8. பார்க்கலாம்
இலைக்கு மழைத்துளி பாரமாகுமா?
பறவைக்கு வான் சுமையாகுமா?
எனக்கு உன் நினைவுகள் வலியாகுமா?
ஆம், ஒரு நாள்,
மண்ணில் வீழும் மழை
சிறகை மடக்கிக்கொள்ளும் பறவை
உன்னை மறக்கும் நான்
எல்லாம் சாத்தியமாகும்
-GuardianoftheMoon
--------------------------------------------------------------
அன்றைய வாரம் திங்கட்கிழமை ஆபீஸ் திரும்பினேன். கையில் சூடான காபி கப் உடன் லிப்ட் இலிருந்து இறங்கி என் டேபிளை நோக்கி நடந்தேன். டேபிளுக்கு வந்து என் காபி கப்பை வைத்தபோது என் டேபிள் மேல் ஒரு சிறிய செடி இருந்தது. எதிர்பார்த்ததுபோல் தோளைத் தட்டினான் இனாபா(Inaba).
"That's the andalucia flower that blooms once every 6 months and is only found in the mountains of Okinawa. You are welcome by the way," இனாபா செடியைப் பற்றி கூறினான்.
"Dude, when did you return? You didn't answer my messages yesterday so I thought you wouldn't be here today."
"I was tired after the trip. That's all."
இனாபா என் ஆபீஸில் என்னோடு பணி புரிபவன். மலை ஏறுவதில் விருப்பம். அவனோடு சேர்ந்து அடிக்கடி போய்விடுவேன் நான் என் கேமராவை தூக்கிக்கொண்டு. ஆனால் சில மலைகள் ஆபத்தானவை என்பதால் அனுபவம் வாய்ந்த இனாபா மட்டும் செல்வான். ஒவ்வொரு முறை என்னை கூட அழைத்து செல்லாமல் போனதற்கு இப்படி ஒரு புதுவகை செடியை தூக்கிட்டு வந்துருவான் அன்பளிப்பாய். அவன் கொண்டு வந்த பாதி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாமல் கருணையின்றி கொன்றுவிட்டேன் என்றபோதும் என் பேச்சை மீறி அவன் இச்செடிகளைக் கொண்டு வருவதுண்டு. இந்த Andalucia எத்தனை நாட்கள் என் பால்கனியில் தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. வெள்ளையாய் சிறு மலர்களோடு தனக்கு வரப்போகும் ஆபத்தை அறியாமல் சிரித்துக்கொண்டிருந்தது. பிறகு இருவரும் லஞ்ச்கு சந்தித்துக்கொள்ளலாம் என வேலைகளில் மூழ்கினான்.
இனாபாவிடம் புதிதாய் அறிமுகமான இலங்கைப் பெண்ணைப் பற்றி விவரித்தேன்.இனாபா தான் பிறகு கூறினான், நான் பார்த்த பெண்ணின் ஆங்கிலம் வேறு மாதிரி இருந்ததால் வெளிநாட்டில் வளர்ந்தவளாகக்கூட இருக்கலாம் என. ஊர் பெண் என்று நான் குதூகலத்துடன் நினைத்ததை சொன்னதும் அவன் கிண்டலுக்கு அளவில்லை.
அவ்வாரத்தின் வியாழக்கிழமை அன்று அவளுக்கு மெசேஜ் செய்தேன். அவளிடமிருந்து எந்த ஒரு contactஉம் இல்லாததால் நானே முதற் படியை எடுத்து வைத்தேன். சற்று கவுரவம் பார்ப்பவர்கள் பெண்கள். நமக்கு தான் வெட்கம் மானம் சூடு சொரணை கம்மி அல்லவே.
"Hi. This is Raj" என்று ping செய்தேன்.
"Hi Raj😊 சில நிமிடங்களில் பதில் வந்தது.
" ரொம்ப துள்ளுறான்னு நினைக்காதீங்க but are you free for coffee?"
"பார்க்கலாம்,"
"பார்க்கலாம், நாள் பிக்ஸ் பண்ணலாம் அப்டின்னு Bru coffee விளம்பரம் மாதிரி meet upக்கு ஓகே சொல்லுங்க" எவ்வளவு தூரம் தான் போகிறது என்று பார்ப்போம் என்ற முடிவோடு ரிப்ளை செய்தேன்.
"கொஞ்சம் ஓவரா தான் போறீங்க பட் இந்த துணிச்சலும் நல்லா தான் இருக்கு. Saturday 12pm at Taileen Green Park வந்துருங்க. Carpark C வந்ததும் கால் பண்ணுங்க."
"அங்க என்ன restaurant பிரபலம்?"
"என் சமையல் தான். அதவிட பெட்டரா அங்க என்ன கிடைக்கபோகுது." அவள் பதிலளித்தாள்.
"By the way, உங்க நேம்?"
மறுமுனையிலிருந்து ரிப்ளை வரவில்லை இந்த கேள்விக்கு. இரண்டாவது முறை அவளிடம் நேரடியாக பேசியும் பெயர் அறியாது இருப்பது உள்ளுக்குள் தயக்கைத்தை ஏற்படுத்தியது. பேய் கிட்டயோ கற்பைலயோவா பேசிட்டு இருக்கோம்? இல்லயே... அவளை சந்திக்கும்போது தெரிந்துக்கொள்வோம் என புறந்தள்ளினேன்.
கதிரவனின் ஒளி மண்ணை அரவணைத்த தருணம். இலைகளை விட்டு பனித்துளிகள் விடைப்பெறும் வேளை. சற்று மேகமூட்டத்துடன் சனிக்கிழமை விடிந்தது. காற்றில் ஒரு பரபரப்பு. முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு. கார் பார்க்கை நோக்கி விரைந்தபோது காலேஜ் பையன் போல் ஒரு நாளில் இளமையாகிவிட்டது போல் ஓர் உற்சாகம். நமக்கு 29 வயசாக போகுது என எனக்கே நினைவுறுத்திக்கொண்டேன். ஆனால் இந்த சந்திப்பு பழைய புதைந்து இருந்த நினைவுகளை வெளிகொணர்ந்தது. வினோதினியும் நானும் முதலில் தனியாய் சந்தித்தபோது எனக்கு வியர்த்துக்கொட்டி சட்டை முதுகோடு ஒட்டிக்கொண்டது, அவ்வளவு பயம், நடுக்கம். ஆனால் இப்போது சர்வ சாதாரணமாக போன் நம்பர் கொடுத்த ஒரு வாரத்தில் சந்தித்துக்கொள்கிறோம்.
"Sorry வினோ. உன்ன வெயிட் பண்ண வச்சிட்டேனா?"
"இல்ல இப்ப தான் நானும் வந்தேன். Friends விட மாட்டேண்டாளுங்க," வினோதினியின் முகம் சிவந்தது.
இருவரும் தத்தம் நட்பு வட்டாரங்களுக்குத் தெரியாமல் முதன் முறையாக தனியாக சந்தித்துக்கொண்டோம் அன்று. Engineering chemistry சொல்லி தருவதற்காக தான் வினோதினி என்னை சந்திக்கிறான் என்பது நாங்கள் இருவதும் எங்களையே ஏமாற்ற சொன்ன பொய் என்றாலும் அது பொய் என்று அறிந்தும் அதைக் காட்டாது நடித்துக்கொண்டிருந்தோம். நானும் புக்ஸ் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்திருந்தேன் பாசாங்கிற்காக.
"யாராவது நம்மள பார்த்து தப்பா நினைச்சிடுவாங்களா?"
"ச்சே ச்சே.. நம்ம படிக்க வந்துருக்கோம்,"
நான் கிண்டலுடன் சொல்வதைக் கேட்டு வினோ முறைத்தாள். "சரி, புக்க எடு. படிக்கலாம்,"
"சுடிதார் உனக்கு அழகா இருக்கு,"
புத்தகைத்தைத் திருப்பிக் கொண்டிருந்தவளின் கைகள் நின்றன. அவளின் கண்கள் சட்டென நிமிர்ந்து என்னை அதிர்ச்சியில் நோக்கின. அவளுக்கு என்ன பதிலளிப்பதென்று தெரியாமல் பிறகு நான் கூறியதைக் கேட்காதவாறு கண்கள் மீண்டும் புத்தகத்தைப் பார்த்தன. நான் என் புத்தகைத்தைத் திருப்பும்போது அவளின் கண்கள் என்னை தொட்டுவிட்டு ஓடின. எல்லாம் புரிந்தும் புரியாத மாதிரியே காட்டிக்கொள்வது பெண்களுக்கே உரிதான குணம்😉
[Random update. Comments are appreciated! இந்த கதைய இன்னும் நிறைய பேர் படிக்கனும்னு எனக்கு ஆசை ஆனா reads கொஞ்சம் கம்மியா தான் இருக்கு. பார்ப்போம்.
Posting this at 2am(I'm not from India so diff time zone:) ) where are you guys from?]
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro