை எதுக்கு வச்சிருக்காரு என்று அவள் நினைத்துக்கொண்டிருக்கையிலேயே கதவு தட்டும் சத்தம் கேட்க அந்த பேப்பரை மேஜையில் வைத்தவள் pursai cupboardil போட்டால் .
பின் விரிந்திருந்த தன் தலை முடியை தூக்கி கொண்டை போட்டவள் கதவை திறக்க அங்கே கைகளை கட்டியவாறு நின்றுருந்தான் ஆதேஷ் .
அவள் சிறு தடுமாற்றத்துடன் "உள்ள வாங்க ஆது" என்க
அவனோ உள்ளே வந்தவன் அவள் முகத்தை கையில் ஏந்தி "ஏன் ஆரா ரெண்டு நாளா ரொம்ப டிஸ்டர்ப்டாவே தெரியுற ?"என்க
அவளோ வேறு புறம் திரும்பியவள்"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆது சும்மா ....."என்க
அவளது தோளை பற்றி தன் புறம் திருப்பியவன் "என்னாச்சு என் கண்ணை பார்த்து சொல்லு "என்க
அவளிற்கோ அவன் கண்ணை பார்த்ததும் கண்ணீர் நிறைய துவங்கியது "ப....... பயமா இருக்கு ஆது "என்றவள் இங்கே வந்ததிலிருந்து நடப்பவை அனைத்தயும் கூறியவள் "எனக்கு இது வரைக்கும் இப்டி அனுபவம் இருந்ததே இல்ல .எல்லாருக்கும் அப்டி தான் இருக்கானு பார்த்தா வேதியும் அஜய் அண்ணாவும் நார்மலா தான் இருக்காங்க என்ன சுத்தி என்ன நடக்குது ?எனக்கு என்ன ஆச்சு? எதுவுமே எனக்கு புரிய மாட்டேங்குது ஆது .நா உண்மையாவே அந்த அரண்மனைக்கு போனேனா இல்ல என் கற்பனையா அந்த புத்தகத்தை உண்மையிலேயே நா பாத்தேனா இல்ல என் கற்பனையா சுத்தி நடக்குறதெல்லாம் நெனச்சு பார்த்தா பைத்தியம் புடிக்குற மாறி இருக்கு "என்று கேவ
அவனோ அவள் கண்ணீரை துடைத்து அவளை மென்மையாய் தன் மார்போடு அணைத்துக்கொண்டவன் "எந்த பிரச்னைக்கும் ஒரு solution இருக்கும் ஆரா. அதை எப்படி கண்டுபிடுக்குறதுனு தான் நம்ம யோசிக்கணும் தேவை இல்லாம உன்ன நீயே குழப்பிக்காத எதையும் யோசிக்காம தூங்கு .எந்த சூழ்நிலைலயும் உனக்கு துணையா நா இருப்பேன் "என்று அவள் தலை முடியை கோதியவாறே பேச அவளிற்கு மனதிலிருந்த சஞ்சலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி அப்படியே உறக்கம் கண்களை தழுவிக்கொண்டது .
அவள் தன்னை அணைத்தபடியே உறங்குவதை கண்டவன் சிறு சிரிப்போடு அவளை தூக்கி சென்று கட்டிலில் கிடத்தியவன் போர்வையை போர்த்திவிட்டு மனதில் அவளோடு பேச துவங்கினான் "உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு தான் ஆரா நினைக்குறேன் .ஆனா, அது என்னால முடியாது அண்ட் அதுக்கான நேரம் இன்னும் வரல நீ எப்படி அதை எல்லாம் ஏத்துக்குவன்னும் எனக்கு தெரில. கொஞ்ச நாள் தான் உனக்கு உன்னையே உணர்த்துற நாள் தொலைவுல இல்லடி .அது வரைக்கும் எல்லாம் தெரிஞ்சும் அமைதியா இருக்குறதுக்கு என்ன மன்னுச்சுருடி"என்று அவளோடு பேசியவன் அவள் முன்னேற்றியில் முத்தம் பதித்துவிட்டு அவ்வகையில் இருந்து வெளியேறினான் .
அவன் சென்ற கொஞ்ச நேரத்தில் வெளியே இரவின் இளம் தென்றலின் தாளத்திற்கேற்ப திரை சீலை விலக அந்த ஜன்னலின் வழி நுழைந்த பிறை நிலவின் வெளிச்சம் அந்த மேஜையின் மேல் இருந்த காகிதத்தை தொட்டு தழுவ வெற்றுக்காகிதமாய் இருந்த அதில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒளியுடன் சேர்ந்தொரு ஒரு அடையாளம் வர துவங்க சற்று நேரத்திற்கெல்லாம் ஆதிராவின் கையிலிருக்கும் அதே அடையாளம் அக்காகிதத்தில் தோன்றியது கீழே சூரியகுளத்தின் அடையாளம் என்ற வாக்கியத்துடன் .
இங்கே இவள் நிம்மதியாய் உறங்க அங்கே தீப்பிழம்பை ஒத்த கண்களோடு ஓர் அறையில் பக்கவாட்டு தோற்றம் தெரியுமாறு நின்றிருந்தது மார்த்தாண்டனிற்கு தலைமை உருவம் .பின்னே முழுதும் சால்வையால் போர்த்தப்பட்டிருந்ததால் ஆனா பெண்ணை என்ற பேதம் தெரியாது போக அதன் கையிலிருந்த கூர் நகங்கள் கத்தியை போல் நீண்டிருக்க அது அங்கிருந்த திரை சீலையை விளக்க எதிரே இருந்த மாய திரையில் உறங்கும் ஆதிராவின் பிம்பத்தையே வெறித்துக்கொண்டிருந்தது அவ்வுருவம் ."ஆதிரா...... உன்னை பற்றிய உண்மையை அறிய நீ துடிப்பதும் தவிப்பதும் அட அட அட விருந்தாய் அமைகிறதடி .எனில் என்ன செய்ய நீ உண்மையை அறியும் நாள் உன் மரணசாசனம் எனது கையால் எழுதப்பட்டிருக்கும் நாளாகவே இருக்கும் .பல்லாயிரம் தூரம் கடந்து மங்கலாபுரிக்கு வரவைத்த உன்னை என் வாசஸ்தலத்திற்கு அழைத்து வருவேனடி.அன்றைய சூரியோதயம் ஆதவகுலத்தின் அஸ்தமனமாக அமையும் "என்று கூறி அவ்வறையே அதிரும் வண்ணம் கோரமாய் சிரித்தது அவ்வுருவம் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro