Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிச்சயதார்த்தம்: 4

நிச்சயதார்த்தம்: 4

உறவினர்கள் கூடிட ஜகஜோதியாய் மிளிர்ந்த அம்பிகா பாட்டியின் அரண்மனை போன்ற வீட்டில் நடுநயமாய் இருந்த ஒரு பெரிய கதிரையில் கோட் ஸ்யூட் அணிந்து மன்மதனாய் அமர்ந்திருந்தான் கௌஷிக். மாதூரி தங்கையின் நான்காம் மகன். அன்றைய நாளின் நாயகன்.

இரண்டே நிமிடத்தில் மாடியிலிருந்து வெளுத்த பின்க்கும் வெள்ளையும் கலந்த லாங் ப்ராக்கில் டிங்டிங்கென பார்பி டாலை போல நடந்து வந்தாள் இசை. அவளை கண்டதும் அனைவரும் ஏதோ வாய் திறக்கப் போக, தன் நெற்றி மீது வந்து விழும் கற்றை கூந்தலை ஊதி தள்ளியவாறு " ஹலோ நான் பொண்ணில்ல! சை! நான் மணப்பொண்ணில்ல... பின்னாடி வருது கல்யாண பொண்ணு, " என்று விட்டு நகர்ந்தவளின் பின் தங்கபதுமையென கூந்தலை அழகுப்படுத்தி மேருகேறிய அழகுடன் அடர்ந்த லவெண்டர் லெஹங்காவில் பேரழகாய் நின்றிருந்தாள் நம் நாயகி.

அனைவரின் பார்வையும் அவள் மீதே பதிந்திருக்க அவளுக்கு முன் டங்டங்கென குதித்து வந்த இசையின் மீதே பதிந்திருந்தது வேறொரு கண்கள்.

அந்த கூட்டம் நினைத்த அளவிற்கு இல்லையென்றாலும் நிலாவின் மனதில் ஒரு படபடப்பு எழத் தான் செய்தது.

அதை உணர்ந்ததை போல இசையை நகர்த்திவிட்டு நிலாவின் கரத்தைப் பிடித்தான் ஹர்ஷன். சந்தன நிற சட்டை அணிந்து வேஷ்டி கட்டியிருப்பவனை அவள் ஆச்சர்யமாய் பார்க்க அவனின் பின்னே வினோத் மற்றும் ஷேஷா பச்சை நிற சட்டை அணிந்து வேஷ்டி அணிந்திருக்க அவர்களின் அருகில் ஆதவனும் நீல நிற சட்டை அணிந்து வேஷ்டியில் நின்றிருந்தான்.

ஹர்ஷன் " பயப்புடாத நிலா... நாங்க உன் கூடவே தான் இருப்போம், " மென்மையாய் கூற அவனுக்கு மெல்லிய புன்னகையை பதிலாய் கொடுத்த நிலா அவன் வழி நடத்த மேடை ஏறினாள்.

ஹர்ஷன் மேடையேறியதும் அவளின் கரத்தை இறுக்கிப் பிடிக்க அதன் காரணத்தை உணர்ந்த நிலா மறு கரத்தால் அவனின் முஷ்டியில் தட்டிக் கொடுத்தாள்.

" ஐ வில் பீ ஃபைன் அத்தான், " என அவனுக்கு மெதுவாய் கூறினாள்.

ஒரு நொடி அமைதியின் பின் கௌஷிக்கிடம் அவளின் கரத்தைக் கொடுத்த ஹர்ஷன் நிலா அறியாமல் " பத்திரம்... " என கூறிவிட்டு கீழிறங்கி சென்றான்.

பெரியோரின் முன்னிலையில் இன்னும் இரண்டு மாதத்தில் கௌஷிக் மற்றும் நிலாவிற்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டது. பெண் வீட்டார் சார்பாக வினோத் கௌஷிக்கிற்கு தங்க சங்கிலி அணிவிக்க அதை புன்னகையோடு வாங்கிக் கொண்டு அவனை அணைத்து விடுவித்தான் கௌஷிக்.

நிலாவிற்கு தந்தை வழி முறையில் வினோத் தனியாளாய் நின்றாலும் அவனை தாங்கி நிற்க வைக்க ஆதவனும் அவனுடனே இருந்தான். அவன் என்னதான் கல்லின் மேல் மழை பேய்ததை போல ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றாலும் அவன் நின்றதே பெரிதாய் தெரிந்தது நிலா மற்றும் வினோத்திற்கு. இசையும் அவர்களோடு தான் நின்றிருந்தாள்.

மாப்பிளை வீட்டார் சார்பாக நிலாவிற்கு பத்து பட்டுப்புடவை கொடுக்கப்பட்டது.

அனைவரும் எதிர்பார்த்த அந்த நொடியும் வந்தாகிவிட அனைவரின் முன்னிலையிலும் நிலாவின் கைப்பிடித்து மோதிரம் அணிவித்தான் கௌஷிக்.

தன் முறை வந்ததும் அந்த மோதிரத்தை எடுத்த நிலா பொருமையாய் இயல்பிலே பெற்ற லேசான நடுக்கத்துடன் கௌஷிக்கின் விரலை பிடிக்க செல்ல, படாரென ஏதோ உடையும் சத்தம் கேட்டதும் திடுக்கிட்ட நிலாவின் கரத்தில் இருந்த அந்த மோதிரம் தவறி கீழே உருண்டோடியது.

அந்த சத்தத்தின் காரணமாக அனைவரும் ஒவ்வொரு பக்கம் திரும்பி பார்க்க வினோத் ஏதோ ஒன்றை முன்பே அறிந்ததை போல திரும்பியும் பாராது மாடிக்கு வேகமாய் ஓடினான்.

நிலாவின் அறையிலே அந்த சத்தம் கேட்டிருக்க படாரென கதவைத் திறந்து உள்ளே சென்றவன் சற்றும் அந்த காட்சியை எதிர்பார்த்திருக்கவில்லை. நிலாவின் பால்கெனியில் இருக்கும் கன்னாடி கதவு சுக்கு நூறாய் உடைந்திருந்தது. அதன் வெளியே நிலவின் ஒளியில் பிரகாசமாய் தெரிந்த அந்த ஒற்றை அம்ப்ரோசி மலரின் முன் பிரகாசமாய் ஜொளித்த தங்க கண்களுடன், குருதி படிந்த விரல்கள் அந்த மலரை வருட நின்றிருந்தான் மிருதேஷ்வரன்.

சர்வமும் ஒடுங்கி அவனை நோக்கிய வினோத் பேச நா இழந்து நிற்க அவனை ஒரே ஒரு அமைதியான பார்வை பார்த்த மிருதேஷ்வரன் ஆழ்ந்த குரலில் கர்ஜித்தான்.

" அம்ப்ரோசி... மீண்டு வந்த காதல் மட்டுமல்ல. அது எம்மையும் குறிக்கும். அழியாத்தன்மை... எமக்கு அழிவே இல்லை வினோத்வலிங்கேஷ்வரா,  எமக்கு அழிவே இல்லை. "

அந்த அறையின் கதவை திறந்து கொண்டு ஹர்ஷன் உள் வரும் முன்பாக படாரென அடித்த வேகமான காற்றிற்கு மத்தியில் மறைந்திருந்தான் அவன்.

கீழே ஒரு நீண்ட தேடலுக்குப் பின் இசை அந்த மோதிரத்தை எடுத்து கொடுத்ததுமே நிலா தன் அண்ணனும் இல்லாமல் அத்தானும் இல்லாமல் அவர்களைத் தேடி கண்களை சுழற்றியபடியே கௌஷிக்கை கவனிக்காமல் அவனின் கரத்தில் ஏதோ ஒரு விரலில் தினித்தாள் அந்த மோதிரத்தை.

திடீரென எழுந்த கரகோஷத்திலே தான் மோதிரத்தை அணிவித்ததை உணர்ந்தாள் நிலா. அவள் பார்வையை திருப்பிய பொழுது அவளின் கண்கள் முன் முதலில் பதிந்தது ஓரத்தில் அவளை உருத்து நோக்கியபடி நின்ற ஆதவனின் கண்களே.

நிலாவின் நிச்சயதார்த்தம் இனிதே நிறைவடைய எதுவுமே நடவாததை போல் மாடியிலிருந்து இறங்கி வந்த வினோத் மற்றும் ஹர்ஷனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து விடைபெற்றான் ஆதவன்.

நிலா பதட்டமாய் தன் சகோதரனையும் அத்தானையும் நோக்க அவளது பார்வை உணர்ந்தும் வினோத் அவள் புறமே திரும்பவில்லை. ஹர்ஷன் அவனை சமாதானம் செய்ய முயன்றபடி நிலாவிற்கு ஒரு சிறிய புன்னகையை மட்டும் பரிசாகக் கொடுத்தான்.

நிலா மேற்கொண்டு ஏதேனும் கேட்கும் முன்பாக கௌஷிக் அவள் கரம் பிடித்து ஆசிர்வாதம் வாங்களாம் வா என பெரியோரிடம் அழைத்துச் சென்றிருந்தான். அம்பிகா பாட்டி நிலாவை கட்டியணைத்து உச்சி முகர்ந்தார். அவருக்கு அவரது மகள் இந்திராவே ஏதோ திருமணத்திற்கு தயாரானதை போல் தோன்றியது.

நிலாவின் அத்தைமார்கள் ஏனோ தானோவென அவளுக்கு ஆசிர்வதித்தாலும் எப்படியும் திருமணம் முடிந்தால் இவளை அடியோடு நறுக்கி விடலாமென்ற நிம்மதியில் நின்றனர். குப்தகேஷ்வரும் நந்தகேஷ்வரும் அவ்வாறல்லாமல் மனம் நிறைந்து வாழ்த்தினர்.  மனைவிமார்களின் சொல்லைத் தட்டாதவர்களென்றாலும் அவர்களுக்கும் நிலா மீது பிரியமுண்டு.

ஷேஷாவிற்கோ விட்டால் தன் நிலாவை தன்னிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று விடுவரோ என்ற பயம். ஏனெனில் கௌஷிக் அவளது கரத்தை விட்ட நொடி முதல் ஷேஷா இம்மியளவும் நிலாவை விட்டு நகரவில்லை.

வினோத் இவை அனைத்தையும் கவனித்தாலும் அவன் எண்ணமனைத்தும் ஒரே ஒரு விஷயத்தில் தான் இருந்தது. இத்திருமணம் சரியானதல்ல இதை உடனடியே நிறுத்தவேண்டும் என கத்த வேண்டும் போல் அவனது உள்ளுணர்வுகள் கதறியும் அவன் அதை வேளிகாட்டவும் இல்லை, அவன் வெறி வெளி வருவதற்கு ஹர்ஷனும் அனுமதிக்கவில்லை. எப்படியும் நிற்கப் போகும் திருமணத்தை கெடுத்து விட வேண்டாமே என்னும் நல்லெண்ணம்.

இவர்களது பாராமுகம் இசையின் மனதையும் குழப்பியது. இரவு நிகழ்ச்சி முடிவுபெற்று உறவினர்கள் விடைபெற்றுக் கொண்டதும் நிலா கேட்டுக் கொண்டதால் இசை நிலாவுடனே தங்கிக் கொண்டாள்.

இரவை எதிர்நோக்கியே காத்திருந்த வினோத் மற்றும் ஹர்ஷன் எவரிடமும் கூறிக்கொள்ளாமல் வீட்டை விட்டு கிளம்பி எங்கோ வேகமெடுத்தனர்.

நிலா தன்னறைக்கு வந்து விட்டதும் இசைக்கு மாற்ற துணியை கொடுத்து விட்டு எதற்சையாய் பால்கனி புறம் திரும்பிய போது தான் அங்கு அவள் வைத்த அம்ப்ரோசி இல்லாதிருப்பதை கவனித்தாள்.

" எங்க போச்சு?? " என சிந்தித்தவளுக்கு இவ்வாறு மலர் காணாமல் போவது இதுவே முதல் முறை. அவள் என்றும் வாங்கி வரும் பர்புல் டெய்சிகள் காலை விடிந்தாலே காய்ந்து தளர்ந்து விடுவதால் இந்த அம்ப்ரோசியையாவது அந்த செஞ்சூரியனோடு காண வேண்டுமென எண்ணினால் போலும்.

அதே நேரம் அவளை ஊடுருவி நோக்க வேண்டிய அந்த தங்கக் கண்கள் அந்த அம்ப்ரோசி மலரினை வாஞ்சையாய் தீண்டி வர அவனின் எதிர்பார்ப்பை பொய்க்காமல் அடுத்த சில நொடிகளில் அவனிருந்த அறை கதவு அடித்துத் திறக்கப்பட்டது.

வாயிலில் பச்சை நிறக் கண்கள் கொண்ட திடமான ஒருவனை பின் தொடர்ந்து பலுப்பு நிறக் கண்கள் கொண்டவன் முன்னேறினான். அம்ப்ரோசி மலரிலிருந்து பார்வையை நிமிர்த்தியவனின் முன் நின்றது வினோத் மற்றும் ஹர்ஷனே.

வினோத் பச்சை நிறக் கண்களையும், ஹர்ஷன் பலுப்பு நிறக் கண்களையும் பெற்றிருந்தான். அவர்களிருவரும் மிருதேஷ்வரனை வெடிக்கத் காத்திருக்கும் எரிமலையின் அமைதியின் காரணம் புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர்.

" மிருதேஷ்வரா, உமக்கெவ்வாறு விடுதலை கிடைத்தது??? " என வினோத்தே தொடங்க, அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்த மிருதேஷ்வரன் " யாம் விடுதலை பெற்றதில் உமக்கு விருப்பமில்லையோ??? எவ்வாறிருக்கும்?? உனது தங்கை என் விழிகளில் விழுந்து விட்டாளே " என ஏளனமாய் கூறியது வினோத்தின் முஷ்டியை இறுகச் செய்தது.

" மிருதேஷ்வரா, நீ செய்வது தவறு. உமக்கான இடமிதுவல்ல. நீ ஞாலம் திரும்பவேண்டும். நீ மீண்டு வந்தது யமக்கு மகிழ்ச்சியேயானாலும் யமக்கு அவள் ஒருவளது நலன் தான் பெரிது. நீ இங்ஙனமிருப்பதை எவரேனும் அறிந்தால், நீ தேடி வந்திருப்பது அவள் ஒருவளைத் தானென்பதை மிகவும் எளிதாய் அறிந்து கொள்வர். எம் கூற்றை செவிமடுத்து ஞாலம் திரும்பிடு " என ஹர்ஷன் பொருமையாய் அவனுக்கு எடுத்து கூறியபோதும் அவன் வதனத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை.

" இங்ஙனம் கூறுவதை செவிமடுக்கும் கடமை எமதல்ல ஹர்ஷவர்தா. யானுரைப்பதையே தாம் செவிமடுக்க வேண்டும். தம் கூற்றை யான் செவிமடுக்க வேண்டிய எவ்வொரு அவசியமும் எமக்கன்று " என மிருதேஷ்வரன் கம்பீரமாய் கர்ஜிக்க அவனது கர்ஜனையில் வினோத் மற்றும் ஹர்ஷன்  தனிச்சையாய் அவனுக்கு தலை பணிந்ததோடு மண்டியிடாதிருக்க பெரும்பாடு பட்டனர்.

" யாமிதை உமக்கு சரிசமமானவாய் வினவவில்லை, மிருதேஷ்வரா. உமது தோழனாய் கூறுகிறேன். எம் கூற்றை செவி மடுத்து ஞாலம் திரும்பிடு " என அப்போதும் ஹர்ஷன் கலக்கத்தோடு அவனை பார்ப்பதை தவிர்த்தான்.

" எனில் என்னவளை எவனோ ஒருவனிடம் தாம் கரம் பிடித்துத் தருவதை எவ்வாறடா என்னை காணச் சொல்கிறாய்??? " என மிருதேஷ்வரன் கேட்ட கேள்வியில் நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர்.

" நீவிர் அறியாததொன்றுமில்லை. இத்திருமணம் எந்நிலையிலும் ஈடேறப்போவதில்லை. ஆயின் இதை செயல்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் யாம். " என வினோத் அமைதியாய் விளக்கத்தை கூறினான். " எமக்கெவ்வொரு விசனமும் அறிய வேண்டா. யான் மீண்டு வந்ததை விரைந்து சென்று தெரிவிக்க வேண்டியவரிடம் தெரிவியுங்கள். தாம் மேற்கொண்டு செயல்படுத்த வேண்டியவையை அவன் தெளிவு படுத்துவான் " என அவர்களது விழிகளை நேருக்கு நேராய் பார்த்து கூறியவன் அங்கிருந்து செல்ல முற்பட்டபோது " நில் மிருதேஷ்வரா. இன்னும் நின் எவ்வாறு விடுதலை பெற்றாய் என்பதை கூறவில்லையே. " என வினோத் அவனை தடுத்தான்.

அதற்கு அவனை ஒரு பார்வை பார்த்தவன் " எமக்கு என்றும் அழிவில்லை தானே. பின்பு உமக்கே தெரிந்திருக்க வேண்டாமா மீதமுள்ளை ஒரே வாய்ப்பு அதுவே தானென்று " என மிருதேஷ்வரன் சாதாரணமாய் கூற " பொய்யுரைக்க முயலாதே, மிருதேஷ்வரா. புவியில் அவ்வாறு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட்டு முடிவு நாள் வரவில்லை " என ஹர்ஷன் பொங்கி எழுந்தான்.

" புவியில் தான் எவ்வொரு நிகழ்வும் நிகழ வேண்டுமென்றல்ல ஹர்ஷவர்தா. புவியோடு இணைத்து மாயலோகம் மட்டுமல்லாது ஆகாயலோகம் ஆழிலோகம் மற்றும் சர்ப்பலோகமென்று முவ்வேறு லோகங்கள் இருப்பதை மறவாதே. எமக்கான நாழியும் நெருங்கியதோடு சிம்மலோகனமும் எமக்கு கிடைத்தாகிவிட்டது " என கணீரென்ற குரலில் உரைத்தவனை அவ்விருவரும் அதிர்ச்சியாய் நோக்க ஐவேறு பூதங்களின் நிறத்தை குறித்து இறகு போல் சுற்றி தங்கத்தில் ஜொளித்தது மிருதேஷ்வரனின் நெஞ்சில் தொங்கிய சிம்மலோகனம்.

வினோத் மற்றும் ஹர்ஷன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மிருதேஷ்வரன் அங்கிருந்து மறைய, இருள் பூசிய வாணினை தன் செஞ்சூரிய கதிர் கொண்டு ஒறியூட்டினான் அதிகாலை சூரியன்.

ஹர்ஷன் மற்றும் வினோத் அதற்கு மேலும் தாமதிக்காமல் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி விரைந்தனர்.

அன்றைய விடியல் யாருக்கு என்ன விழை வித்ததோ அந்நாளின் முடிவில் தான் எதையும் அறிந்து கொள்ள முடியும்.

கல்லூரி வளாகத்தில் தன் தோழியோடு ஏதோ உறையாடிக் கொண்டிருந்தவள் தன்னை யாரோ அழைக்கும் அரவம் கேட்டு சுற்றி பார்க்க, அவளுக்கு கேட்டதை போல எவரும் அவளை அங்கு பெயர் வைத்து அழைக்கவில்லை.

குழப்பமாய் திரும்பியவளின் தோழியும் எங்கோ விடைபெற்றுச் செல்ல, சரி பாடவேளை தொடங்கும் முன் வகுப்பிற்காவது செல்லலாமென நடையை கட்டியவளின் நடை தடை படுவதை போல் கேட்டது அவள் செல்பேசியிலிருந்து வெளிபட்ட ஒரு சத்தம்.

அதன் உள் செல்லும் முன்னே யாரோ ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதை கண்டதும் நெற்றிப் புருவம் வில்லை போல் வளைய " பாப்பு மெஸேஜ் பண்ணியிருக்கா. ஹ்ம்ம்ம் ஸ்கூல்ல இருந்துக்குட்டு எப்படி ஃபோன் யூஸ் பண்ணுவா?? ஒருவேளை இன்னைக்கும் லீவப் போட்டுட்டாளோ??? " என குறுஞ்செய்தியை கூட பார்க்காமல் விதவிதமாய் யோசித்துக் கொண்டிருந்தவளை சுற்றி ஏதோ மாறுதல் ஏற்பட்டது.

அவளை கடந்து சில நிழல்கள் விரைந்து மறைய அதை வெகு தாமதமாகவே உணர்ந்து சுற்றி நோக்க முயற்சித்தவளின் செல்பேசி திடீர் அதிர்வுடன் கீழே விழ அதில் " பப்பிமா, உன்ன பார்க்க சில பேர்வருவாங்க பயந்துடாத. என்ஜாய் " என்று வந்திருந்த குறுஞ்செய்து ஒளிரும் போது அவளை சூழ்ந்த கரும்புகைகளால் அங்கிருந்து கடத்தப்பட்டாள் அவள், வான்மதி.

ஆதவனின் வென்மதி அவளா ...

ஹலோ இதயங்களே!!! இன்றைய நாள் என்ன நாள்னு தெரியுமா உங்களுக்கு??? நானும் பப்பிமாவும் பிரதிலிபில சந்திச்சு பேசுன முதல் நாள். அத ஸ்பெஷலா கொண்டாடத் தான் எனக்கு ஆசை. பட் இது போதும்.

ஹே பப்பிமா ... எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. ஆனா நீ எனக்கு கிடைச்ச ஒரு அற்புதமான தங்க முத்து. அதை என்னைக்கும் நான் தொலைச்சிட கூடாதுன்னு ஆசை படுறேன். என் வாழ்கைல உன்னோட முக்கியத்துவம் - இல்ல இல்ல என்  வாழ்கை மட்டுமில்லாம என் கதைகள்ளையும் உன்னோட முக்கியத்துவமும் அவசியமும் ரொம்ப முக்கியம். ஏதோ உளறுறேன். உன் அளவுக்கு எனக்கு ஸர்ப்ரைஸ் ப்லன் பண்ண தெரியாது பப்பிமா 😄 ஏதோ என்னால முடிஞ்சிது. நீ விழியின் வழி ஷிவன்யாவுக்கு ஃப்ரெண்டாகனும்னு நினைச்ச. ஆனா நா உனக்கு நிலாவோட வாழ்கைல போன வருஷமே ஒரு கதாபாத்திரத்த உருவாக்கீட்டேனே😜

ஓக்கே ஹப்பி முதல் வருட சந்திப்பு நாள் பப்பிமா 😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤spellWritezz12

இதயங்களே அடுத்த பதிவோட திரும்ப வருவேன். இதெல்லாம் சீன் போடுற மாரி இருக்குன்னு நினைக்கிறவங்க தாராளமா நினைக்களாம். நான் எதுவும் தப்பா நினைச்சிக்க மாட்டேன். டாட்டா இதயங்களே..

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro