விம்மல்
அவள் தன் டேபிளில் வந்து அமர்ந்தபோது இதயத் துடிப்பு அதிகரித்தது. Handbagஐ PC யின் அருகில் வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தாள். தன் போனில் நேரத்தை பார்த்துவிட்டு வலது புறமாக எட்டி பார்த்தாள் மேனேஜரின் cabinஐ. விளக்குகள் இன்னும் துயில் கொண்டிருந்தன. காரிலே மித்திரன் இவளுடைய நடுக்கத்தைக கவனித்துவிட்டான். அவளுடைய கரத்தைப் பற்றி, " இன்னும் கொஞ்சம் நேரம் நகத்தை கடிச்சா நகமே இருக்காது." என்று அவள் விரலை அவன் மடியின் மேல் வைத்தான்.
அவள் பதிலளிக்கவில்லை. காரிலிருந்து இறங்கும்போது மட்டும் மதியம் போன் செய்கிறேன் என்று கூறியிருந்தாள்.
சற்று நேரத்தில் ஆபீஸ் பரபரப்பான நிலையை அடைந்தது. அவள் எதிர்பார்த்தது போல் மேனேஜரின் cabinகு அவளுடைய டீம் அழைக்கப்பட்டது. அவள் எழுந்து போகும்போது அவளுடைய டீம் இன் மற்ற நால்வரும் அவளுக்குப் பின்னால் நடந்து வருவதை கண்டாள். சோர்வுடனும் இருண்ட கண்களுடனும் அவளருகில் வந்து நின்றனர் அவர்கள்.
"இன்னைக்கு காலையில் தான் file அனுப்புனீங்க போல" வினவினார் மேனேஜர்.
மகேஷ் பதிலளித்தான், " Yes சார். லாஸ்ட் minute editing பண்ணிட்டு இருந்தோம்."
"லாஸ்ட் minute editing நு சொல்லாத, வேலைய செஞ்சதே லாஸ்ட் நைட் தான்னு சொல்லு."
"அப்படி இல்ல சார்," ராம் குறுக்கிட எத்தனித்து பிறகு மேனேஜரின் இருண்ட முகத்தைக் கண்டு தன் சொற்களை விழுங்கினான்.
"இதை நான் client கிட்ட எப்படி காட்டுறது? இப்ப என்ன பண்ணலாம்? டீம் லீடர் இதுக்கு solution சொல்லுங்க." மௌனமாய் நின்ற அவள் மேல் இப்போது கேள்விகள் தொடுக்கப்பட்டன.
"இந்த மாதிரி நடக்க வாய்ப்பு இருக்குன்னு நானே வேலையை சொந்தமா முடிச்சுட்டேன் சார். அதை வேண்டும்னா client கிட்ட present பண்ணலாம்."
அவளுடைய பதிலைக் கேட்டு அவளின் டீம் அதிர்ச்சியில் உறைந்தது.
"சரி, அதை எடுத்துட்டு வாங்க. பார்ப்போம்."
அரை மணி நேரத்தில் அவள் தான் செய்து முடித்த வேலையை present பண்ணி முடித்தாள். மேனேஜர் பாராட்டிவிட்டு அதை client இடம் present பண்ணுமாறு கூறிவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்க ஆயுத்தமானார்.
மீண்டும் தன டேபிளில் வந்து அமர்ந்த பிறகு தான் அவளின் மூச்சு ஒருவித சமநிலையை அடைந்தது. அன்று மித்திரன் லஞ்ச் கூப்பிட்டு இவள் செல்லாமம் ஆபீஸில் உட்கார்ந்து கஷ்டப்பட்டு முடித்த ப்ராஜெக்ட் இது தான். தன் புது டீம் மேல் நம்பிக்கையை இழந்து அவளாகவே முடித்த வேலை. அவளுடைய பெருமிதமும் பெருநிறைவும் ஒரு கணத்தில் மறைந்தன நான்கு நிழல்கள் அவளை சூழ்ந்தபோது.
"புது டீம், புது லீடர், innocent ஆ சிரிச்சு பேசுறாங்கன்னு நினைச்சா இப்ப தான தெரியுது அது எவ்வளவு சுயனலமான சிரிப்புன்னு," அவளுடைய டீம் இல் ஒருவளான கீர்த்தனா கரைஞ்சுக் கொட்ட ஆரம்பித்தாள்.
டீம் இல் இருந்த மற்ற மூன்று ஆண்களோடு விளையாட்டுத்தனமாக நேரத்தை விரயமாக்கி விட்டு இப்போது கீர்த்தனா குறை சொல்வது அவளுக்குள் கோபத்தைத் தூண்டியது.
"நான்கு நாளுக்கு முன்னாடி மீட்டிங், இந்த ரெண்டு நாளா எத்தனை ஈமெயில்! ஸ்கூல் பிள்ளைங்க கிட்ட homework வாங்குற மாதிரி எவ்ளோ அலைஞ்சேன் உங்க பின்னாடி. இது வொர்க். யாருக்காகவும் வெயிட் பண்ணாது. யாராவது ஒருத்தர் செஞ்சு தான் ஆகணும்."
மேனேஜர் முன் அமைதியாக இருந்த அரவிந்த் இப்போது எகிற ஆரம்பித்துவிட்டான். "டீம் என்றால் அப்டி இப்டி தான் இருக்கும். புதுசா டீம் லீடர் ஆ வந்த உங்களுக்கு எப்டி நடந்துக்கணும்னு தெரியல."
"உங்களோட பழைய டீம் லீடரை நீங்க வளைச்சு போட்டுட்டு இப்டி ரிலாக்ஸ் ஆ இருந்திருக்கலாம். ஆனால் நீங்க வேலைய முடிக்கலன்னா நான் தான் பதில் சொல்லணும். அதுனால முடிச்சு கொடுத்தேன். உங்க வொர்க் attitude ஐ மாத்திக்கணும்."
அவளுக்குப் பதில் சொல்லாமல் மூவரும் மிடுக்காக தங்கள் டேபிள்கு சென்றுவிட்டனர். அவள் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு client முன் presentation செய்ய conference room கு சென்றாள். திரும்பி வரும்போது லஞ்ச் டைம் ஆகியிருந்தது. "மீட்டிங் ஐ இழுக்குறாங்க, இன்னைக்கு எனக்கு லஞ்ச் இல்ல" என்ற மெசேஜ் மட்டும் வந்தது அவளின் நெருங்கிய தோழியிடமிருந்து. தன் department இல் இருந்த மற்றவர்களுடன் சாப்பிடலாம் என் மற்றவர்களை அணுகிய போது அவள் சலனமடைந்தாள். இன்று வேலை அதிகம் அல்லது ஏற்கனவே சாப்பிட்டுவிட்டோம் என அனைவரும் காரணம் கூறி விலகினர். திரும்பி தன் டேபிள்கு வந்த அவள் தன்னையே அம்மூவரும் நோட்டம் விடுவதைக் கவனித்தாள். ஆபீஸில் உள்ள அனைவரும் ஓரக்கண்ணால் அவளைப் பார்ப்பதும் பிறகு திரும்பி தங்கள் சக ஊழியர்களிடம் ஏதோ சொல்வதுமாக இருந்தது. தன் மன பிரமை தானோ அல்லது நிஜமாகவே தன்னைப் பற்றி தான் பேசுகிறார்களோ என்ற ஐயம் அவளின் மனத்தைக் குடைந்தது. அம்மூவரும் லஞ்ச் செல்ல கிளம்பியபோது கீர்த்தனா சிரித்துக்கொண்டே அவளின் மேசையைக் கடந்து சென்றது அவளை உறுத்தியது. தான் தனியாக ஒரு கண்ணாடி அறையில் இருப்பது போலவும் சுற்றியிருப்பவர்கள் தன்னை கண்ணாடியின் பின்னால் இருந்து கூர்ந்து கவனிப்பது போல அவள் மேனி கூசியது.
அவளின் விரல்கள் தன்னையறியாமல் மித்திரனுக்கு போன் செய்தன.
"ஹலோ." மித்திரன் குரல் கணீரென ஒலித்தது. வெளியில் இருந்தாலும் தன் மனைவி போன் செய்கிறாள் என்றதும் காலையில் அவளிருந்த மனநிலையை யூகித்து உடனே போனை எடுத்துவிட்டான்.
"ஹலோ. எங்க இருக்கீங்க?"
"லஞ்ச்கு வந்திருக்கேன்."
"நானும் வரவா அங்க?" ஏக்கத்துடன் கேட்டாள்.
"இல்ல மா. UKவிலிருந்து வர்றார்னு சொன்னன்ல. வேலை விஷயமா அவருடன் வெளிய வந்திருக்கேன்."
மறுமுனையில் நிலவிய மௌனம் சத்தமாக உறைத்தது.
"என்ன மா?" மித்திரனின் கவலை கலந்த குரல் அவளுக்குள் அணையை மீறும் கண்ணீராய் எழுந்தது. கண்ணீர் திரையாய் அவளின் பார்வையை மறைத்து.
தொண்டைக்குழி அடைத்துக்கொண்டதால் ஒருவித கரகரப்புடன். "எனக்கு அழுகை அழுகையா வருதுங்க" என்றாள்.
"ஏன் மா?"
கேள்விக்குப் பதிலாக ஒலித்த அவளின் விம்மல் மித்திரனின் இதயத்தை விசைத்தது. சற்று யோசித்துவிட்டு, "நான் அட்ரஸ் அனுப்புறேன். நீ இந்த restaurantக்கே வா. நீ ஒரு மணி நேரத்தில் வர்றதுக்குள்ள லஞ்ச் முடிஞ்சிரும். அவரை முதலில் ஆபீஸ்கு போக சொல்றேன்."
மித்திரனின் யோசனையின்படி அவள் உடனே அங்கிருந்து கிளம்பினாள். இறுக்கமாய் இருந்த அந்த ஆபீஸிலிருந்து யாருடைய பார்வைக்கும் பதில் அளிக்காமல் வெளியேறுவதே அவளுக்குப் பெரும்பாடாய் இருந்தது. டாக்ஸிஅவளை மித்திரன் அனுப்பிய அட்றஸில் இறக்கிவிட்டது. அவள் காலடி எடுத்துவைத்ததும் sliding doors தானாவகே திறந்தன. அவள் கண்கள் மித்திரனை கண்டுக்கொண்டன கூடவே அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த அவனையும்.
***
[ Early update! வீட்டுல வெட்டியா இருந்தேன் ஸோ எழுதியாச்சு.
1. மித்திரன் to 3rd person pov. How was it?
2. How's the cover?! The last one lacked Indian-ness. I promise this is the final cover:)
3. Last chapter(தூரம்) wasn't as great as the earlier chapters I felt:( will try:(
Have you added my book to your library? நான் 3 books மட்டும் libraryஇல் வச்சிருப்பேன் ஹாஹா:)
Song above is currently on replay! அதயும் கேளுங்க]
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro