🌻 அழகி 39
வதனியுடன் பேங்கில் பணிபுரியும் அச்சுதன் ஜெயனுடைய வீட்டிற்கு வந்து அன்று மதிய விருந்துக்கு ஜெயன், வதனி, முகில் மூவரையும் அவன் குடும்பத்தினர் தங்கியிருந்த ரிஸாட்டுக்கு வற்புறுத்தி அழைத்திருந்தான்.
கிட்டத்தட்ட ஒருவருடமாக நினைத்து நினைத்து தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு பெரிய டாஸ்க் ஜெயனுடைய உதவியால் சுலபமாக முடிந்திருக்க அந்த சந்தோஷத்தில் தான் அவனையும் வதனியையும் தேடி அவர்களுடைய வீட்டிற்கே வந்திருந்தான் அச்சுதன்.
அவன், அவனுடைய அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை, தங்கை கணவன், அவர்களுடைய இரண்டு பிள்ளைகள், சித்தப்பா, சித்தி, தம்பி, தங்கை அவர்களுடைய கணவன், மனைவி என ஒரு டஜனுக்கும் மேல் ஆட்கள் இருந்த குடும்பத்தில் அனைவருக்கும் ஊட்டி, குன்னூர், ஆனைமலை, டாப்ஸ்லிப், கோயமுத்தூர் பகுதிகளையெல்லாம் ஒரு ரவுண்டு அடித்து காட்டி அவர்களுடைய வெகேஷனை மிகவும் திருப்திகரமாக முடித்து வைத்திருந்தான் ஜனமேஜயன்.
"ஜனா.... வீ லவ் யூ! கொஞ்சங்கூட மொகஞ்சுழிக்காம நீங்க எங்க எல்லார்க்கும் செஞ்சது வல்லிய சகாயமாக்கும்! கன்னனூர் டிஸ்ட்ரிக்ட்டுக்கு வரச்சே நம்ம ஆத்துக்கு கண்டிப்பா ஒருதடவ வந்துட்டுப் போவணும். சரியா?" என்று சொன்ன அச்சுதனின் அப்பாவிடம் புன்னகைத்து அவர் பேசிய அனைத்திற்கும் பெரிதாக தலையை ஆட்டி வைத்தான்.
"தேங்க்ஸ் மிஸ்டர் ஜனா.... வதனி மேடம் வொர்க்ஸ்பாட்ல எங்க யார்கூடயும் ரொம்ப ப்ரெண்ட்லியா மூவ் பண்ணதில்ல; பட் உங்களுக்கு இந்த ஊர்ல நன்னா பழகுனவா யாரேனும் தெரியாமான்னு ஒருவார்த்த கேட்டதுக்கு அவங்க இவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நான் நெஜமா நெனைக்கல. என் ஹோல் பேமிலியும் இந்த ட்ரிப்ப ரொம்ப என்ஜாய் பண்ணியிருக்கா. நீங்களும் மேடமும் அம்மாவும் கண்டிப்பா இன்னிக்கு லன்ஞ்சுக்கு எங்க கூட ஜாய்ன் பண்ணனும். ப்ளீஸ்!" என்று சொன்னவனிடம் வதனியும், ஜெயனும் கண்டிப்பாக வருகிறோம் என்று சொல்லி வைத்தாலும் ஜெயனுக்கு அவளது முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பு தாங்க முடியவில்லை.
பத்தரை மணியளவில் மாடிக்கு ஏறி வந்தவன், "நீ என்னைத் தவிர எல்லார் கிட்டயும் உம்முணாமூஞ்சியா செல்லம்? பேங்க்ல நீ உண்டு, உன் வேலை உண்டுன்னு இருப்பியாமே.... எங்கிட்ட அச்சுதன் ஸார் சொல்றாரு! எங்கிட்ட எல்லாம் நீ நல்லாத்தான வம்பு வளக்குற?"
"இந்த பத்து நாள்ல நான் நேக்கா இந்த ஏரியாவுக்குள்ளயே சுத்துனதால நாலு தடவ வீட்டுக்கும் வந்துட்டு போயிட்டேன். ஒன்னைய பாக்காம எங்கிட்டாவது தூரமா போகணும்னு நீ நெனச்சு என்னைய அனுப்பி வச்சது நடக்கவும் இல்ல; மொத்தத்துல நான் ஒன்னைய மிஸ்ஸூம் பண்ணல!"
"உன் ஆபிஸ்ல வேலை பாக்குறவங்களோட குடும்பத்தையும் சந்தோஷமா வச்சுக்கிட்டதால இப்ப ஒரு விருந்தும் எக்ஸ்ட்ராவா கெடைக்கப்போவுது. எப்டி அங்கயும் வர மாட்டேன், வக்க மாட்டேன்னு சொல்லப்போறியா.....? இல்ல ரிஸார்ட்டுக்கு கெளம்பலாமா?" என்று புருவம் உயர்த்திக் கேட்டவனிடம்,
"போலாம்! போகணும்!" என்று சொன்னவள் அவளுடைய துணிகளை மடித்து படுக்கையறை ஷெல்ஃபில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
"இங்க ஒருத்தன் இவ்ளோ பேசிக்கிட்டு இருக்கேன்.... என்ன நீ பாட்டுல ஒத்த வார்த்தையில பதில் சொல்லிட்டு துணிய அள்ளிக்கிட்டு ஓடிட்டு இருக்க..... எனக்கும் நிறைய துணிய வாஷிங்மெஷின்ல போடணும்; கீழ வந்து அத ஓட்டிக் குடுத்துட்டுப் போறியா?" என்று கேட்டவனிடம்,
"எனக்கு வேல இருக்கு ஜெயன்; நீயே உன் துணிய மெஷின்ல போட்டுக்கோ!" என்று அவனைப் பாராமல் அவள் பாட்டில் அவளது வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் வதனி.
"ஜனமேஜயா...... நன்றி கெட்ட உலகமடா இது; இவங்க ஒரு ஹெல்ப்புன்னு கேட்டாங்கன்னா, அத பத்துநா தூக்கம் பாக்காம, அசதி பாக்காம நம்ம முடிச்சுத் தரணும்! அதுவே நாம ஒரு உதவி கேட்டோம்னா, அத இவங்க கண்டுக்க கூட மாட்டேங்குறாங்க.... அது சரி மேடம் யாரு? நம்ம யாரு?" என்று கேட்டவனை திரும்பி முறைத்தவள்,
"நான் ஒனக்கு இதுவரைக்கும் உன்னோட ட்ரெஸ்ஸ துவைச்சே தந்ததில்லயா?" என்று அவனிடம் கேட்டாள்.
"யார் சொன்னா இல்லையின்னு? அப்டி சொன்னா சொன்னவன வெளக்குமாத்தால அடி! நீ வந்ததுக்கு அப்புறந்தான் நான் என்னோட உள்ள போடுற ட்ரெஸ்ஸூகளையெல்லாம் பரண் மேல, பாய்க்கு அடியிலன்னு தேடாம ஒழுங்கா ஷெல்ஃபுல இருந்து எடுக்குறேன்! இப்டி வாழ்க்கையில பாதியில வந்த பாதாங்கீரு பாதியிலேயே ஸ்ட்ரைக் பண்ணுச்சுன்னா நான் என்ன பண்ணட்டும் சொல்லு!" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் கேட்டான்.
"ஷ்ஷ்ஷ்.... பேசி பேசி
என்னை டயர்டாக்காத ஜெயன்! இப்ப என்ன வேணும் ஒனக்கு?" என்று கேட்டவளிடம்,
"கீழ போயிட்டு மதியம் ரிஸார்ட்டுக்கு போட்டுட்டு போக ஒரு நல்ல செட் ட்ரெஸ் எடுத்து வைக்கணும்! பெட்ரூமுக்குள்ள வந்து எம்மெத்தைய தட்டிப் போட்டு அதுக்கு புது பெட்ஷீட், தலகாணி கவர் எல்லாம் மாத்தி குடுக்கணும். நீ இதெல்லாம் செஞ்சு முடிச்சதுக்கப்புறம் வேணுமுன்னா, நானே என் துணிய தொவச்சுக்குறேன்!" என்று சொன்னவன் அவளுடைய சமையற்கட்டில் அவள் வைத்திருந்த சாக்லெட் டீ பாக்கெட்டை பார்த்து விட்டு,
"இந்த டீ ஒனக்குப் பிடிச்சுருக்குதா ஹெட்லைட்டு? எங்க வாங்குன? எங்கிட்ட வாங்கிட்டு வரச்சொல்லி கேக்கவேயில்லயே? நீயாவே வாங்கிக்கிட்டியா?" என்று ஒவ்வொரு கேள்வியாக கேட்டு
அவளிடம் விசாரித்தான்.
"வேணாம் ஜெயன்! நானும் உங்கிட்ட பொறுமையா பேசி உனக்கு எல்லாத்தையும் புரிய வச்சுடலாம்னு முயற்சி பண்றேன். நீ என்னோட முயற்சிய கொஞ்சங்கூட மதிக்க மாட்டேங்குற......!"
"ஒம்மேல கோபப்பட்டு கத்திட்டேன்னா, அப்புறம் நம்ம ஒருத்தருக்கொருத்தர் முகத்தயே பாத்துக்க முடியாது. ப்ளீஸ்..... பேசாம கீழ போயிடு! கரெக்ட் டைமுக்கு முகில்ம்மாவையும் கூட்டிட்டு லன்ஞ்சுக்கு ரெடியாகி வா!" என்று சொன்னவளிடம்,
"ஏன் இப்டி மொகத்த கடுகடுன்னு வச்சுக்கிட்டு தவிக்குற வர்த்தினி? நான் உம்மேல கொஞ்சமா உரிமை எடுத்துக்குறத ஒன்னால தாங்க முடியல. ஒனக்கு எம்மேல கோபம் வந்தா நான் ரொம்ப சந்தோஷந்தான்டீ படுவேன்....!"
"வண்டி வண்டியா கோபத்த உள்ள அடக்கி வச்சுக்கிட்டு, வார்த்தைய ஏம்மா வெட்டி வெட்டி தைக்குற? எங்க நான் உங்கிட்ட காட்டுற அலம்பலுக்கெல்லாம் இப்ப எம்மேல கோபப்படு பாப்பம்!" என்று சொன்னவனை இரண்டு நிமிடங்கள் ஆழ்ந்த பார்வை பார்த்தவள் அவனுடைய கன்னத்தில் பளாரென அறைந்து தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டியிருந்தாள்.
அவனது நெஞ்சுப்புற டீஷர்ட்டை கொத்தாக பற்றியிருந்தவள் அவனிடம் அவன் கேட்டபடி கோப வார்த்தைகளை உதிர்க்க தயாராக நின்றாள்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro