
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அழகிய கிராமம் .
தேவதர்சினி அந்த அதிகாலை நேரத்தில் அந்த தையல் மிஷினில் உட்கார்ந்து தைத்து கொண்டு இருந்தாள். மணி 4 தான் ஆகி இருந்தது. அவள் இவ்வளவு காலையில் தைக்க காரணம் இருந்தது.
அவளுடைய சித்திதான் பக்கத்து வீட்டுகாரர்கள் அவசரம் என்று சொன்னதால் அவர்களிடம் தேவதர்சினி துணி தைத்து தருவாள் ஆனால் ஒவ்வொரு துணிக்கும் கூடுதல் 50 ரூபாய் தரவேண்டும் என்று சொல்லி நேற்று இரவு துணியை வாங்கி கொண்டு வந்து கொடுத்தார். தேவாவால் பேச முடியாது என்பதால் மட்டும் அல்ல அவளுக்கு அவள் சித்தியை பார்த்தாலே பயம் என்பதால் அவர் சொன்னபடி நேற்று இரவில் இருந்து தைத்து கொண்டு இருந்தாள்.
கால் வேறு வலித்தது அவளுக்கு வலியில் அழுகை வந்தது. இருந்தாலும் அழுதால் சித்தி புவனாவிடம் அதற்கும் திட்டு வாங்க வேண்டும் என்பதால் பல்லை கடித்து கொண்டு துணியை தைத்து கொண்டு இருந்தாள்.ஒரு வழியாக ஆறுமணி ஆனபோது அவள் தைத்து முடித்தாள். அவளால் நிற்க கூட முடியவில்லை. துணியை எல்லாம் மடித்து வைத்தவள் ஒரு மணிநேரம் அப்படியே கண் அசந்தாள்.
ஒரு மணிநேரத்திற்கு பிறகு வந்த புவனா அவள் எல்லா துணியும் தைத்து வைத்து இருப்பதை பார்த்து கொஞ்சம் மகிழ்ந்து விட்டு அவளை எழுப்பி விட்டார்
என்னட்டி எல்லா சோலி(வேலை )யும் முடிச்சிட்டியோ. என்னட்டி உறக்கம் உனக்கு. இங்கேரு மெட்ராஸ்ல இருந்து இண்ணைக்கு பூஜாகுட்டி வர்றா. நான் போய் இறைச்சி எடுக்க அந்த மகேஷ்கிட்ட குடுத்துட்டு வாறேன். நீ வீடை எல்லாம் தூத்துவை (பெருக்கிவை )பாத்திரம் எல்லாம் (மழக்கி )கழுவி வை. தோசை மாவு பூஜாக்கு மட்டும் தான் இருக்கு நீ நேத்து வெள்ளம் வீத்தி போட்ட பழஞ்சி குடி என்னா. என்று சொன்னவர் அவள் தைத்த துணியை கையில் எடுத்து கொண்டு ஒரு சோலி செய்ய வேண்டாம் உறக்கம் மட்டும் போதும் என்று அவளை திட்டி விட்டு சென்றார்.
தேவா மிகவும் பணிவான பெண். வார்த்தைகள் இல்லை என்றால் என்ன அவள் விழிகள் பேசும். மிகவும் அடர்த்தியான முடி, மாநிறம் அழகான புன்னகை அதை எல்லாம் விட அருமையான குணம் என தங்கமான பெண்தான் தேவா. அப்படிபட்ட பெண்ணை அவள் சித்தி வெறுக்க ஒரே காரணம். தேவா பிறந்த உடன் அவள் அம்மா இறந்துவிட அவளை பார்த்துகொள்ள யாரேனும் வேண்டும் என்று நினைத்து தேவாவின் அம்மா காமாட்சியின் தங்கை புவனேஸ்வரியை திருமணம் செய்து வைத்தார்கள் அன்றைய தினம் முதல் அவருக்கு தேவாவை பிடிக்காது. அதுவும் அவருக்கு பூஜா பிறந்தபிறகு சுத்தம். தேவா பேச முடியாமல் இருந்தது அவருக்கு சாதகம் ஆனது அதிகம் கொடுமை படுத்தினார். அவளை அடக்கி வளர்க்கிறேன் என்று சொல்லி மிகவும் ஒடுக்கி வளர்த்தார். அவளுக்கு பேச வராது என்று சொல்லியே யாருடனும் பழக விடவில்லை. அவள் நன்றாக படித்த போதும் அவளை கல்லூரியில் அவள் விரும்பிய கம்ப்யூட்டர் படிக்க விடாமல் தமிழ்தான் படிக்க வைத்தார். அவர் கல்லூரி வரை விட்டதற்கு காரணம் தேவா அப்பா சுந்தரம்தான். அவரும் தேவா கல்லூரி முடித்த பின்னர் கண்ணை மூடி விட்டார் ஒரு விபத்தின் காரணமாக.
அதன் பிறகு தேவா முழுநேரம் தையல் வேலையில் இறங்கினாள். அவள் கஷ்டபட்டு படிக்க வைத்ததனால்தான் பூஜா சென்னையில் ஒரு ஐ டி கம்பெனியில் மாதிம் 25,000 சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவள் 10,000 சமயத்தில் அதை விட கம்மியாக அனுப்புவாள். கேட்டால் நிறைய காரணம் சொல்லுவாள் ஆனால் உண்மையான காரணம் வேறு இருந்தது அது அவளை தவிர வேறு யாருக்கும் தெரியாது. தேவா மிஷினில் உட்காரவில்லை என்றால் குடும்பம் திண்டாடும் என்று தெரிந்தும் சித்தி அவளை கொடுமை படுத்துவார். அவளுக்கு 24 வயது ஆகிறது பல இடத்தில் இருந்து வரன் வந்தது ஆனால் புவனா பல காரணம் சொல்லி தட்டி கழித்து விட்டார் உண்மையான காரணம் என்ன என்றால் அவளுக்கு கொஞ்சம் வயது அதிகம் ஆனால் அதையும் அவள் பேச முடியாததையும் காரணம் காட்டி யாருக்காவது இரண்டாம் தாரமாக கட்டி வைக்கலாம் என்பதுதான் அவரின் எண்ணம். அவள் மாடு போல் உழைக்கிறாள் ஆனால் அவளை மாட்டுக்கு காட்டும் இரக்கத்தை கூட காட்டாமல் நடத்துகிறார் புவனா. தேவாக்கு வேதனையாக இருந்தாலும் எதிர்த்து எதுவும் செய்ய மாட்டாள். அவளுக்கு கோப படவே தெரியாது. எல்லாவற்றையும் பார்த்து பயப்படுவாள் கூட்டம் அதிகம் என்றால் பயப்படுவாள். அவளுக்கு அவள் இந்த சித்தி அமைத்து கொடுத்த இந்த வீடு என்னும் சிறைதான் பிடித்திருந்தது. அவளுடைய ஒரே துணை தனிமை மட்டும்தான்.அதைவிட்டு வெளியே வந்து உலகை பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது
----
சென்னை
டேய் என்ன கிளம்பிட்டியா இல்லையா என்று கேட்டான் சூர்யா யூனிபார்ம் அணிந்த படி. காக்கி நிற உடையில் மிகவும் கம்பீரமாக இருந்தான் சூர்யா.
ஹலோ மிஸ்டர் இன்ஸ்பெக்டர் நீ என்னோட அண்ணன் தான. அப்போ அந்த மாதிரி நடந்துக்கோ அதை விட்டுட்டு என்னவோ நான் ஒரு குற்றவாளி மாதிரி நடந்துக்குற. என்று கேட்டான் 10 ம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணா
சூர்யா அவனை பார்த்தான். அவன் பார்ப்பதே முறைப்பது போல் இருப்பதால் உள்ளே சென்று அப்பா தயார் செய்து வைத்திருந்த இட்லியை எடுத்து வந்து சாப்பிட ஆரம்பித்தான் கிருஷ்ணா . சூர்யா சாப்பாடு எடுக்க செல்ல அவன் அப்பா செல்வம் அவனிடம் பேச வந்தார்.
இந்த கல்யாணம்,பொண்ணு பாத்துருக்கேன் அப்படி இப்படின்னு எதாவது சொல்லி என்ன கோப படுத்தாதீங்க நான் வேலைக்கு போகும்போதே கோபத்தோட போக விரும்பல. எனக்கு டைம் ஆகுது என்று சொன்னவன் ஹாலில் வந்து சோபாவில் உட்கார்ந்து வேகமாக சாப்பிட்டு முடிக்க கிருஷ்ணா மற்றும் சூர்யா இருவரும் கிளம்பினார்கள் அவர்கள் செல்வதை பார்த்த செல்வம் சோகமாக அவரும் வேலைக்கு கிளம்பினார்
ஆண்களுக்கு பெரும்பாலும் தன்னுடைய அம்மா போல மனைவி வேண்டும் என்றுதான் விருப்பம் ஆனால் சூர்யா கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல காரணமே அவன் அம்மாதான். கிருஷ்ணா பிறந்த ஒரு வருடத்தில் அவன் அம்மா இன்னொருவருடன் செல்ல அதன் பிறகு அவர்கள் பட்ட அவமானம் கொஞ்சம் இல்லை. அந்த அவமானங்கள் நினைத்து பல நாள் அவன் தூங்காமல் இருந்திருக்கிறான் சூர்யா.
ஒரு வருடத்துக்கு முன்பு அவன் அப்பாவிற்காக திருமணத்துக்கு ஒப்பு கொண்டபோதும் ஓடி போனவள் மகன் என்ற பேச்சு வர அதற்கு மேல் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டான். அவனுக்கு காதல் திருமணம் மீது நாட்டம் கொஞ்சம் கூட இல்லாமல் போனது (me: நான் எதுக்கு இருக்கேன் 😇)அவன் வாழ்க்கையில் அவன் அதிகம் மகிழ்ச்சி கொள்ளவும் எதுவும் இல்லை வேதனை கொள்ளவும் எதுவும் இல்லை. வெறுமை மட்டும்தான் இருந்தது அவனுக்குள்.
தனிமையில் மௌனமாக ஒருத்தி வெறுமையில் மௌனமாய் ஒருவன். அவர்கள் பேச வேண்டாம் அவர்களுக்காக அவர்கள் மௌனம் பேசும். சூர்யா தேவதர்சினி வாழ்வில் நடக்க போவதை சொல்வதுதான் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் மக்களே. சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் எழுதலாம்ன்னு போனாலே என் மனசு இந்த கதை பத்தி சொல்லிட்டு வந்துடுன்னு சொல்லுது. யாருக்குள் இங்கு யாரோ கிளைமாக்ஸ் வர்றப்போதான் சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் எழுத ஆரம்பிச்சேன். சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் முடிக்க போறேன் அதனாலதான் இப்போ இந்த கதை பத்தி சொல்றேன்.
நான் நேரில் பார்த்த சில சம்பவங்கள். அப்புறம் சில செய்திகள் ஏற்படுத்துன தாக்கங்கள் இது எல்லாம் தான் இந்த கதை எழுத காரணம்..
மொழி படம் எல்லாம் பாத்துட்டு அது எப்படி ஒரு சாதாரணமா இருக்கவங்க பேச முடியாத ஒருத்தங்கள கல்யாணம் பண்ணா எப்படி சந்தோசமா வாழ முடியும் அப்டின்னு நான் முட்டாள் தனமா நினைச்சு இருக்கேன். இப்போ அப்படி நினைக்கல ஏன்னா புரிதல்கள் வார்த்தைகளால வர்றது இல்லைன்னு நான் புரிஞ்சிகிட்டேன். எனக்கு ஏற்பட்ட அந்த புரிதல நான் உங்க கூட பகிர்ந்துக்க நினைக்கிறேன் அவ்ளோதான்.
உங்க மனதுல தாக்கத்தை ஏற்படுத்துமா அப்டின்னு எனக்கு தெரியாது. ஆனா என்னோட பார்வை எப்படி இருக்குனு உங்களுக்கு தெரியபடுத்த முடியும் அப்டின்னு நான் நம்புறேன்.
1. யாருக்குள் இங்கு யாரோ வந்து ரொம்ப அதிகம் நேரம் எடுத்து எழுதுன கதை. அதுக்கு முன்னாடி எழுதுன 2 கதையும் 3 மணிநேரத்துக்குள்ள முடிஞ்சிரும். அதே நேரம் யாருக்குள் இங்கு யாரோ 10 மணிநேரம் மேல. அது சோதனை முயற்சி அது உங்களுக்கு பிடிச்சதுலசந்தோசம்
2. சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் அது கதை கொஞ்சம் வித்யாசமா இருக்குனு நீங்க சொன்ன பிறகுதான் நான் உணர ஆரம்பிச்சேன். தமிழ் வரலாறு தெரிஞ்சிக்க கொஞ்சம் ஆர்வத்தை ஏற்படுத்துன ஒரு கதை அப்டின்னா அது இதுதான். தொடர்ந்து தர்ற ஆதரவுக்கு நன்றி.
3. வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு கூட ஒரு சோதனை முயற்சிதான். இதுவரை உரையாடல் மாதிரி எழுதிட்டு இருந்தேன் அதை மாத்தி ஒரு கதை எப்படி எழுதணுமோ அப்படி முயற்சி பண்ண போறேன் . உங்களுக்கு பிடிக்கும்ன்னு நம்புறேன்.
இது சும்மாதான் கதை அடுத்த பகுதியில இருந்து தொடங்கும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro