2
வெள்ளிக்கிழமை Lectures cut செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவள் ஞாயிறு மதியம் திரும்பவும் விடுதிக்கு போக தயாராகிக் கொண்டிருந்தாள். பஸ்ஸில் போனாள் 3 மணி நேரத்தில் போய்விடலாம். விடுதியில் தங்கிப் படித்தவள் இப்படி மாதத்தில் இருமுறை வீட்டுக்கு வந்து விடுவாள். அவளது Roommates க்காக அம்மா Special ஆக சமைத்துக் கொடுத்ததையும் எடுத்துக் கொண்டு இவள் மெதுவாய் தயாராகி வீட்டிலிருந்து கிளம்பும் போது நேரம் 2. மணி ஆகியிருந்தது.
விடுதியில் நுழையும் போது 5 மணி.
"ஹேய் சஞ்சு வந்துட்டியா? சாப்புட என்ன கொண்டுவந்த" கேட்டுக்கொண்டே வரவேற்றாள் கவிதா. கவிதாவும் சஞ்சனாவும் ஒரே Course. அதனால் அடுத்த இருவரை விட அவளுடன் சற்று நெருக்கம் இருந்தது.
கொஞ்சம் மூச்சு விட விடும்மா, இப்போ தானே வந்தேன்.
மூச்செல்லாம் அப்றமா விட்டுக்கோ, முதல்ல என்ன கொண்டு வந்தன்னு சொல்லு
இந்தா பிரியாணி, அம்மா Late பண்ணாம சாப்ட சொன்னாங்க.
அறையினுள் நுழைய முன்னரே bag ஐ பிரித்து அவளிடம் கொடுத்துவிட்டு, உள்ளே நுழைய ரம்யா Laptop இல் மூழ்கி இருந்தவள் இவளை கண்டதும் ஒரு Hi சொல்லிவிட்டு மீண்டும் தன் வேலையில் மூழ்கினாள்.
தலையணையை கட்டிக் கொண்டு படுத்திருந்த தீப்தி கஷ்டப்பட்டு எழுந்து "வந்துட்டியா சஞ்சனா " என்றுவிட்டு மீண்டும் தலையையணையில் முகம் புதைத்தாள்.
"Girls சஞ்சனா வீட்லருந்து Special பிரியாணி " கவிதா சொல்லிக் கொண்டே உள்ளே வர Wow என்று கோரஸாய் கத்தினார்கள் தீப்தியும் ரம்யாவும்.
ம்ம் நா வந்தத யாரும் கண்டுக்கல, சாப்புட கொண்டுவந்திருக்கேன்னு சொன்னதும் என்ன ஒரு Energy ரெண்டு பேருக்கும்.
"அட நீ தான் எப்பவும் இருப்பியே அம்மா சமச்சது Daily கெடக்காதுல்ல. " தூக்கக் கலக்கத்திலும் கண்களை உருட்டிய படி சொன்னாள் தீப்தி.
"Ok ok நான் Fresh ஆகிட்டு வர்றேன் . நீங்க சாப்புடுங்க. " சொல்லிவிட்டு இரவு உடையை எடுக்கப் போக, " இல்லப்பா நீயும் வா, நாங்க Wait பண்றோம் ".கவிதா சொல்லவும் "ஆமா இத சாப்புட்டா Dinner க்கு Canteen ல போய் நிக்க வேணாம், அப்டியே தூங்கிட்லாம் " ரம்யாவும் அதை ஆமோதித்தாள்.
அவள் Fresh ஆகி உடை மாற்றிக் கொண்டு வந்ததும் நால்வருமாய் சாப்பிட உற்கார்ந்தனர்.
"யாராச்சும் Every week வீட்டுக்கு போய்ட்டு வந்தா நல்லா இருக்கும்ல " Chicken piece ஐ அழகு பார்த்தபடி தீப்தி சொல்ல,
"உன் வீடுதான் Just 3 hours ல போய்டலாம்ல, பேசாம நீ Every Saturday போய்ட்டு Monday Morning வரலாம் சஞ்சு " - ரம்யா
"ஆமா டி உங்களுக்கு வீட்டு சாப்பாடு கொண்டு வர்ரதுக்கு நா Every week வீட்டுக்கு போகனுமா? அப்புறம் இந்த Assignment, report லாம் நீங்க எழுதிக் குடுப்பீங்களா? " - சஞ்சனா
சஞ்சனா சாப்பிட்டு விட்டு கைகழுவி வந்த பின்னும் அடுத்த மூவரின் அரட்டை முடிவதாய் இல்லை.
அந்த வாரம் எப்போதும் போல இயல்பாய் நகர, அன்று Canteen இல் தனியே அமர்ந்து Tea சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை கண்டதும் அவள் பக்கம் வந்து Hi என்று புன்னகைத்தான் அஜய்.
Hi
என்ன தனியா இருக்கீங்க? கவி வரலியா?
இல்ல அவ Class ல இருக்கா.
"ஆஹ் அப்போ Madam Class cut பண்ணிட்டு இருக்காங்க போல " அவன் குறும்பாய் சொல்லவும்,
இல்லப்பா ஒரே தலவலி அதான் வந்துட்டேன்
ஆஹ் Tablets எதாவது கொண்டு வந்து குடுக்கவா?
Tablets போட்டேன், இப்போ கொஞ்சம் பரவால்ல.
நீங்க Class Cut பண்ணிட்டு என்ன பண்றீங்க?
அது அனிதா மேம் Class ல தூங்கிட்டேன்னு திட்டி வெளில அனுப்பிட்டாங்க
ஐயோ!!
ஹஹா ரொம்ப Feel பண்ணாதீங்க நானே Happy ஆ எழும்பி வந்துட்டேன்.
ம்ம் நெறய Class cut பண்ணுவீங்களோ?
"ஹ்ம் நெறயவே " அவன் சொல்லிவிட்டு சிரிக்கவும் அதில் அவளும் இணைந்து கொண்டாள்.
பொதுவாகவே அவளுக்கு கல்லூரியில் ஆண் நண்பர்கள் என்று யாரும் இல்லை. இதனாலேயே அஜய் அவளுடன் பேசத் தயங்கினான். ஆனால் இன்று அவள் சகஜமாய் பேசியது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அஜய்க்கு மட்டுமல்ல தான் இப்படி பேசியது சஞ்சனாவுக்கே ஆச்சரியம் தான். அவனிடம் ஏனோ நீண்ட நாள் பழகிய நெருக்கம் தானாகவே வந்துவிட்டிருந்தது அவளுக்கு. அது ஒரு வேளை தீப்தியும் ரம்யாவுமாய் அவனைப்பற்றி நல்ல விதமாய் கூறி வைத்திருந்ததால் இருக்கும் என்று அவளே நினைத்துக் கொண்டாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro