Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நீடிக்கும் குழப்பங்கள்: 12

அத்யாயம் 12: நீடிக்கும் குழப்பங்கள்

வெண்ணிலாவின் அறை கதவை டமாலென தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள் இசை.

" ஏய் என்னாடி நினைச்சிட்டு இருக்க நீ? நான் வீட்டுக்கு போ வேணாமா? நாளைக்கு மண்டே டி, காலேஜ் போனும் நாம! நீ என்னன்னா எனக்கேத் தெரியாம பாட்டிக்கிட்ட சொல்லி இன்னும் இரெண்டு நாள் என்ன டேரா போட வச்சிருக்க? "

திறந்திருந்த பால்கெனியின் வாயிலாக பெய்து கொண்டிருந்த மழையை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த நிலா பெருமூச்சோடு இவளைப் பார்க்க, அவள் முகத்தில் ஏதோ சரியில்லை என்பதை படக்கென கண்டுப்பிடித்த இசை வேகமாக அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.

" என்னாச்சு உனக்கு? ஏன் டையர்டா இருக்க? நிலா என்னப் பாரு டி, "

" ஒன்னும் இல்லடி... இரெண்டு நாள் தான? இரேன் என் கூடவே... "

" சரி இருக்கேன் இருக்கேன்... ஆனா உனக்கு என்ன ஆச்சு? "

" ஒன்னும் இல்ல... சும்மா தான், "

" சும்மா தான்னு சொல்லீட்டு ஏன் மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்க? நீ நல்லா இல்ல நிலா, "

" அப்டியா இருக்கேன்? "

இசை வேகமாக தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

நிலா " தெரியல டி... ஏதோ மனச கொடஞ்சிக்கிட்டே இருக்கு. "

" ம்ம்ம் நேத்தெல்லாம் கூட நல்லா தான இருந்த? ஒரு வேலை மேரேஜ் ஃபீவர் வந்துடுச்சோ? "

நிலாவின் நெற்றியை அவள் தொட்டுப் பார்க்க, அவள் செய்வதை கடனே என பார்த்துக் கொண்டிருந்தாள் நம் நாயகி.

" இல்லையே... உன் மூஞ்சில கல்யாண கலைனு சொல்ற ஒளவுக்கு எனக்குத் தெரிஞ்சு ஒன்னும் இல்லையே... சொல்லப்போனா எங்கேஜ்மென்ட்டுக்கு அப்பரம் தான் நீ முன்னாடி இருந்ததவிட ஜாம்பி ஆன மாதிரி இருக்க... " என முதலில் வாய்விட்டே கூறிய இசை பின் அவள் தலையிலே அடித்துக் கொண்டாள். " ச்ச நான் லூசு... அதெல்லாம் இல்ல எங்கேஜ்மென்ட் நடந்தே ஒரு நாள் தான ஆகுது, போகப் போக கல்யாண கலை வரும் மே பி... "

" மே பி இந்த கல்யாணமே எனக்குப் பிடிக்கலன்னா? அப்போவும் அந்த கலை வருமா? "

நிலாவின் கேள்வியில் ஜெர்க்கான இசை, நான்கு மீட்டருக்கு கண்களை விரித்து அதிர்ச்சியாய் அவளைப் பார்த்தாள்.

" ஏய் என்னா டி? நேத்து தான் எங்கேஜ்மென்ட் ஆச்சு இன்னைக்கு புடிக்கலன்னா என்னாகும்னு கேக்குற? உன் பாடிகார்டு அத்தான் இந்த கல்யாணம் வேணாம்னு சொன்னப்போவே நான் யோசிச்சிருக்கனும். நிலா உண்மையா சொல்லு, " என இசை அவள் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடிக்க இப்போது நீலாவிற்கு தூக்கிப் போட்டது.

தன் கேள்விகளில் ஙவென பராக்கு பார்த்தவளை இசை இப்படியும் அப்படியுமாக உலுக்கிக் கொண்டிருந்தாள்.

" நீ பயப்புடாம என்ட்ட உண்மைய சொல்லு டி, யாராவது உன்ன ப்லக்மெயில் பன்றாங்களா? நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னா ரேஷன்கார்டுலேந்து உன் பேர எடுத்துருவோம்னு சொன்னாங்களா? இல்ல உன் வில்லி அத்தைங்க உன் பாட்டிக்கு விஷம் வச்சிருவோம்ன்னு சொன்னாங்களா? சொல்லு டி! "

படக்கென அவளிடம் இருந்து பிரிந்து எழுந்த நிலா " அடியேய் உன் வாய கழுவு டி, என் பாட்டி பாவம்! "

" அப்பரம் யார் சொல்லி இஷ்டம் இல்லாம நீ கல்யாணத்துக்கு ஒத்துக்குட்ட? நிலா என்கிட்ட எதுவா இருந்தாலும் சொல்லு டி, நான் போய் பாட்டிக்கிட்ட பேசுறேன்! "

" ஏய் ஏய் இரு டி... இசை கொஞ்சம் பொருமையா இரு ப்லீஸ்! "

" நிலா உனக்கு இதோட சீரியஸ்னெஸ் புரியிதா இல்லையா? உனக்கு விருப்பத்தோட தான நீ ஓக்கே சொன்ன? ஏ இரு... உன்ட்ட மொதல்ல கல்யாணத்துக்கு ஓக்கேவா இல்லையான்னு கேட்டாங்க தான? உன் அத்தங்களே எதாவது சொல்லீட்டாங்களா? கௌஷிக் வேற உன் அத்தையோட சிஸ்டர் பையன்னு சொன்ன... அந்தம்மா உன்ன வேற எங்கையாவது தள்ளிவிடனும்னு எதாவது ப்லன் போற்றுச்சோ? ஐயோ உனக்கு அத்தையா வரப் போறவங்க சீரியல்ல வர அத்த கரெக்டர் மாதிரியே இருக்கவுமே பயமா இருந்துச்சு எனக்கு! நீ கூட பார்த்தியா? அவன் அண்ணனுங்களும் அண்ணிங்களும்...ஐயோ எல்லாரும் கொலகார கும்பல்லேந்து நாடகத்துக்கு நடிக்க வந்த மாதிரி இருந்தாங்க. ஒருவேளை அது உண்மையான குடும்பமே இல்லையோ... நிலா அடியேய் நிலா என்னன்னு சொல்லு டி, என் மண்டைக்கு ஏதேதோ தோனுது! "

" நான் ஒருத்தி யோசிச்சு மண்டைய பிச்சிக்கிறது பத்தாதுன்னு நீயும் ஏன் டி என்ன சாவடிக்கிற? "

இசையின் கற்பனை குதிரை லாடமின்றி இறைகட்டிவிட்டது போல் சுதந்திரமாய் ஓட அதில் அவளுக்குத் தான் மூச்சு முட்டியது.

" அஹென் உன்கிட்டலாம் மனுஷன் பேச மாட்டான். நான் போய் பாட்டிக்கிட்ட பேசிக்கிறேன் நகரு, "

" இசை சொன்னா புரிஞ்சிக்கோ டி, "

" என்கிட்டயும் பேச மாற்ற... என்னையும் பேச விட மாற்ற? என்னா தான் பண்ணலாம் இப்போ? " இசை காட்டமாய் நிலாவை முறைக்க, கண்கள் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை மறைக்க கண்களை இறுக்கி மூடிய நிலா அவள் மெத்தையில் பெருமூச்சோடு சரிந்தாள்.

" எனக்கு தெரிஞ்சிருந்தா நான் ஏன் இப்டி இருக்கப் போறேன்? ஏதேதோ தோனுது டி... "

" நிலாமா என்ன டா ஆச்சு? என்ன தோனுது உனக்கு? "

இவ்வளவு நேரம் குதித்துக் கொண்டிருந்த இசை நிலாவின் உடைந்த குரலை கேட்டு அமைதியடைந்தாள். அவள் ஆதரவமாக அவளின் கரங்களை பிடிக்க, நகர்ந்து அவள் மடியில் தலை வைத்துக் கொண்ட நிலா

" நான் இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கனுமோ? நான் கல்யாணத்துக்கு ரெடி ஆகலையோன்னு தோனுது... நான் எதாவது தப்பு பன்றனா இசை? "

அவள் தலையை மென்மையாய் கோதிய இசை " எனக்குத் தெரிஞ்சு நீ எந்த தப்பும் பண்ணல... உன் நல்ல மனசுக்காகவே உனக்கு நல்லது தான் டி நடக்கும், நீ எதுக்கும் பயப்புடாத. உனக்கு எதாவது ஒன்னு சரி இல்லன்னு தோனுனாலும் என் கிட்ட சொல்லு. நான் உன்ன அந்த கொலகார கும்பல்கிட்ட இருந்து காப்பாத்துறேன். "

நிலா எதுவும் சொல்லாமல் பெருமூச்சோடு தோழியின் மடியில் முகத்தை புதைத்துக் கொள்ள அவள் மூடிய இமைகளுக்குள் கனவு போல் வந்துவிட்டு மறைந்தான் அந்த மாயக்காரன்.

#

இரவு உணவை முடித்துவிட்டு மாடியில் இருக்கும் தன் அறைக்கு செல்ல இருந்த ஹர்ஷனைப் பிடித்து கீழே மீண்டும் இழுத்து வந்தான் வினோத்.

" டேய் என்ன டா? எங்க இழுத்துட்டுப் போற? "

இரண்டு நாளுக்கும் அலைந்த அலைச்சல் அவன் உடலை நன்றாக சோர்வாக்கி இருக்க விட்டால் ஹர்ஷன் அமர்ந்த இடத்திலே தூங்கியிருப்பான் போல... அந்தளவிற்கு அவன் கண்கள் இரண்டும் சொருகிக் கொண்டிருக்க அதை சட்டை செய்யாத வினோத்

" டேய் மயில்விழி ஃபோன் எடுக்கல டா... அவ என்ன செய்றா என்னன்னு தெரியல, "

" அக்கா தூங்கி இருப்பா டா... அவளுக்கு உன் ஃபோன எடுக்குறத தவிற வேற வேலையே இல்லையா? இதெல்லாம் ஒரு இதுன்னு தூங்கப் போன என்ன புடிச்சு வச்சிட்டு பிள்ளையார் மாதிரி உக்கார வச்சிருக்க?! "

" மச்சான் மச்சான் வா டா ஒரு எட்டுப் போய் அவள பார்த்துட்டு வந்துடுவோம், "  வினோத் அவன் கன்னத்தை கிள்ளி கொஞ்ச முயற்சிக்க, அவனை கேவலமாக ஒரு லுக் விட்டுவிட்டு பட்டென அவன் கரத்தை தள்ளிவிட்டான் இவன்.

" எதுக்கு? உன் கூட வந்த பாவத்துக்கு நானும் அக்கா கையால அடிவாங்குறதுக்கா? அவ சொல்ல சொல்ல கேக்காம இந்த நிச்சயத்த நடக்கவிட்டதுக்கே அவ காண்டுல இருக்கா... அடி வாங்கனுமுன்னா நீயே தனியா போய் வாங்கிக்கோ, அங்க தான் இருக்கு என் கார் சாவி, "

" தனியா போக பயமா இருக்கு டா எனக்கு... இருக்குற கடுப்புக்கு தனியா நான் சிக்குனா என்ன விட்டுவைக்க மாட்டா அவ... நானும் பாவம் தான? " என அவன் பப்பி பேசுடன் அவன் நண்பனை பாவமாக பார்த்தான்.

ஆனால் ஹர்ஷன் கொஞ்சமும் அவன் நண்பனுக்கு பாவம் பார்க்கவில்லை.

ஹர்ஷன் " அதான பார்த்தேன் என்ன டா புலி பப்புமுதேன்னு... போ போய் தனியா மாட்டி சாவு, நான் தூங்கப் போறேன். "

" டேய் உன் நெஞ்சில ஈரம் இல்லையா டா? என்ன தனியா சாகவிட்டுட்டு நீ நிம்மதியா தூங்கீடுவியா? உனக்காக உயிர் கொடுக்கும் நண்பன் இல்லையா நான்? " என அவன் சட்டையைப் பிடித்து இழுத்து இவன் வீரவசனம் பேசுவது போல் கத்த ஹர்ஷன் அவன் தலையிலே அடித்துக் கொண்டான்.

" நீ உயிர குடுக்கல என் உயிர தான் வாங்கீட்டு இருக்க! வா வந்து தொல, போர போக்குல தூக்கத்துல நான் எங்கையாவது காரவிட்டு மோதுனா நீ தான் பொருப்பு சொல்லீட்டேன். "

" நீ வந்தா போதும் ராசா மத்தத எல்லாம் நான் பார்த்துக்குறேன். வா வா, "

" நல்லா கிழிப்ப நீ... என் அக்காகிட்ட அடிவாங்கவிட்டுட்டு நீ ஓடீருவ... மதி விஷயம் தெரிஞ்சா வேற அவ சாமியாட்டம் ஆடுவாளே! இறைவா என்ன தயவுசெஞ்சு காப்பாத்தீரு! " ஹர்ஷன் தலை முடியை கொத்தாக பிடித்தபடியே அவன் கார் சாவியை எடுக்க செல்ல வினோத் வாயெல்லாம் பல்லாக அவனைப் பின் தொடர்ந்தான்.

இவர்கள் தேடிச் செல்லும் மயில்விழியோ தன் சுற்றத்தை அறியாமல் இன்னமும் ஆழ்ந்த மயக்கத்தில் தான் இருந்தாள்.

#

மாயலோகம்

ஆழ்ந்த அமைதி நிலவிய சில வினாடிகளுக்குப் பின் சற்று அசுவாசம் அடைந்திருந்த மதி தன்னை இன்னமும் நெருங்கி நின்றிருந்த சித்தேஷை நேராக காண இயலாமல் முகத்தை அங்குமிங்கும் திருப்பிக் கொண்டிருந்தாள். அந்த அறையையே அவள் பார்க்காத அதிசயத்தைப் பார்த்தது போல சுற்றி முற்றிப் பார்க்க, அவள் வாயைத் திறந்து எப்போது பேசுவாள் என அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த இளவரசன்.

விட்டால் இன்னும் இரெண்டு மணி நேரம் கூட இவன் பார்த்துக் கொண்டே தான் இருப்பான் என தாமதமாக புரிந்துகொண்ட மதி

" அ... எக்ஸ்க்யூஸ் மி... நீங்க கொஞ்சம்... அப்பரம் என்ன ஆச்சுன்னு சொன்னா நல்லா இருக்கும்... "

அவள் குரல் கேட்க காத்துக்கிடந்த சித்தேஷ்வர் என்ற அந்த பக்தனும் மனம் நிறைய தலையசைத்து ஒருவழியாக அவளைவிட்டு சில அடிகள் விலகினான்.

" தாம் கேட்க விரும்புவதை எம்மிடம் தயங்காது கேட்கலாம்... என்னாலான விடை தர முயல்கிறேன். "

" எனக்கு... எனக்கு மிரு பத்தி தான் தெரிஞ்சிக்கனும். அவன் கிட்ட தான் சிம்மலோகனம் இருக்கு. இப்போ உண்மையா அவனால அழிவு ஏற்பட்டா எந்தெந்த உலகத்துக்கு ஆபத்து ஏற்படும்? "

" எந்தெந்த உலகமென்றால்... நான் குறிப்பிட்டது பூலோகத்தோடு ஒன்றியுள்ள ஆகாயலோகம், ஆழிலோகம் மற்றும் சர்ப்பலோகம். பூலோகத்தின் ஒரு பகுதியிலே மறைந்துள்ளது எங்கள் மாயலோகம். "

அவள் கேள்வியில் ஏதோ முதலில் கேட்க வந்தவன் பின் அதை விட்டுவிட்டு அவளுக்கு பதில் கொடுக்கத் தொடங்கினான்.

சித்தேஷ் " அழிவின் ஆதிக்கத்தை குறிப்பது சிம்மலோகனம். மிருதேஷ்வரனிடம் சிம்மலோகனம் இருப்பதன் காரணகாரியத்தை எவரும் அறியார். "

" சரி... மிரு ஏன் எனக்கு ஆபாத்தா இருக்கப் போறான்? அவன் ரொம்ப நல்லவன், "

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சித்தேஷ் அவளை விசித்திரமாகப் பார்த்தான்.

" அவனை என்ன நாமம் வேண்டாலும் கூறி அழையும் ஆனால்... நல்லவனென்றெல்லாம் அழைத்தால் இஞ்ஞாலம் தாங்காது. "

சிரிக்காமல் சீரியசாக அவன் சொன்ன ரீதியில் மதியே அவனை பீதியாய் பார்க்க

" எல்லாம் சரி... இவன் தான் வில்லன்னே இருக்கட்டும். அப்போ ஹீரோ தான் யாரு? " என அவர்களின் அருகில் இருந்து எழுந்த ஒரு ஆணின் குரலை கேட்டு மதி படக்கென திரும்பிப் பார்க்க, இவ்வளவு நேரமும் தங்கள் அருகில் ஏதோ ஒன்று இருப்பதை யூகித்திருந்த சித்தேஷ் பொருமையாக திரும்பிப் பார்த்தான்.

சாயும் நாற்காலி ஒன்றை நடு அறைக்கு இழுத்துப் போட்டு தன் தாடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு மறுகையால் ஒரு நாட்குறிப்பை அங்குமிங்கும் புரட்டிப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் நம் மதியின் அண்ணன் காலன்.

ஆதவனின் வெண்மதி அவளா...

ஹலோ இதயங்களே

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? புத்தாண்டு நல்லா கொண்டாடுனீங்கன்னு நம்புறேன். என்னுடைய சார்பாகவும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மை டியர் ஹார்ட்ஸ்!!!

சரி ஏன் யாரும் இப்போலாம் கமென்ட்ஸ் எதுவும் எழுதுறது இல்ல? எதாவது ஒரு வார்த்தை இரெண்டு வார்த்தை கூட சொல்ல மாற்றீங்களே? ஏன் இதயங்களே என்ன ஆச்சு? கதை புடிக்கலையா? நல்லா இல்லையா? போர் அடிக்கிதா? எதாவது நீங்க சொன்னா தான எனக்குத் தெரியும் 👀 எதாவது சொல்லுங்க... இரெண்டு வார்த்தையோ இரெண்டு லைனோ... வெயிட் பண்ணீட்டே இருப்பேன். சீக்கிரம் விமர்சனம் குடுங்க... டாட்டா

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro