7
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் லட்சுமிக்கு நரகம் போல நகர்ந்தது. விக்னேஷிற்கும் பிருந்தாவுக்கும் நடந்த பிரச்சினை சம்பந்தமாக பல செய்தி நிருபர்களின் கேள்விகளுக்கு லட்சுமியே பதில் கூற வேண்டியிருந்தது. பிருந்தாவோ தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் போல சாதாரணமாக இருந்தாள்.
இரவு நேரங்களில் மிகவும் சீக்கிரமாகவே தூங்கவும் செய்தாள். முன்பெல்லாம் இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் பிருந்தா இப்போது மிகவும் சீக்கிரம் தூங்குகிறாள் என்பது பற்றி லட்சுமி யோசித்தாலும் அதைவிட பெரிய விடயமான வெளி நபர்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவதில் இருந்த டென்சனில் இதைப் பற்றி யோசிக்க மறந்தாள்.
இந்த சம்பவம் சினி உலகையே ஒரு பெரிய ஆட்டம் காணவைத்தது. விக்னேஷுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் பிருந்தாவின் செயலை ஆதரித்து ஒரு கூட்டமும் பிரஸ் மீட், மீட்டிங்க் என தமிழ் சினி உலகே அல்லோலப்பட்டது. ஆனால் விக்னேஷுக்கு இருந்த அரசியல் செல்வாக்கால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. பிருந்தாவுக்கும் ஆதரவு இருந்தாலும் அவளை வைத்து படம் செய்ய எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. பாதிக்கு மேல் படமாகி இருந்த நான்கு படங்களை மட்டும் அவளை பூரணப்படுத்த கேட்ட தயாரிப்பாளர்கள் மீதிப்படங்களுக்கான அட்வான்சை மீள பெற்றுக்கொண்டனர். இவை அனைத்தும் நடந்த போதும் பிருந்தா "லட்சுமி இன்று சூட்டிங்க் இருக்கின்றது" என்று கூறினாள் .
அவள் இந்த எந்த விசயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இவளது இந்த நிலைப்பாடே அவளை திமிர் பிடித்தவள் என்று இண்டஸ்ட்ரியில் புறணி பேச வைத்தது.
அவார்ட் பங்கசனுக்கு செல்ல ஒரு மணி நேரம் முன்பு லட்சுமி,
"பிருந்தா நீ கமிட் ஆகியிருந்த எல்லா படமும் முடிச்சாச்சி. இனி உன் கைல எந்த படமும் இல்ல. இப்போ இருக்குற நிலைமைல உனக்கு எந்த தயாரிப்பாளரும் படம் கொடுக்க முன் வர மாட்டாங்க.
வினீத் படத்துக்கு அப்புறமா நடிச்ச மூனு படங்கள் வெறும் காமர்ஷியல் மூவீஸ். அதுல உன்னோட நடிப்ப பார்த்து வாய்ப்புக்கள் வரும் என்று நாம நினைச்சா உலகத்துலயே மிகப்பெரிய முட்டாளுங்க நாமதான். ஆனா கடைசியா முடிச்ச படத்துல உன்னோட நடிப்புக்கு கண்டிப்பா நல்ல பெயர் கிடைக்கும். இந்த சினிமா உலகுல நாம நிலைச்சி இருக்கனும்னா ஒன்னு நம்மளோட நடிப்பு திறமைக்கு வாய்ப்பு கிடைக்கனும், இல்லைன்னா அட்ஜஸ்ட் பண்ணி போகனும். இரண்டாவது ஆப்சன் நாம வேணாம்னு எப்பவோ முடிவு செஞ்சாச்சி. கடைசி படம் ரிலீஸ் ஆக எப்படியும் இன்னும் ஒரு சில மாதம் ஆச்சும் போகும்" என்றவளை பிருந்தா
"அவ்வளவு நாள் ஆகுமா" என்று கேட்க லட்சுமி
"இந்த டைரக்டர் போஸ்ட் புரொடக்சன் வொர்க்ல ரொம்ப பெர்பக்சன் பார்ப்பாரு. சோ கண்டிப்பா குறைந்தது ஆறு மாசம் போகும். அதுவரைக்கும் நம்ம இங்க இருக்க வேணாம். வேற எங்கேயாவது போயிடலாம்" என்று கூற பிருந்தாவோ
"நாலு படத்தோட அட்வான்ச திரும்ப கொடுத்ததால் நம்ம கைல இப்போ பணம் கம்மியாத்தான் இருக்கு" என்றவளை லட்சுமி
"அத நீ சொல்லவேணாம். இப்படி ஏதும் ஆகும்னு தெரிஞ்சிதான் நான் உன்னோட இன்னொரு அக்கவுண்ட்ல கொஞ்ச காச வேறயா போட்டிருந்தேன். ஒரு backup ப்ளான் மாதிரி. மொத்தமா சேர்த்தா நம்ம கிட்ட இப்போ ஒரு நாட்பது இல்லைன்னா நாற்பத்தி ஐந்து லட்சம் காசிருக்கு" என்க, பிருந்தா
"சரி உன் இஷ்டம் லட்சுமி, ஆனா இந்த காசும் முடிஞ்சிதுன்னா நம்ம கைல எதுவுமே இருக்காது. அப்புறம் உனக்கு சம்பளம் கொடுக்கக் கூட என்கிட்ட காசு இருக்காது. நான் வேணும்னா உன் வீட்டுக்கு வந்து பாத்திரம் தேச்சி கொடுக்கிறேன், நீ எனக்கு சம்பளம் கொடு"என்று கூற அவளை முறைத்த லட்சுமி
"அதெல்லாம் எதுவும் ஆகாது. நீ போறதுக்கு தேவையான விசா, டிக்கட் வேலை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். இன்னைக்கு அவார்ட் பங்க்சன்ல மட்டும் உன்ன பேச சொன்னா 'எல்லா புகழும் இறைவனுக்கே' அப்படின்னு சொல்லிட்டு வந்துடு. எவன் எந்த கேள்வி கேட்டாலும் சிரிச்சிக்கிட்டே இரு. எந்த பதிலும் கூறாத" என்றவளை பிருந்தா "சரி " என்றாள்.
அவார்ட் பங்க்சன் முடிந்ததும் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிருந்தா தனியாக மாட்டிக்கொண்டாள். காரணம் அவர்களின் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்திருந்தாலும் அவள் மட்டும் அங்கு தனித்து விடப்பட்டிருந்தாள்.
வினீத் விழாவுக்கே வராமல் இருக்க ஷ்யாமோ விருதை வாங்கிய கையுடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவனுக்கு கால் செய்து அவனையும் இங்கு வரவைக்கலாம் என போன் செய்ய அவனோ அவளது காலை கட் செய்தான்.
தன்னால் முடிந்த வரை பத்திரிகையாளர்களை சமாளித்த பிருந்தா ஒரு கட்டத்தில் முடியாமல் போக' எல்லாப் புகழும் இறைவனுக்கே' என கூறி எழ முற்பட ஒரு நிருபர்
"உங்களுக்கும் ப்ரொடியூசர் ராமலிங்கத்துக்கும் ஏதோ பெர்சனல் அப்பையர் இருக்காமே?" என்று கேட்க அவளுக்கு கோபம் தலைக்குமேல் ஏறியது.
அவள் கோபத்துடன் பதில் கூறினால் ஏடாகூடமாக எதுவும் கூறிவிடுவாள் என்று பயந்த லட்சுமி
"என்னங்க நீங்க, இப்படியா ஒரு புதுமுக நடிகைகிட்ட கேள்வி கேட்பீங்க. ஒரு இங்கிதம் வேண்டாமா" என்று கூற அங்கிருந்த நிருபர்களில் வில்லங்கம் பிடித்த ஒருவர்
"அதெல்லாம் இருக்கட்டும் , அவங்க கிட்ட கேள்விகேட்டா எதுக்கு நீங்க பதில் சொல்றீங்க. ஒன்னு ஆமா இல்லைன்னா இல்லைன்னு பதில அவங்களே சொல்லட்டுமே"என்று கேட்க எப்போதும் கோபத்தில் தன்னை மறந்து செயல்படும் பிருந்தா
"ஆமா அவரோட இரண்டாவது படத்துல நடிக்க நான் சான்ஸ் கேட்டதுக்கு அவரு என்ன கேட்டாரு, போதுமா" என்க அங்கிருந்த எல்லோரும் வாயடைத்து போக லட்சுமியோ தலையில் அடித்துக்கொண்டாள்.
சினி உலகில் சில விடயங்கள் இலைமறை காயாக இருக்கும் வரை அது கிசு கிசுவாகவே முடிந்துவிடும்.
ஆனால் அதுவே ஒரு தரப்பினரால் உண்மை என ஏற்றுக்கொள்ளப்படும் போது அது சினிமா வட்டாரத்தையே ஒரு கலவரத்தை ஏற்படுத்தி விடும்.
பிருந்தா நடிக்க ஆரம்பித்த இந்த மூன்று மாதங்களில் அவளால் பல பேரின் உண்மை முகங்கள் வெளிப்பட ஆரம்பித்திருந்ததால் அவளுக்கு சினிமா வட்டாரத்தில் பல முகம் தெரியாத எதிரிகள் உருவாகியிருந்தனர். அவளோ தனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல இருந்தாள்.
அதற்கு முக்கியமான காரணம் அவள் தனது ஆறு வயதில் கண்ட கொடூரமான கோர சம்பவங்கள்.
அடுத்த நாள் ராமலிங்கத்தை எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பிக்க அவரோ சாதாரணமாக
"அந்த பொண்ணு ஏன் என் பெயர அப்படி சொன்னதுன்னு தெரியல. அவங்க அம்மாவுக்கு கேன்சர் இருக்குன்னு சொல்லி என்கிட்ட காசு கேட்டா. ஆனா என்னால அவ கேட்ட பணத்த கொடுக்க முடியல. அப்படி இருந்தும் நான் ஏதோ என்னால முடிஞ்ச பணத்த கொடுத்தேன். ஏன்னா அந்த பொண்ணு ரொம்ப நல்ல ஒரு நடிகை. ஆனா உதவி செஞ்ச என்மேலயே அந்த பொண்ணு இப்படி ஒரு பழி போடும்னு நான் நினைக்கல" என்று கூறியவர்
"இப்போ அந்த பெண்ணால பலபேருக்கு சினிமா இண்டஸ்ட்ரில பிரச்சினை ஆகியிருக்கு. அதனால அந்த பொண்ணுக்கு காலவரையறை அற்ற ரெட் கார்ட் கொடுத்திருக்கோம்" என்றார்.
இதுவெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்திருந்த லட்சுமி அடுத்து வரப்போகும் நாட்களில் பிருந்தாவின் உயிருக்கு கூட ஆபத்து வரலாம் என நினைத்து அவளை அங்கிருந்து வெளி நாடு அனுப்ப முடிவெடுத்தவள் அதை உடனே ஏற்பாடும் செய்தாள்.
அந்த ஏற்பாட்டை பிருந்தாவிடம் கூட கூறாமல் ரகசியமாக செய்தவள் அடுத்த நாள்
"பிருந்தா, உன்னோட முக்கியமான திங்க்ஸ மட்டும் எடுத்துக்கிட்டு கிளம்பு. நீ இப்பவே வெளியூருக்கு போகனும்" என்று கூற பிருந்தா
"எதுக்கு இதெல்லாம். இங்கே இருந்தா என்னோட உயிருக்கு ஏதும் ஆபத்து வரும்னு நினைக்கிரியா. இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுற ஆளு நான் இல்லை. நான் யாரோட பொண்ணுன்னு தெரியும்ல"என்று கூற அவளை முறைத்த லட்சுமி
"வாயை மூடு பிருந்தா, இதுக்கு மேல எதும் பேசின உன்ன அடிச்சிடுவேன். இருக்குற வேலை எல்லாம் அப்படியே வெச்சிட்டு உடனே கிளம்பு" என்றவளின் அதிகாரமிக்க பேச்சுக்கு அவளால் மறுத்து எதுவும் பேச முடியவில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro