15
நேரம் மூன்று மணியிருக்கும். அக்ஷரா வீட்டுக்கு போக யாழினியை Ready பண்ணிக் கொண்டிருந்தாள் சஞ்சனா.
அக்கா அந்த Red color shoes எங்க வெச்சிருக்க? இந்த Frock க்கு அது தான் Match ஆ இருக்கும்.
"இந்தா " அதை கொண்டு வந்து கொடுத்தவள் " அக்ஷரா வீட்டுக்கு தானே போற? யாழினிய கூட்டிக்கிட்டு வேற யாரையும் பாக்க போகலியே! "
அவள் கேள்வியில் எரிச்சல் அடைந்தவள் "அக்ஷரா வீட்டுக்கு தான் போறேன் " வந்தனாவின் முகத்தை பார்க்காமலே பதில் சொல்லிவிட்டு யாழினியை தூக்கிக் கொண்டு கீழே வந்தாள்.
அம்மா நா போய்ட்டு வரேன்.
சஞ்சு அப்பா வந்துட்டாரு, இரு அப்பாவ Drop பண்ண சொல்றேன் .
காரில் அக்ஷரா வீட்டில் விட்டுவிட்டு போனார் சத்தியமூர்த்தி. அக்ஷரா வீடு பக்கம் தான். அரை மணி நேரத்தில் போய் சேர்ந்து விட்டாள்.
எப்போதுமே அக்ஷராவுடன் நேரம் செலவளிப்பது அவள் மனதுக்கு இதமாக இருக்கும், அன்றும் அப்படித்தான். நிறைய பேசினார்கள். பக்கத்திலுள்ள Park இற்கு குழந்தைகளை கூட்டிப் போய் அவர்களுடன் நேரத்தை களித்தார்கள். அக்ஷராவின் அண்ணன் மகன்கள் அஜய் மற்றும் ஆகாஷுடன் சேர்த்து யாழினியும் உற்சாகமாய் விளையாடினாள்.
அப்பா கூட்டிப் போக வந்த பின்பு மனமே இல்லாமல் தான் வீட்டுக்கு கிளம்பினாள் சஞ்சு.
காரில் வரும் போதே உறங்கிவிட்ட யாழினியை வந்தனாவின் அறையில் படுக்க வைத்துவிட்டு தன் அறைக்குப் போய் Fresh ஆகி உடை மாற்றிக் கொண்டு கட்டிலில் சாய்ந்தாள்.
அஜய், அவன் நினைவாகவே இருந்தது. இன்று Park இல் குட்டி அஜய் அக்ஷராவுடன் சண்டை போட்டு விட்டு சஞ்சுவின் கண்ணத்தில் முத்தம் கொடுத்துவிட்டு போனான்.
"பேர் ராசியா இருக்குமோ? எல்லா அஜய்க்கும் ஒன்ன புடிக்குது " குறும்பாய் கேட்டாள் அக்ஷரா.
ம்ம் அஜய்க்கு அவளை பிடிக்கும், ஏன் அவளுக்கும் தான் அவனை பிடிக்குமே. ஆனால் அப்படி இல்லை என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். கடந்த ஒரு வாரத்தில் வீட்டில் நடந்த பிரச்சினையில் அவனை மறந்து விட்டிருந்தாள். ஆனால் இன்று அவனுடன் பேச வேண்டும் போலிருந்தது.
பேசலாமா வேண்டாமா என்ற யோசனையில் எழுந்து போய் போனை கையில் எடுத்தாள். வந்தனாவை நினைத்துப் பார்க்க அவள் மேல் அவளுக்கே கோபமாய் வந்தது.
என்ன பண்றன்னு தெரிஞ்சு தான் பண்றியா சஞ்சு, இந்த Situation ல நீயும் வந்தனா மாரியே Selfish ஆ யோசிக்கிற? அவன் ஒனக்கு Friend. அவ்ளோ தான். நீயா வேற எதயும் கற்பன பண்ணிக்காதே.
அவள் தனக்குத்தானே வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, அவள் போன் Ring ஆனது. Screen இல் அஜய் என்ற பெயரை பார்த்ததும் இதயம் பட படவென அடித்துக் கொள்ள போனை மேசையிலேயே வைத்துவிட்டு கட்டிலில் போய் சாய்ந்தாள். முழுதாய் Ring போய் Cut ஆகும் வரை கண்களை இருக்கமாய் மூடியபடி படுத்திருந்தவள், Call cut ஆனதும் கண்களை திறக்க அவளை அறியாமலே கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அக்ஷரா வீட்டிலிருந்து வரும் போது மனதிலிருந்த உற்சாகம் மொத்தமாய் வற்றிப் போக எதற்கு அழுகிறோம் என்றே புரியாமல் நீண்ட நேரம் அழுது தீர்த்தாள்.
அடுத்தடுத்த நாட்களில் வீட்டில் யாருடனும் பேசாமல் அறைக்குள்ளே அடைந்து கிடக்க " என்னாச்சு சஞ்சு, ஏன் ஒரு மாரியா இருக்க? " இவள் மாறுதலை உணர்ந்து கேட்டாள் வந்தனா.
ஒன்னும் இல்ல
பொய் சொல்லாத ரெண்டு மூனு நாளா நீ சரியில்ல. யாழு கிட்ட கூட சரியா பேச மாட்ற.
அது தான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல. என்ன Irritate பண்ணாம போறியா?
ஹேய் ஏன் Upset ஆ இருக்கேன்னு தானே கேட்டேன், அதுக்கு ஏன் இப்டி கத்துற?
எனக்கு ஒரு Problem உம் இல்ல, நீ மொதல்ல உன் Life அ சரி பண்ணிக்கோ. அப்றம் அடுத்தவங்க விஷயத்துல மூக்க நொழக்கலாம். பெருசா Care பண்ற மாரி கேக்க வந்துட்டா. பாத்தாலே எரிச்சலா இருக்கு.
யார் மேல் கோபம், எதற்காக கோபம் என்றே புரியாமல் வந்தனாவிடம் சண்டை போட்டுவிட்டு அறைக் கதவை அடைத்துக் கொண்டு கட்டிலில் போய் அமர்ந்தாள்.
அவள் மேல் அவளுக்கே கோபமாய் வந்தது. என்ன செய்து கொண்டிருக்கிறாள் அவள்? ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? எல்லாவற்றுக்கும் காரணம் அஜய் தான். அவனால் தான் மனதில் இத்தனை குழப்பம். இனி அவனிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro