Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் - 12 💫

'இவன் எதற்கு என் பெயரை இப்படி எழுதி வைக்கிறான் ' என யோசனையில் இருந்தாள் ரதி.

அவளின் துப்பட்டாவால் வாயைத் துடைத்த வேகத்தில், அவனின் மேஜையில் அச்சிட்ட  Dr. Nithvik Niranjan என்ற பெயர் பலகையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஒரு வகை யோசனையுடன் அவள்
தலையை இட வலமாக அசைத்தாள், ரதி.

பின், சுதாரித்துக் கொண்டு நித்விக் கூறுவதைக் கேட்க ஆரம்பித்தாள். அதற்குள் நித்விக் அந்த வெண்பலகை யில், ரதியின் பெயருக்கு அருகில்

Clairvoyance – Clear seeing
Claircognizance – Clear knowing
Clairauditory – Clear hearing
Clairgustance – Clear tasting
Clairolfactory – Clear smelling
Clairsentience – Clear feeling ✓
Clairkinesthesia – Clear touching

அனைத்தையும் எழுதிக் கொண்டிருந்தான்.

"சார், நானும் கொஞ்சம் எனக்குத் தெரிந்த தகவல்களை சேகரித்து வச்சிருக்கேன். சோ, நீங்க எனக்கு விவரம்மாகச் சொல்லுங்களேன்." 

"ஹ்ம்ம் ஹும், அது நீங்க நினைக்கிற மாதிரி சொல்லக் கூடியது இல்லை ரதி, அதுப் பெரிய சப்ஜெக்ட் அதும் இல்லாமல், ஒரு கோட்பாடே(theory) ஒருதற்கும் இன்னொருத்தருக்கும் ரொம்பவும் வேறுபடும். நான் சொல்றதையே இன்னொருத்தர் நிராகரிக்கலாம். ஏன்னா, இது எல்லாமே pseudoscience "

"இது எல்லாமே pseudoscience"

நித்விக்கும் ரதியும் ஒரே ராகத்தில் ஒரே நேரத்தில் கூறி முடித்தனர்.

Pseudoscience - போலி அறிவியல் என்பது அறிவியல்னு நம்ம நம்பிக்கையுடன் பலக் காலமாக பயன் படுத்தி வருவது. அதாவது ஆதாரம் (புரூஃப்) இல்லாமல் , அறிவியல் அங்கீகாரமற்ற ஒரு நம்பிக்கையைய் பயற்சி செய்வது.

"ரதி, இதும் தெரிஞ்சு வச்சுருக்கிங்களே...
ஹ்ம்ம்... சரித் தான்... ஆனால், எல்லாம் தெருஞ்சிகிடுறதும் சில விஷயங்களில் சில நேரங்களில் நல்லது இல்ல ரதி" என நல்லது என்ன வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான் நித்விக்.

'தாத்தாவும் பேரனும் புரியாத மாதிரி தான் பேசுவாங்க போல' என முனு முனுத்தப்படி, அவனை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் ரதி.

"ஓகே ஷார்ட் டா சொல்லுறேன் ரதி. எஸ், யூ ஆர் மிடியம்ஷிப் (Yes, you are mediumship) , முதலில் மிடியம்ஷிப் என்றால் என்ன? " என்ற வினாவை அவன் பலகையில் எழுதினான்.

"Sprits கிட்ட communicate பண்றது " என்றாள் ரதி.

"Yes, channelling to spirit realm,   (realm னா வேற ஒன்னும் இல்லை, இன்னொரு சாம்ராஜ்யம் அல்ல உலகம்.)

அதாவது, ஒரு ஸ்பிரிட்ஸ் கூடப் பேசி  அவுங்க சொல்ற விஷயத்தை மனிதர்களுக்குச் சொல்றவுங்களைத் தான் மிடியம்ஷிப்னு சொல்லுவோம்.
அது இரண்டு வகையிலும் பண்ணலாம் Physical and Mental.

Physical என்ற வார்த்தையை வச்சே தெரிஞ்சிருக்கும், அது என்னன்னு. தொடுதல், சத்தம், லைட் இது போன்றவை நம்ம பார்க்கக் கூடிய  செய்கையில் நமக்கு சில விஷயங்களைத் தெரிவிக்கிறது. இந்த மாதிரி தான் முந்தைய காலங்களில் நிறைய பேர் பயன் படுத்திருக்காங்க. ஆனால், அதை வைத்து மட்டும் முழுத் தகவல்களைத் எளிதில் திரட்ட முடிய வில்லை.

நாளடைவில் Mental மிடியம்ஷிப் வளர்ந்து வந்தது. அது தான் கனவுகள் மூலம் அல்ல மன ரீதியில் ஸ்பிரிட் ஸ்கூட தொடர்பு வைத்து அவர்கள் கூறுவதைப் புரிந்து கொள்ளப் படுவது.

தற்போது, Clairvoyance யை மட்டும் கோடிட்டான் நித்விக். Clairvoyance - தமிழில் மனக்கண் தொலைக்காட்சி என்றுச் சொல்லலாம்.

ரதி, நீங்க எப்படி எல்லா விஷயங்களையும் கனவில் , தொலைகாட்சியில் பார்ப்பதுப் போல் பார்த்து அவுங்க சொல்ல வர விஷயங்களைத் தெரிந்துக் கொள்ளுறீங்களோ, அதைத் தான் Clairvoyance னுச் சொல்லுகிறோம்." என்று சொல்லி முடித்தான் நித்விக்.

"சார், அப்படினா அவுங்க நினைக்கிற விஷயம் எப்படி எனக்குள் காட்சிகள்ளாகத் தெரியுது?" என ரதி நித்விக்யிடம் கேட்டாள்.

"ஹ்ம்ம்... கரெக்ட் தான், you will be temporarily possessd by non physical entity (spirits) to communicate. அப்படி என்றால், சிலமணி நேரங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத ஆத்மாவால் நீங்கள் ஆட்கொள்ளப் படுவீங்க." என்றான்.

"ஆனால், எனக்கு எதுமே நீங்க சொல்ற மாதிரி கிளியர் ரா தெரியாதே சார். எல்லாமே மங்கலாகத் தான் தெரியும் " என அவளின் சந்தேகத்தைக் கேட்டாள், ரதி.

"அதுக்கும் கார்ணம் இருக்கு ரதி, இப்போ நம்ம இருக்கது physical world, நம்மால் 3 பரிமாணங்களைப் (dimensions)  பார்க்க முடியும். ஆனால், நீங்க கனவில் பார்க்கும் போது, emotional world க்குப் போவீங்க. அப்போ 4 பரிமாணங்களாப் பார்க்கும் போது, அங்க இருக்க எல்லாமே தற்காலிகமாக நீங்க உணர்வது. சோ, நீங்க பார்க்கிறது எல்லாமே ஒரு திரவம் மாதிரித் தான் தெரியும். அது புதுசாப் பார்குறப்ப அப்படித் தான் தெரியும். ஆனால், பழக்கம் ஆகிட்ட சரி ஆகிடும்.

Clairvoyance என்பது ஒரு குறைபாடு என்று கூடச் சொல்லலாம். நம் கண்களுக்குத் தெரியாத உருவம் கூட சின்ன குழந்தைகளுக்கு சில சமயம் தெரியும்னு சொல்லுவாங்க. அது ஏன்னா physical plane க்கு இப்போ தான் அந்தக் குழந்தை பழகிட்டு இருக்கிறதால.

ஏன், நம்ம கண்ணுக்குக் கூட யாரோ நிக்கிற மாதிரி இருக்கும், ஆனால் திரும்பிப் பார்த்தா அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். நம்ம கண்ணுக்குத் தெரியாமல் போகுறதுக்குக் காரணம் dampening effect of physical body. Dampening effect னா நம்ம physical லா ஒரு பொருளைப் பார்த்துப் பழகிட்டோம், அதைத் தாண்டி நம்மால் பார்த்து உணர முடியாது " என்றான் நித்விக்.

"ஹ்ம்ம்... புரிஞ்சு டாக்டர்"

"வேற ஏதும் சந்தேகங்கள் இருக்கா ரதி?" என கையைக் கட்டிக் கொண்டு கேட்டான் நித்விக்.

"இல்லை சார், நீங்க சொன்னதுலாம்  கொஞ்சம், எனக்கு ஏற்கனவே தெரிஞ்சது தான். " என எல்லாம் தெரிந்த மாதிரி தோள்பட்டையைக் குலுக்கினாள் ரதி.

"வாட்?" என முறைத்தான் நித்விக்.

"ஐய்யோ நான் கிண்டல்லாம் செய்ய வில்லை.. நீங்க சொன்ன பிறகு இன்னும் கொஞ்சம் தெளிவா நல்லாவே தெரிஞ்சுகிட்டேன்." என வேகமாக கூறி முடித்தாள், ரதி.

"Sounds good"

"இப்போ, நான் என்ன பண்ண வேண்டும் டாக்டர் சார்? இப்படி பேசுறது  நல்லதா கெட்டதா?" என கைகளைக் மேஜை மீது வைத்துக் கேட்டாள், ரதி.

"முதலில் நீங்க இதுவரைப் பேசினவர்கள், எப்படி உங்க கிட்ட அப்ரோச் பண்ணாங்க, நீங்க எப்படி அதுக்குப் பதில் தந்தீங்க, நீங்க கண்ட காட்சி என எல்லாத்தையும் ஒரு டைரியில் எழுதுங்க. அதை வைத்து அவுங்க சொல்ல வருவது என்னன்னு விளக்கம் தெரிஞ்சுக்க முடியும். ஆனால், இது எல்லாம் இப்போதிக்கு நீங்கச் செய்ய வேண்டாம் ."

"ஏன் சார்?"

"நான் சொன்ன மாதிரி physical realm ல இருந்து spritual realm (relam-world) செல்லும் போது, சில நல்லதும் தீமைகளும் இருக்கு. அதுக்கு சரியான வழிகாட்டல் இல்லாமல் இருந்தா, நிறையப் பிரச்சினைகள் வரும். எல்லாமே அளவோடு இருந்தா நல்லது. ஒரு ஆர்வத்தில் நமக்கு சுய கட்டுப்பாடு இல்லாமல் போய்டும்.

தீமைகளுள், ஒன்னு தான் இந்த உடம்பு வலி வர காரணமும். சோ, நீங்க ஃபர்ஸ்ட் இப்போதைக்கு மனதை ஒரு முகப் படுத்தி நிதானமாக இருங்கள்.

எமோஷனல்லா வர கூடிய வலி எல்லாம் தசைகளில் சேர்ந்து வலியை ஏற்படுத்தும். அதுனால நீங்க கொஞ்சம் தியானம், யோகா போன்றவற்றை தினமும் செய்தால் உங்கள் உடல் நிலைக்கு இப்போ மிகவும் நல்லது ரதி." என அவனின் இருக்கையில் வந்து அமர்ந்தான் நித்விக்.

"ஹ்ம்ம் சார் , அப்போ ராஜேஷ் "

"உங்களுக்கு ராஜேஷ் உங்களை கொலைச் செய்திருவான் என்ற பயமா? "

"பயமா எனக்கா?" கண்ணை உருட்டினாள் ரதி.

"என்ன?" எனப் புருவத்தை உயர்த்தினான்.

"இல்ல சார், அவுங்களுக்கு உதவிச் செய்யணும்னு தோணுது. சின்ன பையன் ராஜேஷ். "

"உதவியா?"

"எனக்கு என்னமோ நான் தவறான புரிந்துக் கொண்டுள்ளேண்ணுத் தோணுது."

"ஹ்ம்ம்..நானும் ராஜேஷ் கேஸை உங்க கிட்ட முழுமையாகக் கேட்டுட்டு அதைப் பற்றிப் பார்க்கலாம். யாரும் உங்களை ஒன்னும் செய்ய மாட்டாங்க. இப்போ எதும் வேண்டாம், நான் உங்களுக்கு எப்போ உதவி செய்யலாம் என்றுச் சொல்லுவேன். அதே மாதிரி சில வழிமுறைகள் இருக்கு மெடியம்ஷிப் பாதுகாப்பாகப் பின்பற்ற. கொஞ்ச நாள் போகட்டும் ரதி, மனசுக்கும் உங்க உடலுக்கும் இப்போ ஓய்வு ரொம்பத் தேவை." நித்விக்கின் பேச்சில் அக்கறைத் தெரிந்தது.

ரதியின் பெயர் கொண்ட கோப்பில் அன்று நடந்த விடயங்கள் சிலவற்றை எழுதிக் கொண்டிருந்தான், நித்விக்.

"சார், அந்த ஓவியம் ரொம்ப அழகாக இருக்கு, அதை நான் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கவா " என நித்விக்கின் வலப்புறம் பின்னால் மாட்டபட்டிருந்த ஓவியத்தையேப் பார்த்துக் கொண்டு கேட்டாள் ரதி.

"யூ கேன்" என கோப்பில் மேல் கவனத்தை வைத்தவாறு கூறினான்.

அவள் கையில் வைத்திருந்த கைப் பேசியையும் எடுத்துக் கொண்டு அதன் அருகில் சென்று நின்றாள். அந்த ஓவியத்தில் ஒரு இளவரசன் மட்டும், காதல் பார்வையோடு வெள்ளையும் சிவப்பும் கலந்த ரோஜா பூச்செண்டை ஏந்தி, வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிய சோலையில் இளவரசியின் வருகைக்காக காத்து  நின்றுக் கொண்டிருப்பதுப் போல் காட்சி இருந்தது.

அதைப் புகைப்படம் எடுக்க அவள் எத்தனிக்க, அது சற்று சாய்ந்து கீழே விழும் நிலையில் இருந்தது. அதற்கு அருகில் இருந்த மரமேஜைய்யில் ஏதும் யோசிக்காமல் ஏரினாள்.

அவளின் அஞ்சு அடி உயரமும் மரமேஜையும் அவளுக்கு உதவவில்லை. "நம்ம என்ன அவ்ளோ குள்ளமாவா இருக்கோம் " என எரிச்சலில் அவளையேக் கடிந்தாள் ரதி.

அவளின் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய நித்விக்கின் கண்கள் அவளின் செய்கையை ஆராய்ந்தது, அவனை அறியாமல் உதட்டில் கள்ளச் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

இங்கு ரதியோ அவளின் குதிக் காலை உயர்த்தி ஓவியத்தை ஒரு கையில் எட்டிப் பிடித்தாள்.

"ஹே... நீ என்ன பன்ற? " என ரதி கையில் எடுத்ததற்கானக் காரணம் தெரியாமல் கேட்டான் , நித்விக்.

அவனின் தீடீர் குரலின் வல்லமை அவளுக்குப் பதற்றம் தர, சற்று தல்லாடத்துடன் ஓவியத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு திரும்பியவள். அவளின் அருகில் நித்விக்கைக் கண்ட ரதி, கைக் கால் நடுக்கம் தரக் கீழே விழச் சென்றாள்.

அதற்குள் அவனின் கரம் விழாமல் ....

Romba scientific ah irukaa ?? Yaethum puriyalaiya ? Pls tell..tell.. ithuku matum silent readersum koncham pathil solunga...!
Neriya research pani eluthunathu!

Hi Guys!

Yes, the same question,

How is the update?

Sorry koncham late aagitu update poda, suthama odambu seri ila , keelzha vilunthu puthaiyal vera eduthaen so koncham type pana mudiyala!😣

But ini regular updates varum, ini koncham updates ku science ku leave vitu vera subject polaam!😜
Thanks for reading!

Lots of Love,
Mayuri!💙

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro