#47 தலைநிமிரமுடியா தலையெழுத்து
பல காலம் போராடி
தலை நிமிர்ந்த பெண்களை
தலைகுனிய வைக்க
போராடுகிறது இச்சமுதாயம்..
வாழ்வில் முன்னேறிச்
செல்லும் பெண்களை
தலை கால் புரியாமல் வசைப்பாடியே
அழித்தொளிக்கும் கூட்டத்தினரும்..
ஒருதலைக் காதலில்
இளம்பெண்களின்
உயிரை எடுக்கும்
தறுதலைகளும்..
காதல் குற்றம் புரிந்த மகள்களின்
தலைவெட்டும்
கெளரவ கொலை புரியும்
சாதிப் பிரியர்களும்..
பணம் பணம் என கேட்டு
மருமகள்களை
பிடுங்கித் தின்னும்
வரதட்சணை பேய்களும்..
பெற்ற பெண்ணையும்
சிறு பெண் குழந்தைகளையும் கூட
சுதந்திரமாக நடமாடவிடாத
காமக் கொடூரர்களும்..
இப்பிரபஞ்சத்தை காணும் முன்னே
பெண் சிசுவை கருவிலே கொன்றுவிடுத்துடிக்கும்
அறிவில்லா மூடர்களும்..
இவ்வுலகில் பெருக பெருக
தலைநிமிரமுடியா தலையெழுத்துடன்
மாதர்குலம் மீண்டும் தன்னை
சமையலறையில்
அடைத்து கொள்ள தான் வேண்டுமோ..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro