21
Canteen இல் கவி, தினேஷ், ரவி, தீப்தி, ரம்யா என பெரிய கூட்டத்துடன் அமர்ந்திருந்தான் அஜய். அவனுடன் தனியே பேச வேண்டும் என எதிர்பார்த்து போனவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. ஏக்கமாய் அவன் முகம் பார்த்தவள் அவன் பார்வை அவள் பக்கம் திரும்பும் போதெல்லாம் தலை குனிந்து கொண்டாள். மற்ற எல்லோரும் சிரித்து பேசிக் கொண்டிருக்க அதில் ஈடுபாடு இல்லாமல் அமர்ந்திருந்தவள் அதற்கு மேலே முடியாமல் வகுப்பறைக்கு போவதாய் சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்தாள்.
Canteen இலிருந்து வெளியே வந்தவள் வகுப்புக்கும் போகத் தோன்றாமல் அவள் வழக்கமாய் அமரும் மரத்தடியை நோக்கி நடக்க " சஞ்சு " என்று அஜய்யின் குரல் கேட்டது. அவனை அப்போது அங்கே எதிர்பாராதவள் படபடப்புடன் திரும்பிப் பார்த்தாள்.
என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க?
பதில் சொல்லத் தோன்றாமல் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தாள் அவள். அவள் கண்ணீரைப் பார்த்து குழம்பிப் போனவன் அவளை நெருங்கி வந்தான்.
"சஞ்சு Is everything ok? எதாவது Problem ஆ? ஏன் Dull ஆ இருக்க? " அவன் பதற்றமாய் கேள்விகளை அடுக்க, வார்த்தை வராமல் அவன் நெஞ்சில் சாய்ந்து விம்மத் தொடங்கினாள் சஞ்சனா.
சஞ்சு, என்னாச்சும்மா? ஏன் அழற? எதாச்சும் Problem னா சொல்லு . நா இருக்கேன் உனக்கு.
நீண்ட நேரம் பதில் சொல்லாமல் விம்மியவள் ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,
"Sorry அஜய், உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்.உன் மனச புரிஞ்சிக்காம உன்ன நெறய Hurt பண்ணிட்டேன் . Im sorry ..." அவனை விட்டு விலகாமலே அழுதபடி அவள் சொல்ல அவள் மனதை புரிந்து கொண்டவன் அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ, " ஓஹோ " என நண்பர்கள் சேர்ந்து கோரஸாய் கத்த சுய நினைவுக்கு வந்தவர்கள் விலகி நின்றார்கள்.
"சஞ்சு ... Silent ஆ இருந்துட்டு என்ன வேல பாத்து வெச்சிருக்க? " -ரம்யா
"எனக்கு அப்பவே தெரியும் இதுங்க ரெண்டுக்கும் நடுவுல எதோ இருக்குன்னு. But ரொம்ப Time எடுத்துக்கிட்டீங்க ரெண்டு பேரும், அஜய் அவ தான் Slow நீயாவது உன் பங்குக்கு எதாவது பண்ணி இருக்கலாம்ல " -கவிதா
"ஹேய் அப்டில்லாம்.... எதுவும் இல்ல " -
அஜய் சமாளிப்பதற்காய் ஏதோ சொல்ல வாயெடுக்க, " என்ன இல்ல? நடிக்காதடா. அது தான் நாங்க எல்லாத்தையும் பாத்துட்டோமே "-ரவி.
எல்லோரும் சேர்ந்து கிண்டல் செய்ய, வெட்கத்தில் முகம் சிவந்து போய் நின்றிருந்தாள் சஞ்சனா. அந்த கலவரத்திலும் அஜய் தன்னவளை ரசிக்க,
"பாருடா! நம்ம முன்னாடியே சைட் அடிக்கிறான் " தினேஷ் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்.
சரி விடுங்கப்பா, அவங்களே Second year ல இருந்து Love பண்ணி Final year ல தான் சேந்து இருக்காங்க. நாம பேசி அவங்க Time அ Waste பண்ண வேணாம். Lovers க்கு கொஞ்சம் Privacy குடுத்துட்டு நாம Class க்கு போலாம் " எல்லாரையும் கிளப்பிக் கொண்டு போனாள் கவிதா.
பார்க்கில் புற்தரையில் அமர்ந்திருந்தார்கள் இருவரும். மனம் உற்சாகமாய் இருந்தது. அஜய்யின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் சஞ்சு. நீண்ட நேரம் அப்படியே இருந்தார்கள் இருவரும். அவள் விரல்களுடன் அவன் விரல்களை கோர்த்துக் கொண்டு அதை பார்த்தபடி இருந்தவன்,
சஞ்சு ...
ம்ம்ம்...
"சஞ்சு " கண்களை திறந்து பார்த்தாள் சஞ்சு. என்ன என்று அவள் புருவம் உயர்த்திக் கேட்க அவள் கண்களை ஊடுருவி ஒரு பார்வை பார்த்தவன் " I love you "என்றான்.
"தெரியும் " என்று அழகாய் புன்னகைத்தாள் அவள்.
அவ்ளோ தானா? நீ எதுவும் சொல்ல மாட்டியா?
"சொல்லனுமா? " அவள் குறும்பாய் கேட்டாள்.
வேணாம், சொல்லாம இருக்குறதும் அழகா தான் இருக்கு.
அஜய் சொல்ல புன்னகையுடன் அவர் மார்பில் சாய்ந்து கொண்டாள் சஞ்சனா.
Sorry அஜய் ஒன்ன ரொம்ப Hurt பண்ணிட்டேன்ல?
அதெல்லாம் இல்லம்மா, நா எத பத்தியும் யோசிக்காம பட்டுன்னு Love சொல்லிட்டேன். But நீ உன் Parents, family பத்தியெல்லாம் நிறைய யோசிச்ச. சரியா பாத்தா உன் நிலமைய யோசிக்காம Love சொன்ன நா தான் Sorry கேக்கனும்.
இல்ல அஜய், நா தான்
ஷ்ஷ் ... அவள் இதழ்களில் தன் விரலை வைத்து அடக்கினான் அவன்.
" அது தான் இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சில்ல, இனிமே எதுக்கு பழசெல்லாம் "
சொல்லிவிட்டு அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான் அஜய்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro