#9 என் மகள்
என் அம்மா
எனக்கு வாழ்க்கை கொடுத்தாள்..
என் மனைவி
என்னோடு வாழ்க்கையை பகிர்ந்து
கொண்டாள்..
என் மகள்
எனக்கு வாழ்க்கையை நேசிக்க
கற்று தந்தாள்..
தேவதை பூமியில் வலம் வருமா..
விண்மீன்கள் கண்ணடித்து சிரிக்குமா..
பட்டாம்பூச்சி கன்னத்தில் முத்தமிடுமா..
நிலா விரல் பிடித்து கூட நடக்குமா..
எல்லாம் நடந்தது..
என் மகளின் வடிவில்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro