3
படப்பிடுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த பிருந்தாவை கண்ட பக்கத்து வீட்டு அக்கா
"என்னம்மா இப்போதான் வரியா.நீ காலைல போனதுல ருந்து அம்மாக்கு உடம்பு ரொம்பவே முடியாம போயிடிச்சுமா. அன்வர் தம்பிதான் ஹாஸ்பிடலுக்கு கூட்டி போய் இருக்கு" என்று கூற உடனே தான் வந்த வாகனத்திலேயே ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்றால்.
கேன்சர் இன்ஸ்டியூட் வந்து சேர்ந்தவள் தன் தாய் இருக்கும் வார்டிட்கு சென்றாள். அங்கு பல மனிதர்கள் முகத்தில் பொலிவிழந்து, முடிகளை இழந்து தங்கள் வாழ்க்கையின் ஆணிவேர் சாய்ந்தது போல இருப்பதை கண்டவளுக்கு கடவுள் மீது கோபம்தான் வந்தது.உள்ளே சென்று தன் தாயை கண்டதும் அவரிடம் சென்றவள்"என்னம்மா காலைல நான் போகும் போது நல்லாதானே இருந்த" என்று கேட்க"என்னன்னு தெரியலம்மா, நீ போகவும் ஒரே ரத்த வாந்தியா வந்தது, நல்லவேலை அன்வர் தம்பி வந்திச்சி. இல்லைன்னா மயங்கி விழுந்திருந்தாலும் விழுந்திருப்பேன். எப்பவோ போக வேண்டிய உசிரு இன்னைக்கே போயிருக்கும்" என்ற தன் தாயை முறைத்தவள்
"என் உசிரு இருக்குற வரைக்கும் உன்ன போகவிட்ருவேனா? இரு நான் போய் டாக்டர பார்த்துட்டு வர்றேன் "என்று கிளம்பியவள் அன்வரை பார்த்த்ய் கண் ஜாடையால் வெளியில் வரும்படி கேட்டுக்கொண்டாள்.அவளின் பின்னாலேயே சென்ற அன்வர்
"அன்வர் அண்ணா அம்மாக்கு என்னாச்சி. அந்த சிடுமூஞ்சி டாக்டர் வேற நான் அவன்கிட்ட போனா பார்வையாலேயே என்ன கலங்கப்படுத்திடுவான்" என்று கூற அவளின் நிலை அறிந்த அன்வர்
"நீ போக வேணாம் பிருந்தா, நான் அவருகிட்ட பேசிட்டேன்.அம்மாக்கு உடனே ஆபரேசன் செஞ்சாகனுமாம். ஒரு வாரத்துக்குள்ள ஆபரேசன் பண்ணனும்னு சொல்லிட்டாரு. உடனே இருபது லட்சம் ஏற்பாடு பண்ண சொல்லிருக்காரு"என்று கூரியவன் கொஞ்சம் தயங்குவதைக் கண்டவள்
"வேற என்னண்ணா ஏன் ஒரு மாதிரி தயங்குற"என்று கேட்க அவனோ
"இல்லைம்மா இந்த ஆபரேசன் சக்சஸ் ஆச்சின்னா இன்னுமொரு ஆபரேசன் பண்ணனுமாம். அதுக்கு எப்படியும் குறைந்தது முப்பது லட்சம் தேவைபடும்னு சொன்னாரு.அதுவும் இந்த ஆபரேசன் பண்ணி 5 ஐந்து நாள்ள பண்ணனுமாம். சோ நம்மள ஐம்பது லட்சத்த ரெடி பண்ணிக்க சொன்னாரு. நம்ம காச கட்டினதும் அவங்க ஆபரேசன் வேலைய ஆரம்பிப்பாங்களாம். ஒரு ஆபரேசனுக்குத்தான் நம்மலால பணம் புரட்ட முடிஞ்சா அது தேவையில்லைன்னும் சொல்லிட்டாரு "என்றவரை தலையில் இடி விழுந்தது போல பார்த்தாள் பிருந்தா.தனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் என யோசித்தவள் வரும் வழியில் கடவுள் ஏன் இப்படி செய்கிறார் என யோசித்தவள் இப்போது கடவுள் நிஜமாக இருக்கின்றார்தானா என யோசிக்க ஆரம்பித்தாள்.
மனிதனுக்கு தன் வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை கொண்டு மறைவான விடயங்கள் மீது தான் கொண்ட நம்பிக்கையின் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் உண்மையான கடவுளின் விசுவாசி எப்போதும் கடவுள் மேல் தான் கொண்ட நம்பிக்கையை இழக்கமாட்டான்.இப்படியான சந்தர்ப்பங்களில் உறுதியான நம்பிக்கை இல்லாத ஒருவனால் கடவுளின் இருப்பை கேள்விகேட்காமல் இருக்கவே முடியாது. தாயை ஹாஸ்பிடலிலேயே விட்டு அன்வருடன் அவரின் ஆட்டோவில் வந்தவள் வீடு வந்தது பையில் இருந்து காசை எடுத்து
"எவ்வளவுண்ணா?" என்று கேட்டவளை முறைத்தவன்
"உள்ள வை பணத்த. பிருந்தா இங்க பாரு. உங்கம்மா கெட்ட தொழில் பண்ணிருந்தாலும் எனக்கும் அவங்க அம்மா மாதிரிதான். என்னால ஒரு இரண்டு லட்சம் புரட்ட முடியும். வட்டிக்கு வேணும்னா ஒரு பத்து லட்சம் வாங்கலாம். மீதிய என்ன பண்றதுன்னு யோசி" என்று கூறியவன் அவளை இறக்கி விட்டு சென்றான்.
தன் கூட பிறக்கவில்லை என்றாலும் தன் மீதும் தன் தாயின் மீதும் மிகவும் அன்பு செலுத்தும் ஒரே ஜீவன் இந்த அன்வர்தான். என்னதான் அவன் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் அவள் கூட பிறக்காத அண்ணன் அவளுக்கு. ஆனால் அவள்தான் அவனிடமும் ஒதுங்கியே இருப்பாள். ஆனால் அவன் அவளிடம் மிக உரிமையுடனேயே பழகுவான்.மீதி பணத்துக்கு என்ன செய்வது என்று தலை குழம்பி இருந்தவளுக்கு மனதில் உடனே ப்ரொடியூசர் ராமலிங்கத்தின் ஞாபகம் வந்தது. அடுத்த படத்திற்கு அவளை ஹீரோயினாக கேட்டது நினைவிற்கு வர உடனே அவருக்கு கால் செய்தால்.
"ஹெலோ சொல்லுமா பிருந்தா என்ன இந்த நேரத்துல கால் பண்ற. இப்போதானே நம்ம பார்த்துக்கிட்டோம் . ஏதும் அவசரமா?" என்று கேட்க தனது பணத்தேவையையும் கூற சிறிது நேரம் யோசித்தவர்
"சரிமா நான் உனக்கு நாளைக்கு கால் பண்ணி சொல்றேன். அடுத்த படத்துக்கு உன்னை போடலாம்னு நான் முடிவெடுத்தது என்னமோ உண்மைதான். ஆனா டைரக்டர், ஹீரோ எல்லோரும் உன்ன அக்சப்ட் பண்ணிக்கனுமே , காலைல நான் சொன்னது என்னோட ஒப்பீனியன். ஆனா ஒரு படத்துக்கு என்னோட ஒப்பீனினியன் மட்டும் சரி வராது. சரி எதுக்கும் நான் காலைல உனக்கு கால் பண்றேன்". என்றவரிடம்"சரி சார், ரொம்ப தாங்க்ஸ்" என்று கூறி காலை கட் செய்தாள்.
மறு நாள் காலை அவளை ராமலிங்கம் அவரின் ஆபிசிற்கு வர சொல்ல அங்கு சென்றவள்
"குட்மார்னிங்க் சார்"என்று கூற அவரும் அவளை நாட்காளியில் அமர செய்து
"இங்கப்பாருமா நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. நீ கேட்குறது ரொம்ப பெரிய அமௌன்ட். என்னதான் நீ ரொம்ப நல்லா நடிச்சாலும் ரெண்டாவது படத்துக்கு அவ்வளவு பெரிய அமவுண்ட் எல்லாம் கிடைக்காது. வேணும்னா ஒரு பத்து லட்சம் தரலாம். உனக்கு ரொம்ப அவசரமா பணம் தேவைன்னு சொல்ற. வேணும்னா உனக்காக இன்னும் ஒரு பத்து லட்சம் எக்ஸ்ட்றாவா போட்டு தரேன். ஆனா நீ எனக்கு என்ன பண்ணுவ"என்று கேட்க அவளோ
"சார் நீங்க என்ன கேட்க வறீங்க" என்று கூற அவரோ
"இங்க பாருமா, இது சினிமா இண்டஸ்ட்ரி. இங்க யாருமே ரொம்ப ஈசியா முன்னுக்கு வந்துட முடியாது. அதுவும் நீ எந்த பின்புலமும் இல்லாம வந்திருக்க. வினீத் உன் நடிப்ப எங்கயோ பார்த்து நீ நல்லா நடிப்பேன்னு நம்பி உனக்கு சான்ஸ் கொடுத்தான். எனக்கும் இந்த படம் ரொம்ப குறைஞ்ச பட்ஜட்ல எடுத்ததால நான் எல்லா முட்வுகளையும் வினீத்திடமே விட்டுட்டேன்.அதனால உனக்கு சான்ஸ் கிடைச்சது. இல்லன்னா உன்ன எனக்கு யாருன்னு தெரியாமலே போய் இருக்கும்" என்று கூற அவர் கூறுவதின் அர்த்தம் புரிந்தும் புரியாதவளாய் அவரை பார்க்க
"இங்க பாருமா. நான் சொல்ல வரது என்னன்னா பிசிக்கலா எனக்கு ஏதும் பேவர் பண்ணேன்னா நான் உனக்கு தேவையானத செஞ்சி தர்றேன். அப்புறம் என் ப்ரெண்டோட அடுத்த படத்துலயும் உன்ன ஹீரோயினா போட செல்றேன்" என்று கூற அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.அவளின் நிலையை உணர்ந்த அவர்
"சரி நீ இப்பவே பதில் சொல்ல தேவையில்ல. உனக்கு நான் என்னோட அடுத்த படத்துக்கு கமிட் பண்ண பத்து லட்சம் ரூபாவிற்கு செக் இப்பவே தரேன். நீ யெஸ் சொன்னதும் மீதி பத்து லட்சத்தையும் தரேன். என் ப்ரெண்ட்கிட்டயும் சொல்றேன்" என்று கூறி தனது மேசையில் இருந்த செக் புக்கை எடுத்து பத்து லட்சத்துக்கு செக் எழுதி கொடுத்தவர்
"யோசிச்சி சொல்லுமா" என்றவர் அவளிடம் செக்கை கொடுத்தார். அதை வாங்கி தன் பேக்கில் வைத்தவளிடம்
"நீ முடியாதுன்னு சொன்னாலும் அடுத்த படத்துக்கு உன்னத்தான் நான் ஹீரோயினா போடனும்னு முடிவெடுத்ததுக்குத்தான் இந்த செக். இதுக்கும் நான் கேட்டதுக்கும் சம்பந்தப்படுத்தி பார்க்காத" என்று கூற அவள்
"தாங்க்ஸ் சார்"என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்றால். வரும்வழி நெடுகிலும் அடுத்து என்ன செய்ய போகின்றோம் என்ற யோசனையே அவளின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. தன் தாய் தனக்காக பட்ட கஷ்டங்களை அவளின் கண் முன் வர மறு புறம் தானும் தன் தாய் செய்த தவறை எப்போதும் செய்துவிட கூடாது என்று சிறு வயதில் இருந்தே ஆண்களிடம் எரிந்து விழுபவள் இன்று இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொள்வாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. தாய்க்கு கேன்சர் வரும் வரைக்கும் அவர்கள் வீட்டில் பணத்திற்கு பஞ்சம் இருந்ததில்லை. அன்றைக்கு தேவையான பணம் அவர்கள் வீட்டில் எப்படியும் இருக்கும்.பிருந்தாவின் தாய் ஏன் இப்படி ஒரு நிலைக்கு வந்தார் என்பது பிருந்தாவுக்கு நன்றாகவே தெரியும்.
வீட்டிற்கு வந்தவள் குளித்து முடித்து அடுத்து தான் என்ன செய்வது என்று யோசித்து யோசித்தே அவளுக்கு தலை வலி எடுத்து. தான் எப்போதும் ஆலோசனை கேட்கும் தனக்கிருக்கும் ஒரே தோழியான் லட்சுமியிடம் பேசலாம் என எண்ணி அவளுக்கு கால் செய்தால்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro