🌻 அழகி 69
அச்சுதனுடன் சென்ற வதனி அன்றைய இரவு தான் குன்னூருக்கு திரும்பியிருந்தாள். ஜெயனுக்கு அவனுடைய புதிய காரான மோனாலிசாவில் மாட்டுவதற்கு ஒரு ஸ்மைலி ஃபேஸ்
கார் டெக்கரும், முகில்ம்மாவிற்கு முகபடாம் மாட்டிய ஒரு யானையின் ஷோ பீஸூம் வாங்கி வந்திருந்தாள்.
"ஹப்பாடா! நம்ம வீட்டுக்கு வந்தாச்சு!" என்று எண்ணிய படி தெருவை அந்தப்புறமும் இந்தப்புறமுமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள்.
"தெருவுல நின்னுக்கிட்டு என்னத்த பராக்கு பாத்துட்டு இருக்க? நான் வண்டிய ஏத்த வேணாமா? உள்ள போயேன்!" என்று வீட்டிற்குள் நுழையும் முன் கடித்தவனுடைய கோபப் பேச்சைக் கேட்டு அழகு காட்டி உதடு சுழித்தாள்.
"கண்ணு.... வாய்யா... வாய்யா; ஊரெல்லாம் நல்லா சுத்திப் பாத்தியா? அங்க நல்லா சாப்டியா?
நீயில்லாம நாலஞ்சு நாளா முகில்ம்மாவுக்கு எதுவும் நல்லாவே இல்லடா தங்கம்! நாங்க அப்பவே சாப்டோம்; நீ சாப்புடுறியாடா?" என்று கேட்ட முகிலமுதத்திடம்,
"வேணாம் முகில்ம்மா! இப்ப தான் டிஃபன் முடிச்சு ஒரு டீயும் குடிச்சுட்டு வந்தேன். அச்சுதன் ஸாரோட ஊரு சூப்பர்! எல்லா இடமும் நல்லா சுத்திக் காட்டுனாங்க; நானும் அங்க உங்களையும் ஜெயனையும் மிஸ் பண்ணுனேன். உங்களுக்கு வாங்கிட்டு வந்த கிப்ட்ட காலையில எடுத்துத் தர்றேன்! இப்ப போய் படுக்கட்டுமா?" என்று கேட்டவளிடம்,
"போய் தூங்குடா; காலையில பாக்கலாம்!" என்று சொன்ன முகிலிடம் குட்நைட் சொல்லி விட்டு படிகளில் ஏறினாள் வதனி.
பாதிப்படிகளில் நின்று அவனை கட்டி அணைப்பதற்காக கையை விரித்தவளிடம்,
"ரெண்டு கையிலயும் பொட்டிய தூக்கிக்கிட்டு வந்துட்டு இருக்கேன்.... கண்ணு தெரியுதா இல்லையா ஒனக்கு?" என்று உறுமினான் ஜெயன்.
"என்ன நம்ம ஆளு..... இதயெல்லாம் எப்பவும் அவந்தான் செய்வான்? இன்னிக்கு நம்ம கேட்டதுனால ஸீன் போடுறானா?" என்று நினைத்து தோள்குலுக்கிக் கொண்டாள்.
"அங்க ரொம்ப ஜாலியா இருந்த போல?" என்று கேட்டவனிடம் புன்னகைத்த படி,
"ஆமா.... அதுக்கு தான என்னை நீ அங்க அனுப்பி வச்ச! ட்ரிப் ரொம்ப நல்லா இருந்தது!" என்றாள்.
"இங்க பாரு ஜெயன்.... கல்யாணத்துக்கு என்னால மூணு நாளு தான் லீவ் போட முடியும்! அதுக்கு மேல எங்கயாவது ரிலேஷன்ஸ் வீட்டுக்குப் போகணும், ட்ரிப் போகணும்னு சொல்லி வேலைக்கு லீவ் போட சொல்லாத......!"
"நாளைக்கு காலையில ஸீட்ல போய் ஒக்காந்தவொடனே எங்க
மேனேஜர் என்னை தனியாக் கூப்ட்டு இப்பல்லாம் நீங்க நிறைய லீவ் எடுக்குற மாதிரி தெரியுது;
வொர்க்ஸ்ல எதுவும் தப்பு பண்ணிடாதீங்க வதனின்னு வார்னிங் குடுத்து அனுப்பப் போறாரு!"
"ஒனக்கும் இப்பல்லாம் உன் வேலையோட ஷெட்யூல் ரொம்ப டைட்டா தான போயிட்டு இருக்கு....? அதுனால ஒருவாரம் லீவ் போட்டு ஊரு சுத்துறதயெல்லாம் நாம கொஞ்சம் தள்ளி ப்ளான் பண்ணிக்கலாம்!" என்று அவனிடம் சொன்ன படி ஊருக்கு கொண்டு போயிருந்த லக்கேஜை பெட்டியில் இருந்து எடுத்து தன்னுடைய கபோர்டில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவளிடம் ஒன்றும் பேசாமல் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையில் இருந்தான் ஜெயன்.
"ஆக்சுவலி...... எதுக்குடா இவன் நம்மள திடீர்னு நம்ம கொலீக் கூட அவர் ஊருக்குப் போயிட்டு வான்னு அனுப்பி வைக்குறான்னு நெனச்சு எனக்கு ஒம்மேல கோபம் தான் தெரியுமா?"
"பட்..... எடமாற்றமா இல்ல வினு அம்மா ரெண்டு பேரையும் போட்டோவுல பாக்காததான்னு தெரியல.... அங்க போனதுல இருந்து எனக்கு ரொம்ப அழுகையே வரல ஜெயன்!"
"அச்சுதன் ஸாரோட வீட்ல எல்லாரும் ஒன்னைய ரொம்ப விசாரிச்சாங்க தெரியுமா? அதுலயும் அவரோட தங்கச்சி இங்க வந்துருந்தப்ப அவங்களுக்கு ஹில்ஸ்ல ஜர்னி ஒத்துக்காம ரெண்டு மூணு தடவ வாந்தி எடுத்தாங்களாம்.... அப்ப நீ கொஞ்சங்கூட அலுத்துக்காம அவங்கள ஸ்பெஷலா கேர் பண்ணிக்கிட்டியாம்! ஜனா மாதிரி ஒரு எக்ஸ்ட்ராடினரியான கேரிங் பெர்ஸன நாங்க பாத்ததேயில்ல; நாங்க அங்க வந்துருந்தப்ப போன டூர்ஸையும் அவரையும் எங்களால மறக்கவே முடியாதுன்னு சொன்னாங்கப்பா!"
"நான் அங்க போயி போட் ஹவுஸ்ல ட்ராவெல் பண்ணுனேன், ரெண்டு மூணு பிக்னிக் ஸ்பாட்ஸ்க்கு போனேன், மீன வாழை இலைக்குள்ள கட்டி வேக வச்சு சாப்டேன்! நீ சொன்ன மாதிரி ஒரு நல்ல ட்ராவல் நம்ம மனச கொஞ்சம் ரிலாக்ஸ்டா ஆக்குது தான் ஜெயன்!" என்று சொன்னவளை ஏற இறங்கப் பார்த்தவன்,
"அடுக்குற வேலையெல்லாம் முடிச்சாச்சா?" என்று கேட்டான்.
"ம்ம்ம்! செஞ்சு முடிச்சாச்சே; அது சரி! ஏன்ப்பா நீ ஒருமாதிரி மூட்அவுட்ல இருக்க? என்னாச்சு?" என்று கேட்டவளிடம் படுக்கையை தட்டிக் காண்பித்தான் ஜெயன்.
"பக்கத்துல வந்து ஒக்காரணும்னா ஒக்காருன்னு சொல்ல மாட்டியாக்கும்? எப்பவுமே இல்லாத மாதிரி நான் வீட்டுக்கு வந்ததுல இருந்து இவ்ளோ அமைதியா இருக்க? பைக்ல வர்றப்ப கூட நாம பேசிக்கவே இல்லையே
இதுல ஏதோ சரியில்லயே?" என்று சந்தேகமாக கேட்ட படி அவனுடைய அருகில் வந்து அவனை உரசிக் கொண்டு அமர்ந்தாள் வதனி.
"நான் இல்லாதப்ப இங்க
முகில்ம்மா, நஸார் ஸார் இல்ல உங்க ட்ராவல்ஸ்ல இருக்குற ப்ரெண்ட்ஸ் இப்டி யார் கூடயாவது ஏதாவது சண்ட போட்டியா?" என்று கேட்டவளிடம்,
"ம்ஹூம்!" என்றான் ஒற்றை வார்த்தையில்.
"பின்ன எங்க ஜனமேஜயன் ராஜாவுக்கு என்ன ஆச்சு?" என்று கேட்டவளின் தோளில் சாய்ந்து கொண்டான் ஜெயன்.
"ஏய்.... எதாவது பிரச்சனயின்னா அத கண்ணப் பாத்து பேசுன்னு எங்கிட்ட சொல்லுவல்ல? அந்த கண்டிஷன் எனக்கு மட்டுந்தானா? நிமிந்து என்னைப் பாருடா!" என்று கேட்டு அவளுடைய வலக்கையால் அவன் தாடையைப் பற்றி அவளிடமிருந்து நிமிர்த்த முயற்சித்தவளிடம்,
"ம்ப்ச்! சும்மாயிருடீ கொஞ்ச நேரம்!" என்று சொல்லி விட்டு மறுபடியும் மவுன விரதத்தை கடைபிடித்தான் ஜெயன்.
"சரி.... சும்மாவே இருக்கேன்! நீ எங்கிட்ட நார்மலா பேசுற வரைக்கும் நானும் ஒங்கிட்ட எதுவும் பேசப் போறதில்ல! இப்டியே ஒருத்தர் மேல இன்னொருத்தர் சாய்ஞ்சுக்கிட்டு எவ்ளோ நேரம் வேணும்னாலும் ஒக்காந்துருக்கலாம்!" என்று அவனிடம் சொன்னாள் வதனி.
"ஒங்கிட்ட தான் ஒண்ணு கேக்கணும் வர்த்தினி!" என்று மெதுவான குரலில் சொன்னவனிடம்,
"கேள்ரா கேளு.... ஹெட்லைட்டு அக்கா கிட்ட தானடா கேக்குற....? வேறயார்ட்டயுமா கேக்குற? இந்த அக்கா மொகத்த பாத்து ஐநூறு ரூபா கேட்ட ஒனக்கு அஞ்சு பைசா கூட குடுக்க முடியலன்னு நெனக்குறப்ப தான்டா தம்பி.....!" என்று வதனி ஒரு நடிகரின் பாணியில் அவனிடம்
கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்க அவளை கோபமாக பார்த்து முறைத்தான் வருங்கால கண்ணாளன்.
"ம்ப்ச்! என்னவோ தெரியல ஜெயன்; நீ இப்டி அமைதியா இருந்தன்னா, ஒன்னைய முடிஞ்ச அளவுக்கு வம்பிழுப்போமேன்னு எனக்கு தோணுது.... நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டவளிடம் தலையை குனிந்து கொண்டு,
"கல்யாணத்துக்கு சமுதாய நலக்கூடம் தான் வர்த்தினி பேசியிருக்கோம்.... நம்ம சொந்தக்காரவுங்க, அமுதாம்மாவுக்கு, எனக்கு வீட்டுப் பக்கத்துல, வேலையிலன்னு பழக்கமானவங்க எல்லாருக்கும் பத்திரிக்க வச்சாச்சு.....!"
"ஒருநா நஸார் மரியத்தோட கோயமுத்தூருக்குப் போயி ஒனக்கு முஹூர்த்ததுக்கு பொடவயும் தாலியும் வாங்கிட்டு வரச்சொல்லி அமுதாம்மா சொல்லி உட்டுச்சு! அங்க போயி பாத்தா முஹூர்த்தப் பொடவயே அம்பதாயிரம், எண்பதாயிரம், ஒரு லச்சம் வரைக்கும் கூட இருக்கும்மா! நா ரெண்டாயிரத்துலதா ஒனக்கு ரெண்டு பொடவ எடுத்தேன்......!"
"என்னடா கல்யாணத்துக்குப் போயி நமக்கு இப்டி வெலயில பொடவ எடுத்துக் குடுத்துட்டானேன்னு நீ எதுவும் யோசிப்பியா வர்த்தினி....? கையில இருக்கிறத மீறி அங்க இங்க கடன வாங்கிட்டு ஒங்கூட வாழ்க்கைய ஆரம்பிக்கும் போதே கடங்காரனா ஆரம்பிக்க எனக்கு மனசு வரலடீ.....!"
"நீ சாதாரணமா பேங்க்குக்கு போட்டுக்கிட்ட போற ட்ரெஸ்ஸே ஆயிரம் ஆயிரத்து ஐநூறுல தான் எடுப்ப.... அப்டிப்பட்ட ஒரு பொண்ணுக்கு கல்யாணத்துக்கு எடுக்குற பட்டுன்னா அதுல என்ன எதிர்பார்ப்பு இருக்கும்? ஸாரிம்மா.... நான் நம்ம கல்யாண ட்ரெஸ்ஸூ விஷயத்துல ஒன்னோட எதிர்பார்ப்ப பொய்யாக்கிட்டேன்னு நெனைக்குறேன்!" என்று சொன்னான்.
"நீ கல்யாணத்துல போட்டுக்குற ட்ரெஸ்ஸ எவ்ளோக்கு எடுத்த ஜெயன்?" என்ற அவளுடைய கேள்வியில்,
"ஆ....ங்! அதான் எப்பவுமே சொல்லுவியே? ஆயிர ரூபாய்க்கு கொறஞ்சு சட்ட எடுக்காதயின்னு.... அதுனால சட்ட ஆயிரம்; பேண்ட் ஆயிரம்னு எனக்கும் ரெண்டாயிரம் ஆச்சு!" என்றான் குன்றலுடன்.
"ஏய்.... எதுக்கெல்லாம் வருத்தப்படுறதுன்னு
ஒரு கணக்கே இல்லயாடா லூசு? நீ ரெண்டாயிரத்துக்கு ட்ரெஸ்ஸ வாங்கிட்டு எனக்கு நாலாயிரத்துக்கு ரெண்டு பொடவ எடுத்துருக்க தான? இப்பவும் ஒன்னோடத விட எனக்கான பட்ஜெட் கூட தான்; இதுல என்ன சூப்பர் காஸ்ட்லி ஸாரியெல்லாம் விட்டுட்டு கம்மியான விலையில தான் எடுத்தேன்னு ஒனக்கு ஒரு கவல வேற.....?"
"நல்ல நாளா இருந்தாலும், நார்மலான நாளா இருந்தாலும் ஒரு ட்ரெஸ்ஸூக்கு நான் செலவு பண்றது ஆயிரத்துல இருந்து ஆயிரத்து ஐந்நூறு ரூபா தான்..... ஸோ நம்ம கல்யாணத்துக்காக நீ எடுத்தது என்ன கலர் பொடவயா இருந்தாலும், அதோட பட்ஜெட் எனக்கு ஓகே தான்....!"
"ஒங்க வருங்கால வீட்டுக்காரம்மா ஒரு பட்ஜெட் பர்வதவர்த்தினி ஸார்... இருக்கறதுக்குள்ள தான் சிறப்பா வாழணும்ங்குற உங்களோட குணம் அவங்களுக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? சும்மா அதெல்லாம் தெரிஞ்சுக்காம ஒன்னோட எதிர்பார்ப்ப பொய்யாக்கிட்டேன், பையாக்கிட்டேன்னு ஒளறிக்கிட்டு இருக்கீங்க?"
"இவரு பெரிய இவரு..... இவரோட கொணமெல்லாம் எங்களுக்குப் புடிக்காம வெறும் பிஸிக்க பாத்து
ஆளு நல்லா பல்க்கா இருக்காரு, கண்ணு நல்லா குண்டு பல்ப்பு மாதிரி இருக்குன்னு நெனச்சு
இவரோட சார்மிங் பர்ஸனாலிட்டியில பொத்துன்னு விழுந்துட்டோம்.... போவான்ல அங்கிட்டு!" என்று கிண்டல் செய்தவளை பார்த்து சின்னதாகப் புன்னகைத்தவன் முகத்தில் குறும்பு தாண்டவமாடியது.
"ஓ.... அப்டீங்களாங்க மேடம்? அப்ப ஜெயனோட ஒடம்ப ஒங்களுக்குப் புடிக்கவே புடிக்காது? அவரோட கொணந்தா ரொம்ப புடிக்கும்.
அப்புறம் எதுக்குங்க அவர் ஒங்க பக்கத்துல ஆசையா வரயில அவரோட காதக் கடிக்குறது, நெஞ்சுல குத்தி விளையாடுறது, ஆர்ம்ஸ அமுக்கிப் பாக்குறது இதெல்லாம் பண்ணுறீங்க..... பொழுது போகாமைங்களா?" என்று புருவம் உயர்த்தியவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவன் தோளில் ஒண்டிக் கொள்வது இப்போது வதனியின் முறையாகிப் போனது.
"ஏய் ஹெட்லைட்டு.... உண்மையிலயே எனக்கு ஒங்கிட்ட இந்த விஷயத்த பேசி முடிக்கிற வரையில எவ்ள பயமா இருந்தது தெரியுமாடீ? ஒரு பத்தாயிரம், இருவதாயிரத்துலயாவது பொடவ எடுத்துருக்கலாம்லடான்னு கண்டிப்பா கொறைப்படுவன்னு நெனச்சேன்.....!"
"அப்டி கேட்டா மறுபடியும் ஒருக்கா ஒன்னைய கூட்டிட்டு கோயமுத்தூருக்கு தான் போயிட்டு வரணும்னு நெனச்சு வச்சுருந்தேன். நீ என்னடான்னா இப்டி பேசுற? ஒரு பொம்பளப்புள்ளயா இருந்துக்கிட்டு நீ எப்டிறீ இப்டி இருக்க?" என்று மிகவும் ஆச்சரியத்துடன் அவளிடம் கேட்டான்.
"ஏய் போடா வேற வேல வெட்டி இல்லாம நீ இப்டி இருக்க அப்டி இருக்கன்னு பேசிக்கிட்டு? நான் ப்ராக்டிகலா இருக்கேன் அவ்ளோதான்..... பேன்டசியிலயே எந்நேரமும் வாழ்ந்துட்டு இருக்க முடியாது ஜெயன்! ஒங்கூட நான் இருக்கப்போற வாழ்க்கையில நீ எப்டி இருப்பியோ எனக்குத் தெரியாது.... ஆனா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன்!" என்றவள் அவன் முகத்தைப் பார்த்து,
"நாலு நாளுல ஒன்னைய நைட்டு நைட்டு தான் நான் ரொம்ப மிஸ் பண்ணுனேன் தெரியுமா? காலையில இருந்து நைட் வரைக்கும் வெளிய வீட்டுலன்னு நல்லா சுத்திட்டு ரூமுக்குள்ள வந்து படுக்கும் போது தான் கரெக்டா உன் நியாபகம் வரும்! உனக்கு நா இல்லாம எப்டி இருந்துச்சு?" என்று கேட்டவளிடம் சட்டையின் கைகளை மடித்து விட்டுக் கொண்டே,
"ஒருநா பூரா வெளியில சுத்திக்கிட்டு, நல்லா என்ஜாய் பண்ணிக்கிட்டு நாளு முடியுறப்ப நம்மள தேடுனவங்களயெல்லாம் நான் எதுக்கு தேடுறேன்? நான் டெய்லி காலையில ஒருக்கா, நைட்டுக்கு ஒருக்கா எளங்கோ கிட்டப் போயி எம்மூஞ்சிய காட்டுனேன்.....!"
"ஜெயனுண்ணே ரொம்ப பாவம்... காதலி இல்லாம ரொம்ப காய்ஞ்சு போயி கெடக்குறாருன்னு அவனுக்கு தெரிஞ்சுச்சோ என்னவோ....? பாவப்பட்டு நம்ம மூஞ்சி பூரா நக்கி வய்ப்பான்! அந்த கெறக்கத்தோடயே அப்டியே வந்து கட்டில்ல படுத்துர்றது!" என்று சொன்னவனுடைய பதில் அவளுக்கு கடுப்பை வரவழைத்தது.
"ஓ.... இளங்கோ கிட்ட மொகத்த குடுத்தா ஸாருக்கு கெறக்கமா வேற இருக்கா..... அப்டியே போயிரு.... இப்ப மட்டுமில்ல கல்யாணத்துக்கு அப்புறமா கூட அது கூடவே அந்த ஷெட்லயே படுக்குறதுன்னாலும் படுத்துக்க.... எனக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்ல!" என்று சொன்னவளை விழுங்குவது போல ஒரு பார்வை பார்த்தவன்,
"அதெப்டி....? படிக்கட்டுல நின்னுக்கிட்டு யாரோ எதையோ எங்கிட்ட கேட்ட மாதிரியில்ல இருந்துச்சு? அவங்க கேட்டத குடுக்கணும்... எனக்கு வேணுங்குறத எடுத்துக்கணும்; எம்புட்டு வேலயிருக்கு? அதெல்லாம் பாக்காம எப்டி எளங்கோ கூடப் போய் படுத்துக்குற முடியும்?" என்று கேட்டு அவன் அணைத்த அணைப்பில் வதனியின் எலும்புகள் ஒருமுறை ஆட்டம் கண்டன.
"கு......ண்டு அனகோன்டா..... விடுறா என்னை!" என்று நெளிந்தவளிடம்,
"வேல முடிஞ்சதும் விடுவோமுங்க ஏஎம் அம்மா!" என்று சொல்லி ஏற்கனவே மூச்சு திணறியவளின் வாயையும் சேர்த்து அடைத்து வதனியின் மூச்சுத்திணறலை அதிகப்படுத்தினான் ஜனமேஜயன்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro