16
யாழினிக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு அவளை படுக்க வைத்துவிட்டு தன் அறைக்கு வந்தாள் சஞ்சனா . இன்னும் மனது முழுமையாய் தெளிவு பெறவில்லை. அஜய்யை நினைக்கவே கூடாது என்று நினைத்தால் அவன் மட்டும் தான் நினைவிலேயே நின்றான். ஆழமாய் ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு கையில் ஒரு நாவலை எடுத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்தாள்.
நிஜத்தை மறந்து கதைகளில் தொலைந்து போவது அவளுக்கு பிடிக்கும். பள்ளிப் பருவத்தில் இருந்தே அவள் நட்பு வட்டம் சிறியது என்பதால் அவள் நண்பர்களுடன் நேரம் செலவளிப்பதை விட புத்தகங்களுடன் நேரத்தை களிப்பது தான் அதிகம். இப்போதும் அஜய்யின் நினைவுகளை மறக்க கதைகளில் புதைந்து போகவே எண்ணினாள்.
கதை படித்த படியே உறங்கிவிட்டவள் அடுத்த நாள் காலை கண்விழித்த போது மணி ஆறரை. நெஞ்சுடன் சேர்த்து அணைத்திருந்த புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு போனை எடுத்து நேரம் பார்த்து விட்டு அப்படியே Whatsapp on செய்ய ரம்யாவும் தீப்தியுமாய் விதம் விதமாய் Status போட்டிருந்தார்கள். அவர்கள் நேற்று மாலை ஊர் திரும்பியிருக்க வேண்டும்."வீட்டுக்கு போய்ட்டியா கவி " என்று கவிதாவுக்கு ஒரு Message போட்டுவிட்டு மீண்டும் Status பார்க்கத் தொடங்கினாள். எல்லோருமாய் சேர்ந்து எடுத்திருந்த அந்த Group Selfie ஐ பார்த்த போது தானும் போயிருக்கலாமோ என்ற ஏக்கம் லேசாக எட்டிப் பார்த்தது. போகாததும் ஒரு விதத்தில் நல்லது தான், வீட்டில் இருக்கும் போதே அவன் நினைவுகள் பாடாய்ப் படுத்த அவர்களுடன் Tour போயிருந்தால் கேட்கவே வேண்டாம்.
அடுத்து வந்த நாட்களில் அஜய்யை மறக்கிறேன் பேர்வழி என எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருந்தாள் சஞ்சு. யாழினியுடன் விளையாடுவாள், தினம் ஒரு புத்தகம் படிப்பாள் இல்லை என்றால் Kitchen இல் ஏதாவது செய்வாள். இதில் ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பது முறையாவது " இது வெறும் Infatuation தான், Love லாம் இல்ல. கொஞ்ச நாள்ள இல்லாம போயிடும் " தனக்குத் தானே சொல்லிக் கொள்வாள். ஆனாலும் அவன் நினைவு வராமல் இருப்பதில்லை. அஜய் போன், Message என்று பண்ணும் போதும் முடிந்தளவு சுருக்கமாய் பதில் சொல்லி முடித்துவிட பழகிக் கொண்டாள் . சில சமயங்களில் அவளுக்கே வேதனையாய் இருக்கும். ஆனால் தான் செய்வது சரி தான் என்பதில் உறுதியாய் இருந்தாள்.
Leave முடிந்து college start ஆகி விட்டது. College இலும் முடிந்தவரை அஜய்யை சந்திப்பதை தவிர்த்தாள் சஞ்சு. அவனை மறக்க நினைத்து நினைத்தே இன்னும் அதிகமாய் நினைத்துக் கொண்டிருந்தாள். நாட்கள் நகர அவள் தன்னை விட்டு வேண்டுமென்றே விலகி இருப்பது அஜய்க்கும் புரியத் தான் செய்தது. ஆனால் அவள் மாற்றத்தின் காரணம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவன்.
அன்று அஜய்யின் பிறந்த நாள். ரம்யா, தீப்தி, சஞ்சனா கவிதா, ரவி, தினேஷ் என்று தன் நெருங்கிய நண்பர்களை மட்டும் பார்ட்டிக்கு அழைத்திருந்தான் அஜய். ஆனால் சஞ்சனா மட்டும் வரவில்லை. தன் Roommates இடம் தலைவலி என்று சொல்லியிருந்தாள். ஆனால் அது பொய் என்பது அஜய்க்கு நன்றாகவே புரிந்தது. ஏமாற்றம் என்பதை விட இப்போது அவள் மேல் வருத்தமாய் இருந்தது. ஏன் இப்படி செய்கிறாள்? எதற்காக அவனிடமிருந்து விலகிப் போகிறாள்? காரணம் அவனுக்குப் புரியவில்லை.
பார்ட்டி முடியும் வரை பொறுமை இல்லாமல் இருந்த அஜய், மற்றவர்கள் ஹோட்டலில் இருந்து கிளம்பியதும் சஞ்சனாவுக்கு போன் செய்தான் . ஒரு தடவை முழுமையாய் Ring போய் Cut ஆக இரண்டாவது தடவையில் போனை எடுத்தாள் சஞ்சு.
Hello
Hello சஞ்சு
சொல்லு அஜய்
ஏன் இன்னைக்கி பார்ட்டிக்கு வரல?
அது ... தலவலி . அதான் ....
ம்ம் Ok
அதற்கு மேல் எதுவும் பேசாமல் காலை கட் செய்தான் அஜய். வீட்டுக்கு போன பின்பும் அவள் நினைவாகவே இருந்தது.இனிமேலும் பொறுமையாய் இருப்பது அர்த்தமற்றது. நாளை அவளை நேரிலே சந்தித்து கேட்டுவிட வேண்டியது தான் அவள் மாற்றத்துக்கான காரணத்தை.
அடுத்த நாள் காலையிலேயே அவளை தேடிக் கொண்டு போனவன் Canteen இல் அவர்களின் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்த ரம்யா, தீப்தி மற்றும் கவிதாவை கண்டு அங்கே போனான். ஆனால் அங்கே சஞ்சு இல்லை. அவளை அங்கே எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தான், ஏனெனில் அவள் இப்போதெல்லாம் அங்கே வருவதே இல்லை. Interval time இல் கூட அவன் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள்.
கவி, சஞ்சு வரல?
அவன் கேட்டதும் திரும்பி மற்ற இருவரின் முகத்தை பார்த்தாள் கவிதா. சஞ்சனா இப்போதெல்லாம் அஜய்யுடன் பேசுவவது இல்லை என்பது அவர்களுக்கும் புரிந்து தான் இருந்தது. ஆனால் அதற்கான காரணத்தை அவர்கள் அவளிடம் கேட்கவில்லை. கேட்டாலும் அவள் சொல்லப் போவதும் இல்லை.
அவ Library போறேன்னு சொன்னா.
ம்ம்
அதற்கு மேல் பேசாமல் அங்கிருந்து வெளியே போனான் அஜய். அவளை தேடிக் கொண்டு Library போகப் போனவன் அங்கே மரத்தடியில் கல் பெஞ்சில் அமர்ந்திருந்தவளை கண்டு அங்கே போனான்.
அஜய் தன் எதிரில் வந்து நிற்க அப்போது அவனை அங்கே எதிர்ப்பார்க்காதவள் மிரண்டு போய் எழுந்து நின்றாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro