Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மையல் கொண்ட மங்கை: 22

அத்யாயம் 22: மையல் கொண்ட மங்கை

வீம்பு பிடிக்கும் தம்பிக்கு பொருமையாக எடுத்துச் சொல்லி புரிய வைப்பானாம் அண்ணன். அண்ணன் பேச்சை கிளிப்பிள்ளை போல் கேட்கும் தம்பிகாரன் பிடிவாதத்தை இழப்பது அண்ணன் அவனிடம் மட்டும் தான்.

அதே தான் சித்தேஷ் மற்றும் ஆதவனின் பந்தத்தின் ஆழம்.

ஆதவனின் பிடிவாதத்தை அளக்க தேரையே அழைத்து வந்தாலும் அது நடக்காத காரியம். அவன் அடம்பிடிக்க முடிவு செய்துவிட்டால் பூமி தட்டையானது தான் என்று கூட சொல்லுவான். அவனை அதே விஷயத்தை மாற்றிச் சொல்ல வைப்பது நடக்காத காரியம்.

ஆனால் சித்தேஷிற்கு அவ்வாறு அல்ல... பிறப்பின் முதலே சொந்தமாய் பார்த்து வளர்ந்த சித்தேஷின் சொல்லை மட்டும் மதிக்கும் ஆதவனுக்கு தமையனை எதிர்த்து நடக்கத் தெரியாது.

எவ்வளவு தூரம் அவன் அடம்பிடித்தாலும் இறுதியில் சித்தேஷின் வழிக்கே வந்துவிடுவான்.

மயில்விழி பேச்சைத் தட்டாத ஆதவன் முழுதாய் அடங்குவது சித்தேஷின் சொல்லிற்குத் தான்.

இப்போது நிமிர்ந்து கூட பார்க்காமல் தரையை முறைத்துக் கொண்டிருந்த இளையவனை கண்டும் காணாமல் சித்தேஷ் பார்வையை அகற்ற முயன்ற போதே ஆதவனின் கரத்தில் அவன் பார்வை விழுந்தது.

அழகாய் மிளிர்ந்த தேய் பிறையை கண்ட அடுத்த நொடி சித்தேஷிற்கு என்ன நடந்திருக்கும் என்று தானாய் புரிய

" மிருதேஷ்வரன் உம்மை காண வந்திருப்பதன் காரியம் உம் கரத்தில் உள்ளதா இளவா? "

திடீரென எழுந்த கேள்வியில் எதற்சையாய் தன் கையைப் பார்த்த ஆதவன் மறுக்க நினைத்தாலும் ஒரு நொடி சர்வம் அடங்கி அப்படியே அமர்ந்து கொண்டான். அவன் கண்கள் மின்னல் வேகத்தில் அவன் மொத்த வீட்டையும் ஒரு முறை சுற்றி வர, மிருதேஷ்வரனின் விஷக்காற்று நிறைந்திருந்த அந்த இடத்தில் மிகவும் மெல்லிய அளவு சந்தனத்தின் கசந்த வாடை மறைந்து கொண்டிருந்தது.

இவ்வளவு நேரம் பேசிய பேச்சு அவன் இழுத்துப் பிடித்திருந்த செல்லா கோபத்தோடு கானலாய் பறந்து செல்ல, அந்த அறையை ஆதவனின் உஷ்னமான சக்தி மெல்ல மெல்ல ஆக்ரமிக்க சித்தேஷ்வர் அர்த்தம் பொதிந்த பார்வையோடு அவன் கதிரையில் சாய்ந்தமர்ந்தான்.

ஆழ்மனதை தெளிவாக்கிய ஆதவனுக்கு எளிதாய் மறைந்திருந்த தடங்களும் கண்களுக்குப் புளப்பட, மிருதேஷ்வரன் அவன் வீட்டை அலசிவிட்டு சென்றதன் மூலகாரணம் யார் என்பதை உணர்ந்ததும் அவன் நினைவுகள் மொத்தமும் அவன் அனுமதி இன்றி அவன் ஆழ்மனதின் கசப்பான நினைவுகளை மீண்டும் கண் முன்னே இழுத்து வந்தது.

பூப்போன்ற அவள் அழகிய வதனத்தில் வடிந்த குருதி அவள் நீல உடைக்கு அலங்காரமாய் ஆன நேரம், அவள் பிறமுதுகில் தன் வாளை இறக்கிய அடையாளத்தோடு உதட்டில் குரூரப் புன்னகை சூட நின்றிருந்தான் ஒரு நிழல்வேந்தன்.

அவள் இரத்த ஆற்றில் கீழே விழுவதை கண்டு சிகப்பு கண்கள் இரத்தமாய் சிவக்க, வாயெல்லாம் பல்லாக நின்றிருந்த அவனுக்கு அத்தனை ஆனந்தம் போல. இருள் சூழத் தொடங்கிய வாணை நோக்கி கொக்கரித்து சிரித்துவிட்டு, ஆதவன் மனம் விரும்பியவளை துச்சமாய் உதறிவிட்டுச் சென்றான்.

நினைவுகளின் வலியும் வெறியும் ஆதவனை பொருமையில்லாமல் வந்து வேகமாய் தாக்க, தகதகவென எரியத் தொடங்கிய நம் நாயகனுக்கு அவன் வகுத்த விதிகளும் திட்டங்களும் மறந்து போனது.

இமைகளை அழுந்த மூடி திறந்த ஆதவனின் தங்க விழிகள் சித்தேஷை கண்டு ஜொளிக்க,

" மிருதேஷ்வரன் வந்தது என்னைத் தேடி அல்ல தமையா மிதுர்வானனைத் தேடி. "

#

காரில் அமர்ந்து தன் கரத்தையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த நிலாவிற்கு திடீரென அனைத்தும் மங்கலானது.

தலையை பிடித்துக் கொண்டு அவள் கண்ளை மூடி மூடித் திறக்க, மேலும் மேலும் மங்கலான அவள் பார்வை ஒரு கட்டத்தில் முழுதாக இருளடைந்தது.

" ஓஹ் ஒரு வழியாக விழித்துக் கொண்டாளா உன் துணைவி? "

திடீரென தன் அருகே கேட்ட குரலில் நிலா விழிக்க, அவள் எவ்வளவு விழித்து விழித்துப் பார்த்தாலும் கண்ணுக்கு இருளைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

" என்னவளின் நித்திரையை கலைப்பதை நிறுத்தும் அம்மா... "

அந்த குரலை கேட்டதும் நிலா சிலையாய் ஸ்தம்பித்து அமர்ந்தாள். அவளிடம் இது வரை கத்தி மட்டுமே கேட்டிருந்த குரல் அத்தனை மென்மையுடன் அன்பாய் அவளை வந்து அணைத்த அதிர்ச்சியில் அவளுக்கு மற்றவை கவனத்தில் பதியவில்லை போலும்.

அது ஆதவனின் குரல் தான். அதை நிலா எவ்வாறு அறிவாள் என்று கேட்டால் அந்த கேள்விக்கு இப்போதைக்கு அவள் பதில் தேடப் போவதில்லை.

அமைதியாய் கார் சீட்டிலே சாய்ந்தமர்ந்த நிலா அவள் இமைகளுக்கு ஓய்வு கொடுக்க, அவனது மென்மையான குரல் நிலாவை சூழ்ந்து கொண்டது.

" இராவெல்லாம் விழித்திருந்து வானவிசை கற்றுக் கொண்டு இப்போழ்தே நித்திரை கொண்ட எம் மணையாளின் பொன் இமைகளை சற்று துயில் கொள்ள விடுமம்மா, "

" திகட்டாத தேனுண்டது போல் எம்மிடம் தான் உரையாடுவாயோ நீ? பின் என்றடா உம்மவளின் மனம் கவரவிருக்கிறாய்? "

குழந்தையை திட்டும் அம்மாவின் கோபக் குரலை தட்டிக் களித்தவன் சிரித்துக் கொண்டே பதில் கூறினான்.

" என் ஆருயிரின் மீதியவள். என் உடையாளது மனம் அறிந்தும் அவள் அகம்நோக யாதேனும் எம்மையறியாது செய்திட்டேன் எனின் என் செய்வேன் அம்மா? "

நிலாவின் உடல் மீண்டும் மீண்டும் சிலிர்த்து அடங்க, மென்மையான அவன் குரல் அவள் மனதில் ஏதேதோ மாயங்கள் செய்து கொண்டிருந்தது. வலது கையில் தீ சுட்டது போல் சுல்லென ஒரு வலி ஓங்க, அலறலோடு கண்களை பிரிக்க முயன்ற நிலாவிற்கு திரும்பவும் அனைத்தும் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் கருமை கண்ணாமூச்சி தான் தெரிந்தது.

வேகமாக அவள் கையைத் தேய்த்துக் கொண்டவளுக்கு மின்சாரம் தாக்கியது போல் கார் சீட்டிலே உடல் தூக்கிப் போட, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தடுமாறி அருகே விழுந்ததும் மங்கலாக ஒரு காட்சி தெரிந்தது.

மரண வாசம் சூழ்ந்து, எக்கச்சக்க அப்பாவி உயிரை குடித்த கோரத்துடன் குருதி ஆறு ஓடிய யாழிதப் போரின் போர்களம் அது.

வேகமாக அவள் இதயம் அருகே ஒரு அதிர்வு இறங்க, அதற்கு மேல் எழுந்த வலியை நிலாவால் வார்த்தையால் விவரிக்க முடியாது. உடல் நடுங்க சீட்டிலே விழுந்தவளுக்கு வலி உடல் முழுவதும் பரவ, கண்கள் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை அவன் மீதிருந்த பார்வை தான் நிறைத்திருந்தது.

வலியும் கோபமும் போட்டிப் போட்ட கண்கள் உணர்வற்று அவளைப் பார்க்க, உயிரற்ற ஜடமாய் அவளையே உருத்து நோக்கிக் கொண்டிருந்தவனின் உயிர் அவள் கண் முன் இரண்டாய் பிரிந்தது. அது வரையும் அவள் கண் முன் தீப்பிழம்பாய் கொதித்துக் கொண்டிருந்த அவனின் தீயை இருள் இப்போது மொத்தமாய் ஆக்ரமித்து அகங்காரம் செய்ய, இராவானம் போல் நீண்ட அவனின் இறெக்கைகள் விரிந்து அவளை அவனோடு அணைத்துக் கொண்டது.

அப்போது தான் அவள் மனதை உலுக்கிய அவன் கதறலை கேட்டாள் நிலா.

தீயால் தன் தேகத்தை யாரோ தாக்கியது போல் தகதகவென வலியில் எரிந்து கொண்டிருந்த நிலாவிற்கு அவள் உடல் வலியை காட்டிலும் அவன் கதறலை கேட்டு எழுந்த மனபாரம் அதிகமாய் இருந்தது.

" ஏய் நிலா கண்ண தொற டி! "

கண்களை பிரித்த நிலாவிற்கு குபுகுபுவென உடல் எல்லாம் வேர்க்க, அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அவளை உலுக்கிக் கொண்டிருந்த இசையையும் கவனியாமல் தன் மறுபுற கதவைத் திறந்து காரைவிட்டு கீழே விழுந்தாள். அவள் விழுந்த வேகத்திற்கு இரு வலிய கரம் அவளை இழுத்து அணைக்க, மூச்சுவிட இயலாமல் திமிறிக் கொண்டிருந்த நிலாவின் தேகம் அவன் ஸ்பரிசம் பட்ட அடுத்த நொடி செயலற்ற பொம்மை போல் அவன் மீதே சாய்ந்தது.

" மிருதா... "

கீழே விழும் முன் காக்கும் பொருட்டு அவளை இழுத்த ஆதவன் அவள் அதரங்களை தாண்டி வந்து விழுந்த அந்த ஒற்றை பெயரை கேட்டு திடுக்கிட்டு நிற்க, அவன் உடல் சூட்டில் அமைதியடைந்த நிலாவின் வதனம் மெல்ல தெளிவடைந்தது.

சித்தேஷ் முன் சாமியார் போல் அமர்ந்திருந்தவன் எப்போது வெளியே வந்தான், அதுவும் எப்போது இவளைத் தேடி வந்தான் என்று அவனுக்கேத் தெரியவில்லை. காருக்குள் இவ்வளவு நேரமும் கும்பகர்ணனுக்கு தங்கைப் போல் கண்களை திறக்காமல் கிடந்தவளை எழுப்புவதற்கு படாதுபாடு பட்டுக் கொண்டிருந்த இசைக்கு அவள் கண்களை அவளாலே நம்ப முடியவில்லை.

தெரு ஓரமாக ஒருவரை ஒருவர் பார்த்து காட்டுக் கத்து கத்திக் கொண்டு தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக சண்டையிட்ட அதே இருவர் தானா இவ்விருவர் என தலையை மட்டும் ஜன்னல் வழியே நீட்டிக் கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்திருந்த இசை வாய்விட்டே புலம்பினாள்.

" என்ன கதை எல்லாம் வேற ட்ரக்குல போகுது... ஆவூன்னா காச்சுமூச்சுன்னு இரெண்டு தெருக்கு கேக்குற மாதிரி கத்துறாங்க ஆனா திடீருனு அந்த மனுஷன் இவ கையப் புடிச்சு இழுக்குறாரு... இப்போ அவர கட்டிப்புடிச்சிட்டு இவ என்ன திரும்ப தூங்கீட்டு இருக்கா? எனக்குத் தான் எல்லாம் வேற மாதிரி தெரியுதா? "

இசையின் குரல் தெளிவாக கேட்டாலும் அவளை கவனிக்கும் நிலையில் ஆதவன் இல்லை. அவன் கரங்களில் துயில் கொண்டது போல் அவன் நெஞ்சோடு ஒன்றிக் கொண்ட அவனவள் மீது தான் அவன் மொத்த கவனமும் இருந்தது.

அவனையும் மீறி அவள் முகம் வரை கையை கொண்டு சென்றவன் அவள் கற்றை கேசத்தை ஒதுக்கிவிட துடித்த விரல்களின் நடுக்கத்தில் அவனை அறியாமல் மூடியிருந்த செப்பு இமைகளை ஏக்கமாய் பார்க்க, திடீரென வந்து அவனை அணைத்து கொண்ட பழைய நினைவுகளின் பலனால் தனிச்சையாகவே தூக்கிய கையை இறுக்கிக் கொண்டான்.

தொலைவில் இருந்து இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சித்தேஷால் பெருமூச்சு மட்டும் தான் விட முடிந்தது. என்னவோ ஏதோவென முதலில் யோசனையோடே தன் சகோதரனை பின் தொடர்ந்த சித்தேஷ் நிலாவிடம் தான் அவன் சென்றடைவான் என எதிர்பார்த்திருந்தான்.

" எம் சகோதரன் பிடிவாதத்தை அறிந்தே வெண்மதி ராஜ்ஜியத்தையே எதிர்த்து நிற்கும் துணிச்சல் படைத்தவளாய் பிறந்தாள் என்று நினைத்திருக்கிறேன். இம்முறையும் வெண்ணிலாவின் பிடிவாதம் தான் கடிவாளமிட்டு அவனை பின்னிழுக்கும் என்றாகியது போலுள்ளதே இறைவி அன்னையே... சரி தான் நல்லவையே நடக்கட்டும். "

ஒரு சிறு புன்னகையோடு வந்த வழி பார்த்து நடந்த சித்தேஷ் அவன் சகோதரன் செல்ல வேண்டிய பாதை இனி தானாய் தெளிவு பெறும் என்ற தீர்மானத்தோடு மாயலோகத்திற்கே பயணித்தான்.

அது வரை ஏதோ ஒரு மாயத்திற்குள் இருந்திருந்த ஆதவன் மெல்ல நிலாவை உலுக்கினான்.

" கண்ணத் திற, "

ஆனால் ஆழ்ந்த அமைதி குடியிருந்த நிலாவின் முகத்திலும் மாற்றம் இல்லை அவளிடம் இருந்தும் எந்த அசைவும் இல்லை.

ஆனால் மயங்கி இருக்கிறாளே என்ற பதட்டம் கொஞ்சமும் இல்லாமல் நறநறவென பற்களைத் தேய்த்த ஆதவன்

" நான் பேசுறது உனக்குக் கேக்குதுன்னு எனக்குத் தெரியும். எந்திரி டி, "

அவ்வளவு நேரம் மையல் கொண்டு அவன் மடியில் கிடந்தவள் அவன் டி என்றதும் பட்டென கண்களைத் திறக்க, ஆதவன் அசராமல் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

" ரோட்டுல படுத்துத் தூங்குறதுக்கு இது என்ன உங்க பாட்டியோட ப்ராப்பர்ட்டியா? "

ஆதவனின் வெடுக்கென்ற பேச்சில் நிலா எந்த வாணத்திற்கு குதிக்கப் போகிறாளோ என இசை கண்களை விரித்த அதே நேரம் நிலா மிகவும் அமைதியாக, தான் தனக்கு பார்த்தாலே பிடிக்காமல் மலைமலையாய் கோபம் வரும் ஒருவன் மடியில் சாய்ந்திருக்கிறோம் என்று நன்றாகத் தெரிந்தும், அவனைப் பார்த்தாள்.

" இல்ல இது மொத்தமும் என் வருங்கால புருஷனோட ப்ராப்பர்ட்டி. "

ஆதவனின் வெண்மதி அவளா...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro