20
ஒரு மனிதன் தன்னுடைய சிந்தனை குழம்பி இருக்கும் போது தான் யாரிடம் ஆலோசனை கேட்கின்றோம், யார் நமக்கு ஆலோசனை கூறுகின்றனர் என்பதை மறந்துவிடுவோம். ஒரு விடயத்தில் நாம் மிகவும் அனுபவசாலியாக இருப்போம். ஆனால் அதுவே ஒரு குழப்பமான நேரத்தில் நமது அனுபவத்தை மறந்துவிட்டு மற்றவரிடம் ஆலோசனை பெறுவது பொதுவாக எல்லோருக்கும் இருக்க ஒன்று.
"அண்ணா உன் மனச விட்டு நான்சி எப்பவோ போக ஆரம்பிச்சுட்டா அத நீதான் உணராம இருக்க" என்று கூற அவன்முகம் இறுக ஆரம்பித்தது. அவனின் முகமாற்றத்தை கண்டு கவி சிறிது பயமுற்றாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்,
"இங்கப்பாருண்ணா இப்போ நீ கோபப்படுறதுல எந்த நியாயமும் இல்லை. நீ ஒன்னும் பூவே உனக்காக விஜய் கிடையாது. காலமெல்லாம் காதலிச்சவளையே நினைச்சிக்கிட்டு இருக்க. உனக்கு ஒரு பொண்டாட்டி தேவை இல்லைன்னாலும் எனக்கு ஒரு அண்ணி வேணும். பிருந்தா அக்கா கூட கொஞ்சம் நாள்தான் பழகினேன். எவ்வளவு பெரிய நடிகை ஆனா கொஞ்சம் கூட பந்தா இல்லாம எவ்வளவு எளிமையா பழகுறாங்க. எனக்கு அவங்க கூட பழகும் போது அவங்கள மாதிரி ப்ரெண்ட்லியா பழகுறவங்கதான் அண்ணியா வரனும்னு மனசு ஏங்குது"என்று வேண்டுமென்றே கூற தலையில் கைவைத்தான் விக்ரம்.
"கடவுளே கவி நானே தலைவலில இருக்கேன், தயவு செய்து பிருந்தா பத்தி பேசாத. அவள எப்படி அவாய்ட் பண்றதுன்னு தெரியாம நானே முழிச்சிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு கூட அவளுக்கு பர்த்டே இல்ல. ஆனா ஏதோ ஒரு காரணம் சொல்லி என்கூட பேச டிரை பண்றா. ஏன்னுதான் தெரிய மாட்டேங்குது" என்று கூற தன் அண்ணனை பார்த்து மனதுக்குள் கவி
'மவனே மாட்னியா, இரு உன் வழில வந்தே உன்னை மடக்குறேன்'
"என்ன சொல்ற, இன்னைக்கு பிருந்தாவுக்கு பர்த்டே இல்லையா. ஆமா அவங்க ஏன் உன்கூட பேச டிறை பண்ணனும்"என்று கேட்டாள்.
"சும்மா நடிக்காத, உனக்கும் அவளுக்கு இன்னைக்கு பர்த்டே இல்லைங்கிறது தெரியும்னு எனக்கு தெரியும்" என்று கூற கவி புன்னகைத்தவள்
"அப்போ அவங்க ஏன் இப்படி பண்றாங்கன்னு நேரடியாவே கேட்டுடேன்" என்று கூறினால்.
"அதெப்படி கேட்குறது கவி. அய்யோ எனக்கு தலையே சுத்துற மாதிரி இருக்கு. கவி ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. எனக்கு எப்போமே நான்சிதான், நான்சி மட்டும்தான். என் லைப்ல வேற பொண்ணுக்கு இடமில்லை. சோ உன்னோட இந்த அண்ணி வேணும் எண்ட கனவு எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு வேற வேலைய பாரு" என்க சலிப்படைந்தவள் தன் அண்ணன் மறுபடியும் எப்பவும் போல ஆரம்ப புள்ளிக்கே வந்தது எரிச்சலை கொடுத்தது. இருந்தாலும் இந்த தடவை அவன் நான்சியை தவிர்த்து வேறு பெண்ணை பற்றி பேசியதற்கு வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் உடையவுமில்லை கவியின் கன்னம் சிவக்கமும் இல்லை. இதுவே அவளுக்கு மிகப்பெரிய ஒரு முன்னேற்றமாக இருந்தது. இவர்கள் இருவரும் பேசுவதை தூங்காமல் இருந்த அவர்களின் தாய் கேட்டுக்கொண்டு இருந்தது இவர்களுக்கு தெரியவில்லை.
மூன்று நாட்களின் பின் விக்ரமுக்கு கால் செய்த பிருந்தா
"விக்ரம் எனக்கு ரூமல இருந்து போரடிக்குது. வெளில சுத்திப்பார்க்க போகலாம்னு இருக்கேன். வித் யுவர் பர்மிசன் கவிய என்கூட அனுப்ப முடியுமா?"என்று கூற அவன்
"நான் ஹிருனிகிட்ட கேட்டு சொல்லட்டா?" என்றவனை அவள் பொய்க்கோபத்துடன்
"அய்யோ கடவுளே, நான் கேட்டது கவிய அனுப்ப முடியுமான்னு. ஹிருனிதான் வேனும்னா நான் அவளுக்கே கால் பண்ணியிருப்பேன். ஹிருனி நல்ல பொண்ணுதான் ,ஆனா கவிகூட இருக்கும் போது எனக்கு மனசுக்கு ரிலாக்ஸ்ஸா பீல் ஆகுது. உங்களால முடியும்னா கவிய அனுப்புங்க.இல்லைன்னா நான் ரூம்லயே இருக்கேன்" என்று கூற அவளின் கோபம் கண்டு சிரித்தான்.
"சரி உங்களுக்கு போரிங்க்கா இருந்தா நம்ம ஒரு டூர் அர்ரேஞ்ச் பண்ணலாம். காலி, நுவரெலியா, கண்டி அப்படின்னு எங்க நாட்டோட எழில்சொட்டும் அழக உங்களுக்கு காட்டுறேன். நீங்க இன்னும் எத்தனை நாள் இங்க இருக்க போறீங்களோ தெரியல" என்று கூற அப்போதுதான் பிருந்தாவுக்கு உரைத்தது தான் மறுபடி இந்தியா செல்லவேண்டும் என்பது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
"டூர் போறத பத்தி அப்புறமா பேசிக்கலாம். இப்போ கவிய அனுப்ப முடியுமா முடியாதா?" என்று கேட்க அவனும் புன்னகையுடன்
"சரி மகாராணியாரே, எங்க வீட்டு மகாராணிய உங்ககிட்ட அனுப்புறேன். பத்திரமா பார்த்துக்கோங்க" என்று கூற பிருந்தா
"உங்க ஊருல பொண்ணுங்க தனியா வெளில போகலாம்ல. ஏன்னா எங்க ஊருல சில இடங்களுக்கு பொண்ணுங்க தனியா போக முடியாது. எனக்கு எதுவானாலும் பிரச்சினை இல்லை, ஆனா நான் கவிய வேற கூட்டி போறேன். அதான் கேட்குறேன்" என்று கூற அவன்
"நீங்க பயமில்லாம போகலாம், எங்க ஊருல அதுவும் கொழும்பு மாதிரி இடத்துல எந்த ப்ராப்ளமும் இல்லை. நீங்க எங்க போகனும்னாலும் கவிகிட்ட கேளுங்க அவ கூட்டி போவா" என்று கூற அவளும்
"ரொம்ப தேங்க்ஸ் விக்ரம். நான் ரெடியாகுறேன். நீங்க கவிய இங்க டிராப் பண்ணிடுங்க" என்றாள்.
தன் தங்கையிடம் பிருந்தா கேட்டதை கூற அவளும் எந்த ஒரு மறுப்பும் இன்றி புறப்பட தயாரானவள்
"ஆமா இப்போ உன் க்ளையண்ட நான் என்னன்னு கூப்பிடறது. மேடம்னா இல்லை அக்கான்னா இல்லை,,,,," என்று இழுக்க அவளை பார்த்து புன்னகைத்தவன்
"நீ எருமை மாடு, பன்னிக்குட்டி எப்படி வேணா கூப்பிட்டுக்க. அவ உன்ன அடிக்காத வரைக்கும் சரியா"என்க தன் அண்ணன் இரவு இருந்த குழப்பத்திலும் காலையில் சகஜமாக பேசுவது கவிக்கு சந்தோசத்தை கொடுத்தது. ஆனால் விக்ரமின் பிரச்சினையே இதுதான், தன் மனதில் இருக்கும் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்வான்.
கவியை ஹோட்டலில் டிராப் செய்தவன் பிருந்தாவை சந்திக்காமலேயே தனக்கு முக்கியமான ஒரு வேலை இருப்பதாக கிளம்ப அவன் பிருந்தாவை நேரடியாக சந்திப்பதை தவிர்க்கவே இப்படி செய்கின்றான் என்பது கவிக்கு புரிந்தது.
கவி கிழே வந்திருப்பதாக ரிசப்சனிடம் இருந்து கால் வர கீழே சென்ற பிருந்தா அங்கு விக்ரம் இல்லாததை கண்டு அவளது முகம் ஒரு சில மைக்ரோ நொடிகள் வாட அதை கவி உடனே கண்டுகொண்டாள். பிருந்தாவின் மனதிலும் விக்ரம் பற்றி ஏதோ ஒரு சலனம் இருப்பது கவிக்கு புரிந்தாலும் பிருந்தாவிடம் என்னவென்று கேட்பது. அவளுக்கு சொந்தம் என்று கூறிக்கொள்ள யாருமில்லை என்றாலும் அவள் சமூக அந்தஸ்த்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ளவள். முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட் வாங்கிய ஒரு நடிகை. ஆனால் தன் சகோதரனோ பார்ட்டைம் வேலை பார்க்கும் சாதாரண ஒரு இளைஞன். அதுவும் சிங்கள இளைஞன். இலங்கையில் உள்ள தமிழ் பெண் என்றால் கூட பரவாயில்லை ஏதாவது பேசி அவளை கன்வின்ஸ் செய்ய முடியும். அவளோ தமிழ்நாட்டை சேர்ந்தவள். கவிக்கு பிருந்தாவை ரொம்பவும் பிடித்து போனது. அதுவும் அவள் வீட்டிற்க்கு வந்ததில் இருந்து அவளை போல ஒருத்தி தனக்கு அண்ணியாக வர வேண்டும் என நினைத்தவளுக்கு இப்பொழுது அவளே அண்ணியாக வந்தால் என்ன என்று தோன்றியது.
இருவரும் ஹோட்டலைவிட்டு வெளியேற கவி உபரை புக் செய்ய செல்ல பிருந்தா
"வேணாம் கவி, நம்ம ஆட்டோல போகலாம். அப்போ இன்னும் சூப்பரா எஞ்சாய் பண்ணலாம்"என்று கூற அவள்
"ஆட்டோல போனா உங்கள அடையாளம் கண்டு கொள்வாங்க.அப்புறமா உங்களுக்குத்தான் கஷ்டம்" என்று கூற பிருந்தா ஆச்சரியமாக
"அதெப்படி என்ன இங்க இருக்குறவங்களுக்கு தெரியும்"என்று கேட்க புன்னகையுடன் கவி
"என்ன இப்படி சொல்லிட்டீங்க. உங்க ஊருல உங்க படம் ஓடினத விட எங்க ஊர்ல பத்து நாள் அதிகமாவே ஓடிச்சி" என்று கூற பிருந்தா
"அப்போ உங்க ஊருல தமிழ்படம்லாம் தியேட்டர்ல வருமா. நான் நினைத்தேன் உங்க ஊரு படம்தான் ஓடும்னு" என்று கூற அதற்கு சத்தமாக சிரித்த கவி
"எங்க ஊரு படத்த இங்க தியேட்டர்ல போட்டா தியேட்டர்காரான் பிச்சைக்காரன் ஆகிடுவான். உங்க ஊருல ரிலீஸ் ஆகுற அன்னைக்கே எங்க ஊருலயும் எல்லா படமும் ரிலீஸ் ஆகிடும்.அதுவும் சில நேரங்கள் உங்க ஊருல ரிலீஸ் ஆக முன்னாடியே ப்ரீமியர் ஷோ அப்படின்னு ஒரு நாள் முன்னால கூட ரிலீஸ் பண்ணுவாங்க" என்று கூற அது பிருந்தாவுக்கு ஆச்ச்சரியமாக இருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro