🌻 அழகி 20
"நாங்க வெறும் சாதாரண எம்ப்ளாயீஸ் தான் சிஸ்டர்! நார்ம்ஸ் என்ன சொல்லுதோ, அத தான் நாங்க கேட்டு நடக்க முடியும்! ஆனானப்பட்ட இராவணன்ங்குற ஒரு பெரிய இலங்கையோட ராஜாவையே அவர் வருத்தமா இருந்தப்போ கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்னு தான் ஒரு ஃப்ரேஸ் சொல்லியிருக்காங்க. அப்ப கடன்ங்குறது எவ்வளவு பவர்ஃபுல்லான ஒரு விஷயம்னு யோசிங்க.....!"
"பட் நஸார் ஸார்! இப்டி உங்களோட டெவலப்மெண்ட் பத்தி ரொம்ப கவலைப்படுற ஒரு வொய்ஃப் கெடச்சதுக்கு நீங்க குடுத்து வச்சுருக்கணும்!" என்றாள் வதனி கணவன் மனைவி இருவரையும் மெல்லிய புன்னகையுடன் பார்த்தபடி.
"ஆமா! ஆமா..... மரியம்ட்ட மாப்ள நெறய குடுத்து தான் வச்சிருக்கான்!" என்று கிண்டல் செய்தவனை முறைத்த மரியம்,
"நீ சும்மாயிரு ஜெயனுண்ணே! எனக்கு நீ ஏத்துக்கிட்டும் பேசுவ; சமயத்துல என்னிய வாரவும் செய்யுவ! இவங்கையில இருந்து காச வாங்குறது என்ன அவ்ளோ சூளுவுன்னா நெனச்சா? யப்பா எமகாதகன்; எங்கிட்ட குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டு வவுச்சர் புக்கு பின்னாடியெல்லாம் காச ஒளிச்சு வச்சுருப்பான்.... ஆனா நான் அவன் ஒளிச்சு வச்ச காசு எல்லாத்தையும் கண்டுபுடிச்சுடுவேனே?" என்று சொன்னவளின் தோளை சுற்றி தன் கையைப் போட்டு அணைத்துக் கொண்டான் நஸார்.
மரியம் சொன்ன சில வார்த்தைகள் அவனை அவனுடைய பதின்பருவத்திற்கு கொண்டு சென்று விட்டது
விடலைப்பையனாயிருக்கும் போதும் இப்படித்தான்..... மரியம் அணியும் பாவாடை சட்டைகளில் உள்ள பட்டன்கள் இரண்டு, மூன்றை சத்தமில்லாமல் திருடி தன் ஜோபில் வைத்துக் கொண்டு அவளை அவளது அன்னையிடம் உதடுபிதுக்கி அழ வைப்பான்.
"ஏய் சிமிட்டி! இங்க வாடீ..... உன் பட்டன் எங்கிட்ட தான் இருக்கு! அது ஒனக்கு வேணுமின்னா மாமாவுக்கு
ஒரு முத்தம் குடுத்துட்டு உன் பட்டன வாங்கிட்டுப் போ!" என்று தனியே அழைத்து வம்பிழுப்பவன் அருகில் வருபவள் அவனுடைய சட்டைப்பை, பேண்ட் பாக்கெட், சில நேரங்களில் அவனுடைய இடுப்பு தாயத்து வரை தடவி தன்னுடைய தொலைந்த பட்டனை மீட்டு விடுவாளே தவிர அவன் கேட்ட முத்தமெல்லாம் அவனுக்கு அவளிடமிருந்து என்றுமே கிடைத்ததில்லை.
தன்னுடைய தந்தையின் நண்பருடைய மகன் அவளிடமிருந்து இந்த அணைப்பையும், ஸ்பரிசத்தையும் மட்டுமே வேண்டி அவளை வம்பிழுக்கிறான் என்று சற்று வயது முதிர்ந்த பிறகு தான் மரியத்திற்கு புரிந்தது.
அப்போது மட்டுமல்ல.....
மூன்று பிள்ளைகளை பெத்த பிறகும் கூட நஸாரின் பட்டன் விளையாட்டு இன்னுங்கொஞ்சம் புதிய வெர்ஷனாக மாறியிருந்ததே தவிர அதை இன்று வரை கூட அவன் நிறுத்திய பாடில்லை.
தோளிலிருந்து மரியத்தின் இடையை பற்றியிருந்தவன் பார்த்த முதல் நாளே பாடலை அவளுடன் கனவில் டூயட் பாடிக் கொண்டிருக்க, மரியமும் நஸாரை இதழ்க்கடையில் புன்னகையுடன் ரசித்திருந்தாள்.
"டேய்.... டேய்; என்னடா நடக்குது இங்க? நான் சொன்னது சரியாத்தான இருக்கு? டேய் இந்தாடா...... நான் பேசுறதாவது ஒங்க ரெண்டு பேரு காதுல விழுதாடா....நஸாரு?" என்று கேட்டபடி தோளை உலுக்கியவன், வதனியின் முகச் சிவப்பை கண்ட கோபத்தில் நண்பனது காலில் நச்சென்று ஒரு மிதிமிதித்தான்.
".......ஆ! கொஞ்ச நேரம் சும்மாயிருக்க மாட்டாம
ஏன்டா இப்டி கால சொரண்டி உசுர வாங்குற?" என்று கேட்ட நஸாரிடம் கொப்பளித்த கோபத்தில்,
"சொரண்டியா? நான் ஒன்னைய மிதிச்சேன்டா பக்கிப்பயலே!" என்றான் ஜெயன்.
"சரி மிதிச்சுட்டல்ல உடு....!" என்று சொன்ன நஸார் வதனியிடம்,
"ஸாரி மேடம்.... உங்கள எதித்தாப்ல ஒக்கார வச்சுட்டு நான் கொஞ்ச நேரம் காணாமப் போயிட்டேன்! இந்த லோன் பத்தி உங்களோட ஐடியா ஏதாவது?" என்று கேட்க வதனி புன்சிரிப்புடன் நஸாரிடம்,
"நீங்க உங்க ட்ராவல்ஸோட லாபத்துல இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்த உங்க வண்டி வாங்குறதுக்கான தொகையின்னு கொஞ்சம் கொஞ்சமா ஒதுக்கி வையுங்க....."
"நல்ல ரீஸேல் வேல்யூ இருக்கும் போதே வண்டிய வேற யார்கிட்டயாவது கைமாத்தி உட்டுடுங்க! ஸோ உங்களால புது வண்டியும் அடிக்கடி வாங்க முடியும்; ரொம்ப பழசு ஆகுற வரைக்கும் ஒரே வண்டிய வச்சுருக்க வேண்டிய அவசியமும் இல்ல....!"
"உங்க ஈஎம்ஐக்கும் அதிகமான அமௌண்ட்டுக்கு ஸோர்ஸ் ஆஃப் இன்கம் காமிச்சுட்டு, லோன் அமௌண்ட்ட முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா கட்டுனீங்கன்னா
சீக்கிரமா உங்க லோன்ல ப்ரின்ஸிபள் அமௌண்ட் குறையும்! இல்லன்னா நீங்க வட்டியே தான் கட்டிட்டு இருக்குற மாதிரி இருக்கும்!" என்று வதனி மரியம் கேட்ட ஒரு கேள்விக்கு பாயிண்ட் பாயிண்டாக பதில் பேசிக் கொண்டிருக்க ஜெயன் அவள் பேச்சின் விளைவால் கொட்டாவி விட்டு விட்டு தன் தலையை ஒரு கையால் தாங்கிக் கொண்டான்.
"சூப்பருங்கக்கா! நானும் நீங்க சொல்ற மாதிரியே தான் நஸாருட்ட மூணு மாசத்துக்கொருக்கா வண்டிக்குன்னு தனியா ஒரு தொகைய ஒதுக்கி வையி, ஒதுக்கி வையின்னு கத்திக்கிட்டே இருப்பேன். நான் சொல்றத எல்லாம் இந்தப்பய காதுலயே வாங்குறதில்ல! நட்டு, போல்ட்டு எல்லாம் ஆடுற அளவுக்கு இருக்குற வண்டியில எந்த கஸ்டமர் ஜாலியா ஊர் சுத்துவாங்க சொல்லுங்க பாப்பம்! நான் சொன்னதயே நீங்களும் சொல்றதால இவன் அந்த பாயிண்ட கொஞ்சம் யோசிச்சுப் பாப்பான்! தேங்க்ஸ்ங்கக்கா!" என்று சொன்ன மரியத்தின் கையைப் பற்றி புன்னகைத்த வதனி அவர்கள் உபசரித்த மரியாதைக்கு ஒரு பாதாமை எடுத்து நாசூக்காக வாயில் போட்டுக் கொண்டாள்.
"எலேய் மாப்ள.... பக்கத்துல இருக்குறவங்களுக்கு பாதாம் குடுக்குறதெல்லாம் இருக்கட்டும்! எனக்கு பால் எங்க?" என்று நஸாரிடம் கேட்டான் ஜெயன்.
"அட இப்பத்தான்டா எல்லாருமா சேர்ந்து காலையில டீய முடிச்சோம்! நீ பாக்கல?" என்று கேட்ட நஸாரை முறைத்தவன்,
"பாத்தேன்..... அதுனால தான் கேக்குறேன். என்னோட இன்னிக்கு காலையில கோட்டா பால் எங்க?" என்றான்.
"அட இவேஒருத்தே பாலுக்கு செத்த பய! நீயே டீ கடைக்குப் போயி குடிச்சுட்டு வாடா! போ!" என்று சொன்னவனின் இருக்கைக்கு அருகில் சென்றவன் நஸாருடைய கழுத்தில் கைபோட்டு,
"இங்க ஒக்காந்துக்கிட்டு நீ என்ன செய்யப்போற? எங்கூட வா! ரெண்டு பேரும் போயிட்டு வருவோம்! யம்மா ஓனரு.... நீங்க செத்த நேரம் கடையையும், கல்லாவையும் கவனிச்சுக்குங்க!" என்று மரியத்திடம் சொல்லி விட்டு நஸாரை எழுப்பி வெளியே அழைத்துச் சென்றான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro