3
ஹேய் கவி இன்னும் தூங்கிட்டு இருக்க, எழுந்திரி.
நீ போ சஞ்சனா, நா Practical க்கு நேரா வந்துட்றேன். அந்த சிடு மூஞ்சி Classல தூங்கறத விட இங்கயே தூங்கலாம்.
கண்களை திறக்காமலே பதில் சொல்லிவிட்டு அடுத்த பக்கம் திரும்பிப் படுத்தாள் கவிதா. அதற்கு மேல் அவளை தொல்லை செய்யாமல் அடுத்த மூவருமாய் கல்லூரிக்கு கிளம்பினார்கள்.
அன்று Submit செய்ய வேண்டிய Lab report வேலை பாக்கியிருக்க நேராக Class roomஇல் போய் அமர்ந்தவள் அதை எழுதத் தொடங்கினாள்.
"ஹேய் சஞ்சனா, கவி வரல? " தன் வழக்கமான இடத்தில்லஅமர்ந்த படி கேட்டான் விமல்.
இல்ல, அவ நேரா Practicals க்கு வர்ரேன்னு சொல்லிட்டா.
நீ Report Complete பண்ணிட்டியா?
ம்ம் இப்போ தான் முடிச்சேன்.
அத குடேன் எழுதிக்கிறேன்.
இந்தா, கொஞ்சம் Change பண்ணி எழுது. இல்லன்னா Copy பண்ணது தெரிஞ்சிரும்.
அதெல்லாம் நா பக்காவா பண்ணிடுவேன், don't worry.
வழக்கமாக கவி அமரும் இருக்கை காலியாக இருந்தது. அவள் இல்லாமல் என்னவோ போலிருக்க யாருடனும் பேசத் தோன்றாமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள். வகுப்பு தொடங்க முன்னரே விமல் எழுதிவிட்டு அவள் report ஐ திருப்பிக் கொடுத்தான்.
Class முடிந்ததும் போனை Check செய்ய தான் Canteen இல் இருப்பதாய் கவிதா Message போட்டிருந்தாள். Canteen உள் நுழையும் முன்னரே எதிர்ப் பட்டான் அஜய்.
"HI" என்று அவன் புன்னகை செய்ய இவளும் தன் பங்கிற்கு சிறு புன்னகையுடன் "Hi " என்றாள்.
"மூனு பேரும் உள்ள தான் இருக்காங்க, நீங்க வர்ர வரைக்கும் Waiting. சீக்கிரமா போங்க. " என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டான். அவள் உள்ளே நுழைய அஜய் சொன்னபடி அவளுக்காக காத்துக் கொண்டு தான் இருந்தார்கள் அடுத்த மூவரும்.
"வா சஞ்சனா, இன்னைக்கி கவியோட Special treat " என்று சிரித்தாள் தீப்தி.
"Treat ஆஹ், என்ன Special? " அவள் கேள்வியாக கவியை பார்க்க,
அக்காவ பொண்ணு பாக்க வந்தாங்கல்ல, அந்த வரண் Ok ஆகிடுச்சு டி. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். Two months ல Wedding.
"Wow super ப்பா. " -சஞ்சனா
ஆனா பாரு சஞ்சனா, அக்கா கல்யாணத்துக்கு Canteen ல யாராச்சும் Treat தருவாங்களா? -தீப்தி
ஹேய் கல்யாணம் அக்காக்கு, எனக்கில்ல -கவி
அது தான் உன் ரூட் Clear ஆச்சுல்ல - ரம்யா
ஹ்ம் அப்டி பாத்தா Double treat வேணும் - தீப்தி.
"என்ன ரம்யா இவள இன்னும் சம்மதிக்க வெக்க முடியலயா? " கேட்டுக் கொண்டே வந்தவன் ஒரு கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
"பாரு அஜய், அக்கா Marriage க்கு Canteen ல Treat குடுக்குறாளாம்" - ரம்யா முகம் சுழித்தபடி கூறினாள்.
"கவி ஒனக்கிருக்குறது ஒரே ஒரு அக்கா, அவங்களுக்கு Marriage னா இப்டி தான் கணக்கு பாத்துட்டு இருப்பியா? , ரொம்ப மோசம்மா நீ " என்றவன் சஞ்சனாவின் பக்கம் திரும்பி " என்ன சஞ்சனா இப்பவும் Silent ஆஹ் இருக்கீங்க, இந்த அநீதிக்கு எதிரா நீங்களும் குரல் குடுக்கணும் " என்றான்.
அவன் சொன்னதும் அவள் கவியின் முகத்தை பார்க்க அவளோ சஞ்சனா நீயுமா என்பது போல பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.
"பாவம்பா, போன வாரம் தானே Birthday Treat குடுத்தா, அதனால இன்னைக்கு மன்னிச்சி விட்றலாம் " அவள் அஜயிடம் தன் தோழிக்காக வக்காலத்து வாங்கினாள். அவளின் கெஞ்சலான பார்வை அவனை என்னவோ செய்ய ஒருவாரு தன்னை சுதாகரித்துக் கொண்டவன் " ம்ம் ok சஞ்சுக்காக ஒன்ன விட்றேன் " என்று கவியிடம் சொல்ல " அய்யோ அஜய் நீயுமா?! " குறைபட்டுக் கொண்டார்கள் ரம்யாவும் தீப்தியும்.
நல்ல வேளை அஜயின் தடுமாற்றம் சஞ்சனாவைத் தவிர மற்ற மூவரின் கருத்தை எட்டவில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro