கற்பனை 26
அவள் கூறியதை கேட்டவன் ஒரு கணம் திகைத்து
"நந்தினி என்ன சொல்ல வர்ற இப்போ"என்று கேட்க நந்தினி தெளிவாக
"நான் இதுல ரொம்ப தெளிவா இருக்கேன் கதிர்.நாம சேர்ந்து வாழலாம் ஆனா இன்னும் 10 வருசத்துக்கு பிறகு நம்ம வாழ்க்கைய திரும்பி பார்த்தோம்னா நம்ம வாழ்க்கைல ஒரு காற்புள்ளி,ஆச்சரியக்குறி ஏன் முற்றுப்புள்ளி கூட இருக்காது.ஆனா கேள்விக்குறி மட்டும் இருக்கும்.இப்படி நாம சேர்ந்து வாழனுமா இல்லை நாம பிரிஞ்சி நம்மளோட மீதியா இருக்குற வாழ்க்கைய அர்த்தமுள்ளதா மாற்றுவோமா? எனக்கு எதுன்னாலும் ஓக்கேதான்" என்று கூற கதிருக்கு இப்போது தலை சுற்றியது.வீட்டில் எப்போதும் அமைதியாக இருக்கும் அவள் மணிரத்னம் படத்தில் வருவது போல இப்படி ஒரு கருத்தை கூறுவாள் என்று சிறிதும் எண்ணவில்லை.
"நந்தினி நீ சொல்ரது எல்லாமே சரிதான் ,ஆனா நாம பிரிஞ்சிட்டோம்னா உங்க அம்மா அப்பா மனசு எவ்வளவு பாதிக்கப்படும்னு நீ யோசிக்கலையா?" என்று கேட்க சிறிது யோசித்தவள்
"நீங்க சொல்றது கரக்ட்தான் கதிர், ஆனா அவங்க கவலைப்படுவாங்கன்னு நம்ம லைப்ப கெடுத்துக்க முடியாதுல்ல.மத்தவங்களுக்காக எதுக்கு நாம வாழனும்.அப்புறம் என்னோட அம்மா அப்பாதானே நான் பார்த்துக்கிறேன்"என்று கூற கதிருக்கு கூற எதுவுமில்லாமல் போனது.
ஒரு வாரம் கழித்து நந்தினியின் தாய் தந்தையரின் வீட்டிற்கு சென்ற அவர்கள் தங்களின் முடிவு பற்றி கூற தன் மகளை சிறிதும் கடிந்து கொள்ளாத அவளின் தந்தை முதன் முதலாக பளாரென்று அறைந்தவர்
"என்ன நந்தினி உன் வாழ்க்கைய டிசைட் பண்ற முடிவ நாங்க உனக்கு குடுத்திருந்தது என்னமோ உண்மைதான்.ஆனா அத வெச்சி நீ இவ்வளவு அட்வாண்டேஜ் எடுத்துக்குவேன்னு நான் கனவுலயும் நினைக்கவில்லை. என் பொண்ணு என்னைக்குமே சரியான முடிவ மட்டுமே எடுப்பான்னு நினைச்சிருந்தேன். ஆனா முதன் முதலா என்னோட கணிப்பு தவறுன்னு நீ நினைக்க வெச்சிட்ட"என்று அவளின் முகம் பார்க்காமல் கோவத்தில் அவ்விடத்தை விட்டு செல்ல இவ்வளவு நாளும் தன் தாய் தந்தையரால் சிறியதொரு மனக்கஷ்டத்தையும் காணாதவள் இன்று தன் தந்தை இப்படி கூறியதும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அவள் வாழ்வில் முதன் முதலாக தன் தந்தையால் கண் கலங்கியவள் தான் எடுத்த முடிவு தவறோ என்று நினைக்க எப்போதும் தனக்கு ஆதரவாக பேசும் தன் தந்தையே தன்னை புரிந்து கொள்ளாத போது பண்பாடு ,கலாச்சாரம் என்று பேசும் தன் தாய் எப்படியும் தன் முடிவை புரிந்துகொள்ளமாட்டார் என்று நினைத்தவள் தன் தாயிடம் பேசாமல் வெளியில் செல்ல முயல அவளின் தாய்
"நந்தினி"என்று கூற அவர் பக்கம் திரும்பியவளை தன் பக்கம் இழுத்து அவளை அனைத்துக்கொண்டார்.
"நீ எடுத்த முடிவு சரியா தவறான்னு என்னால சொல்ல முடியாதுமா.ஆனா உன் அம்மா இப்பவும் நீ சரியான முடிவுகளை மட்டுமே எடுப்பேன்னு நம்புறேண்டா.சோ நீ எதுவும் கவலைபடாத.உன் அம்மா எப்போதுமே உங்கூட இருப்பேன்"என்று கூற நந்தினிக்கு ஆச்சரியமாக இருந்தது.
"ஆனா அம்மா ,அப்பா.."என்று இழுக்க அவளை பார்த்து புன்னகைத்த அவளின் தாய்
"ஹேய் அவரு பாவம்டி, அவரு வெளி உலகம் ,ஆபீஸ் ஒர்க், ப்ராஜக்ட் இது பத்தி எல்லாம் நல்லா தெரியும்.ஆனா நீ இப்படி ஒரு முடிவ எடுத்திருக்கேன்னு தெரிஞ்சதும் அவருக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியல, அதான் அப்படி பேசிட்டாரு.அப்புறம் நிஜமா அவருக்கு உன் மேல கோவம் இருக்காது.உன் வாழ்க்கை இதுக்கு அப்புறம் என்னவாகும் என்ற பயம்தான் அவருக்கு.நார்மலா எனக்குத்தான் அந்த பயம் வரனும்,ஆனா உங்கப்பாக்கு அந்த பயம் வந்திருக்கு.இதுல இருந்து தெரியல அவரு உன்மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்காருன்னு" என்று தன் தாயை முறைத்தவளை
"ஹேய் நீ என்ன கேட்க போறேன்னு தெரியுது.அப்போ எனக்கு பாசம் இல்லையான்னு கேட்க போற.நம்ம பசங்க கெட்டது இல்லாம எது செஞ்சாலும் ஒன்னு அப்பா சப்போர்ட் பண்ணனும் இல்லை அம்மா சப்போர்ட் பண்ணனும்.இன்னைக்கு உங்க அப்பா சப்போர்ட் பண்ணல அதான் நான் உனக்கு சப்போர்ட்டா இருக்கேன்.அப்புறம் உன்னோட முடிவு ஒன்னும் கெட்ட விசயம் கிடையாதுடா.இன்னும் எத்தனை வருசம் நாங்க வாழ போறோம். இப்போ எங்களுக்காக நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தீங்கன்னா நாங்க இல்லாதப்போ உங்க வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லாம போயிடும். அந்த தவறு எங்களால நடக்க கூடாதுமா.அப்புறம் பொய்யின்னா நீ இருந்து பாரு. இன்னைக்கே உங்கப்பா உங்கிட்ட வந்து பேசுவா"என்று கூற அங்கு கதிர் என்ன பேசுவது தெரியாமல் நின்றவனின் நிலைமையை கண்ட நந்தினியின் தாய்
"என்ன கதிர் யோசிக்கிற"என்று கேட்க அவன்
"அத்தை எல்லாமே என்னாலதான். நாந்தான் நந்தினி வாழ்க்கைய பாழாக்கிட்டேன். நாங்க சேர்ந்தே வாழ்றோம்"என்று கூற இப்போது அவனை முறைத்த நந்தினி
"லூசு மாதிரி பேசாதீங்க கதிர்.இதுக்கு அப்புறமாச்சும் நம்ம வாழ்க்கைய நம்ம வாழலாம்.என் மனசுக்கு சரின்னு பட்டத நான் செய்றேன்.அது சரியா இருந்தா கண்டிப்பா என்ன மட்டுமே காதலிக்கிற ஒருத்தன் வருவான்"என்று கூறினால்.அவள் கூறியதை கேட்டது கதிர் மனதுக்குள்
'திருமணத்திற்கு முன்பென்றால் அப்படியாராச்சும் இருந்திருக்கலாம் நந்தினி.ஆனா இப்போ எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல'என்று எண்ணிக்கொண்டான்.
நந்தினியின் தந்தை அன்றே அவளிடம் பேசவில்லை.அவர் அவளுடன் சகஜமாக பேச ஒரு வாரம் ஆனது.இந்த ஒரு வாரமாக நந்தினி அவளின் தாய் தந்தையருடன் இருக்க கதிர் தனியாக அவர்கள் வீட்டில் இருந்தான்.நந்தினியின் நிலமையை விட கதிரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.தன் வாழ்க்கை இனி என்னவாக போகின்றது என்ற பயம் அவனை தினமும் கொன்றது.உழைப்பதற்கு வேலை, வாழ்வதற்கு பணம், இருக்க வீடு இது எல்லாமே அவனுக்கு ஒரு சராசரி மனிதனுக்கு இருக்க வேண்டியதைவிட அதிகமாகவே இருந்தது.ஆனால் பாசம் காட்ட இருந்த ஒரே ஒரு உறவு நந்தினி , இப்போதும் இனி அவளும் இல்லை என நினைக்கும் போது என்ன செய்வது என்றே அவனுக்கு புரியவில்லை.பல நாட்களின் பின் அவன் தனது வாட்பெட்டுக்குள் நுழைந்தவன் தனது கதையின் இறுது எபிசோட்டுக்கு வந்த காமண்ட்ஸ்களை படித்தான். எல்லோரும் முடிவை மாற்றி ஆல்டர்னேடிவ் முடிவு கொடுக்குமாறு கேட்டிருக்க அவன் மனதில் ஒரு வேலை தான் அப்படியான ஒரு முடிவை கொடுத்தால் கானாமல் போன ஆகாஷனாவிடம் இருந்து ஏதும் மெசேஜ் வரலாம் என்ற நப்பாசை அவன் மனதில் தோன்றியது.
ஆனால் அவன் மனது இடைப்பட்ட அந்த 4 வருட இடைவெளியை யோசிக்க தவறியது.
நந்தினியின் கைபேசி அலற அதை எடுத்து பார்த்தவள் சந்தியாவின் பெயர் வர புன்னகையுடன்
"ஹேய் லூசு என்ன பண்ற.எப்படி இருக்க.லாஸ்ட் வீக் எத்தனை வாட்டி கால் பண்ணேன் தெரியுமா? நீ ஆன்சர் பண்ணவே இல்லை"என்று கேள்வி மேல் கேள்வி கேட்ட தோழியை தன் ஆருயிர் தோழியை சந்தியா
"ஓய் ஓய் அடங்கு.என்னடி இவ்வளவு கேள்வி கேட்குற.லாஸ்ட் வீக் என் மொபைல் மிஸ் ஆச்சிடி.அதான் புது மொபைல் வாங்குறதுக்கு கொஞ்சம் டைம் ஆகிடிச்சி.ஆமா அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க"என்று கேட்டவளை நந்தினி
"சூப்பரா இருக்காங்கடி.நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்னுதாண்டி அத்தனை தடவை கால் பண்ணேன்.ஆனா இப்போ அது ஒரு மாதிரி பேசி சால்வ் ஆகுற நிலைமைல இருக்கு"என்று கூற சந்தியா
"என்னடி விசயம்டா எனிதிங்க் சீரியஸ் "என்று கேட்க கடந்த சில நாட்களாக நடந்த எல்லாவற்றையும் அவளுக்கு கூற முதலில் ஆத்திரப்பட்ட சந்தியா
"நீங்க ரெண்டு பேரும் என்ன லூசா.ரெண்டு வருசம் சேர்ந்து வாழ்ந்துட்டு இப்போ பிரிஞ்சி போக போறோம்னு சொல்றீங்க.என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்"என்று எகிற மறுபக்கம் நந்தினி அமைதியாக இருப்பதை கண்டு எரிச்சலுற்ற சந்தியா
"இங்க பாரு நந்தினி நீங்க டைவோர்ஸ் பண்ணிக்கிட்டா கதிருக்கு உடனே பொண்ணு கிடைச்சிடும்.ஆனா உன் நிலைமைய யோசிச்சி பார்த்தியா" என்று கூற
"ஏண்டி எல்லோரும் ஒரே மாதிரி பேசுரீங்க.பிடிக்காத வாழ்க்கைய எத்தனை நாள்டி வாழ்றது.அதுக்கு பேசாம செத்து போகலாம். எனக்கும் மனசு இருக்குடி. அதுலயும் ஆசைகள் எல்ல்லாம் இருக்கு.என் கணவர் எப்படி இருக்கனும் நாங்க எப்படி வாழனும்னு.அது இல்லைன்னு ஆனாலும் பரவாயில்லை ஒருத்தராச்சும் அவங்க கனவுகள விட்டுட்டு தன்னோட பார்டனருக்காக வாழலாம்.ஆனா எங்ஜ விசயத்துக நாங்க ரெண்டு பேரும் எங்க கனவுகள விட்டுட்டு வாழனும்னு இருக்கு.இப்படி ஒரு வாழ்க்கை வேணுமான்னு யோசிச்சிப்பாரு சந்தியா.அட்லீஸ்ட் இப்போ பிரிஞ்சாலாச்சும் பிடிக்காத வாழ்க்கைய வாழாம பிடிச்ச வாழ்க்கைய தேடிப்போனோம் என்று நிம்மதியாச்சும் இருக்கும். ஊருல நடக்குற பல கள்ள உறவுகள் எதனால வருது.கணவன் மனைவி அவங்களுக்குள்ள மனசு விட்டு பேசிக்காததுதான்.எங்க வாழ்க்கையும் அப்படி சீரழியனும்னு நினைக்கிறியா ?" என்று கேட்க இனி எது சொன்னாலும் நந்தினி தன் முடிவில் இருந்து மாறமாட்டாள் என்று அறிந்த சந்தியா அடுத்து கூறிய பதிலில் நந்தினி சந்தோசம் கொண்டாலும் இதனால் இனி என்னென்ன குழப்பங்கள் வர போகின்றதோ என்று யோசிக்கலானாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro