தனக்கானது
கன்னத்தைத் தட்டியக் கைகளை உதறிவிட்டு குப்புறப்படுத்துக்கொண்டேன். இப்போது அக்கைகள் என் தோளைத் தட்டின. விழித்துப் பார்த்தால் அவள் மெத்தையின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.
"9 மணி ஆச்சு. சாப்டுட்டு தூங்குங்க," மெல்லியக் குரல் ஒலித்தது.
திரும்பி ரூமைப் பார்வையிட்டபோது வெளியே வானம் கறுமைப் பூசப்பட்டிருந்தது. நிலவு ஜன்னலின் ஓரத்திலிருந்து தேய்ந்த முகத்தோடு எட்டிப்பார்த்தது. ம்ம்ம் என்று அவளின் கோரிக்கையை ஆமோதித்தேன்.
"எத்தன மணிக்கு வந்தீங்க? விட்டா காலைல தான் எழுந்திருச்சிருப்பீங்க போல," கடலில் கால் நனைப்பது போல் முதல் கேள்வி வந்தது. டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த நான் பதில் சொல்லவில்லை. கிட்சனிலிருந்து தோசைக் கரண்டியுடன் எட்டிப்பார்த்தவள் என் அமைதியை மொழிபெயர்த்துக்கொண்டவளாய் மீண்டும் அப்பேச்சை எடுக்கவில்லை.
டேபிளில் அவள் தட்டையை வைக்க இயந்திரம் போல் என் விரல்கள் தோசையைப் பிய்த்தன. சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் டேபிளுக்கு வந்தால் அவள் அப்போதுதான் வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அதிர்ச்சியில், "நீ இன்னும் சாப்டலையா?" எனக் கேட்டேன்.
புன்னகைத்தாள், "இல்ல. சாப்பிட்டு முடிக்கும்வரை பக்கத்துல உட்கார்ந்திருங்க."
சொல்லிவிடலாமா வேண்டாமா என மனம் குழம்பியது. ஆனால் இப்பிரச்சனையைப் பற்றி நானே முழுதாக அறிந்துக்கொள்ளாமல் இவளிடம் சொல்வது பெரிய சிக்கலாகி விடுமோ? ஆனால் நாளை லாவண்யாவையும் மனோஜையும் சந்திக்க நேரிடும் என்று எண்ணுகையில் இன்று இதை யாரிடமாவது சொல்வது நல்லதென எத்தணித்தேன்.
மனைவிகள் கெட்டிக்காரர்கள். மிக அமைதியாக சிரித்துக்கொண்டே நான் அவளின் கேள்விக்கு பதில் அளிக்காததை மறந்துவிட்டவாறு தன்னைக் காட்டிக்கொண்டு சிங்கத்தை வலையில் சிக்கவைப்பவர்கள். அவளின் இந்த அமைதி எனக்குள் ஒரு துணிவை வரவைக்க சொல்லிவிட்டேன் எல்லாவற்றையும்.
"நான் பேசி முடிக்குறவரைக்கும் நீ வாய திறக்கக்கூடாது. இன்னைக்கு ஆபீஸில் ஒரு பிரச்சனை, மனோஜ் வந்து கத்திட்டு போனான்."
"நான் ஆமாம் போடலாமா இல்ல சும்மா தான் கேட்கணுமா?"
அவள் சீரியஸாகக் கேட்டாளா இல்லை நக்கல் செய்தாலா என்று தெரியாமல், "இல்ல, ம்ம் கொட்டுறதுலாம் கடைசில. இப்போ சும்மா கேளு," என தொடர்ந்தேன்.
நான் பேச்சை முடித்ததும், "எனக்குக் குழப்பம் எல்லாமே மனோஜ் எந்த மெசேஜை சொல்றான்னு தான் அதுவும் உங்க பெயருல." அவள் thriller படம் பார்த்துவிட்டு ட்விஸ்ட் புரியாமல் கேட்பதுபோல் வினவினாள்.
"உனக்கு லாவண்யா என்ன பத்தி பேசுனது ஒன்னும் காதுல விழலையா?" விழித்தேன்.
"நீங்க சொல்றதை வச்சு பார்த்தா பொண்ணுக்கு உங்கள பிடிச்சு போய் உங்கள அடைய இப்டி லூஸுத்தனமா பண்ணிருக்கு. உங்க நட்பையும் முறிச்சுட்டு. ஆக்கமும் அழிவும் பெண்ணாலேன்னு தெரிஞ்சு தான் சொல்லிர்காங்க."
அவளின் எதார்த்தமான பதிலிருந்து நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
"இன்னொரு பொண்ணு உன் ஹஸ்பண்ட் மேல ஆசைப்படுறான்னு தானே எல்லா சீரியலிலும் பாதி கதைய ஓட்டுவாங்க."
"ஆசைப்படட்டும். எனக்கென்ன?" தோள்களைக் குலுக்கினாள்.
"அடியேய்!"
அவள் சிரித்துவிட்டு திமிரான குரலில், "அந்த லாவண்யாவ பத்தி காரில் கார்ட் கிடைத்த அன்னைக்கே facebookஇல் தேடி பார்த்துட்டேன். பொண்ணு அவ்ளோ அழகும் இல்ல டேலண்ட் உம் இல்ல. அதுவும் தன் கணவனோட routineஇல் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் அது மனைவிக்குத் தெரியும். நீங்க அவளுக்கு மெசேஜ் பண்ணீங்களா அவளோட அடிக்கடி வெளிய போனீங்களான்னு பொண்டாட்டி எனக்கு தெரியாதா?" புருவத்தைத் தூக்கி தெனாவட்டாகக் கேட்டாள். பின் என் கன்னத்தை கிள்ளி, "டியர் செல்லம், உங்க அளவுக்குலாம் நாங்க பேக்கு இல்ல பார்த்துக்கோங்க." என்று சிரித்தாள்.
இப்போது தான் பெருமூச்சுடன் உடலில் இருந்த எல்லா டென்ஷனும் காற்றோடு வெளியேறியது. முகத்தில் அசடு வழிந்தது.
அவள் எழுந்து கிட்சனுக்குச் சென்று சாப்பிட்ட தட்டையைக் கழுவ அவள் பின்னாலே சென்றேன். "சரி, அறிவாளி ஏதாவது guesses வச்சிருக்கீங்களா whatsapp message பத்தி?"
தட்டையைக் கவுத்திவிட்டு கிட்சன் tabletopமேல் அமர்ந்து தலையை ஆட்டினாள். "ம்ம்ம்! என்னமோ செட் அப் பண்ணிருக்கா லாவண்யா. அந்த மெசேஜை கண்டிப்பிடிச்சு அதோட வில்லங்கத்தனத்தை மனோஜ்கிட்ட காட்டி புரியவச்சா தான் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரும், அவளோட திரையை கிழிக்கலாம். ஆனா உங்க சேப்டிக்கு சொல்றேன், நாளைக்கு ஆபீஸ் போகாதீங்க," என எச்சரித்தாள்.
மனோஜின் வெறித்த பார்வையைக் காண எனக்கு வெகுச்சங்கடமாகவும் வருத்தமாகவும் இருந்தது. கால் ஆட்டிக்கொண்டு கிட்சன் tabletopமேல் அமர்ந்தவள்," என்ன புரிஞ்சதா?" என்று கேட்க நான் புன்னகைத்தேன். இவள் எங்கு தவறாகப் புரிந்துக்கொண்டு பத்திரகாளி ஆகுவிடுவாளோ என்று அப்போது பயந்ததை எண்ணி வெட்கப்பட்டேன், இவள் மற்ற பெண்கள் போன்றல்ல.
அவள் இதழ்களை முத்தமிட இரு வினாடிகளில், "ஆ தள்ளுங்க தள்ளுங்க! நான் தூங்கனும் ஆபீஸ் இருக்கு," என என்னைத் தள்ள முயற்சித்தாள்.
உடனே என் இரு கைகளையும் tabletopமேல் வைத்து என் அரவணைப்பில் அவளைச் சிறையிட்டேன், "எனக்கு லீவ் தான். இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சலாமே உன் ஹஸ்பண்டை?"
"ஆஹான்."
மீண்டும் முத்த மழையில் நனைத்தேன் அவளை. நமக்கான பொக்கிஷத்தை appreciate செய்வது நல்லது தானே! மழை சற்று சாரலாய் ஓய்ந்ததும் அவள்
என் கன்னத்தை வருடி கூறினாள், "தனக்கானதின் மேல் தனித்த பார்வை உண்டு, அது தன் பார்வையிலிருந்து விலகினாலும். புரிஞ்சதா?" கண்களின் ஆழம் ஆளை விழுங்கிடும் அளவுக்கு ஒரு பார்வை.
பிறகு பெருவானம் கவிழ்ந்த கூடாய் உருமாறி எங்களை இழுத்து அரவணைத்துக்கொண்டது உறக்கத்தினுள்.
[பல வாரம் கழித்து அப்டேட் பண்ணதும் உடனே எப்போதும் மாதிரி reads குவிந்தது! Thank you for your support! யாரும் நம்ம கதைய மறக்கலன்னு நினைக்கும்போது அவ்வளவு சந்தோஷம்! ரொம்ப நன்றி! ரொம்ப சண்டை, டென்ஷன்னு போகுதுன்னு இன்னைக்கு சேப்டரில் கொஞ்சம் ரொமேன்ஸ் தூவிருக்கேன்:-) Comments are appreciated! ]
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro