
கல்யாணக் கனவுகள்...
நகராத நள்ளிரவை
நகர்த்தும் முயற்சியும்
அகமகிழ் விளிம்புகளில்
அழகுவாகனம் தரம்புரண்டும்...
சுற்றத்தார் சிரிப்பினை
சற்றும் பொருட்படுத்தாது ..உன்
பூமாலை புதுமுகத்தை
கண் காணும் இன்பங்கள்...
விடியற்காலை...
விவாகவேளை...
இமைக்கதவுகளை இறுக்கமாய்
அடைத்த போதும்...
இருளில் உன்னுடன் கண்ணாமூச்சி...
விழிகள் விளையாடும் கண்காட்சி...
மாடத்தில் மெளனமாய்
நேரத்தை கடத்தியும்...
அன்றுமட்டும் ஓர் ஆழ்ந்த சிந்தனை...
அருந்ததி நட்சத்திரம்
இதில் எதுவென்று...
அயராத களைப்பிலும்
விருந்தினர் அழைப்பிலும்
கதிரவனின் காலைத்தொடக்கம்..
கர்வமாய் நிறைவேற...
இளைஞனாய் தனிக்குளியல்
இன்று தான் இறுதி என
சின்னதாய் ஒரு ஏக்கம்...
நெஞ்சத்தில் புது ஊக்கம்...
பூக்களின் முன்னிலையில்
பூஜைகள் நிகழ்ந்திருக்க
தேர் பூட்டிய விண்பயணம் என்
தேவலோக கல்யாணம்...
அலங்காரம் ஆழ்த்திவிட்டு
அமைதியை பூட்டி விட்டு
கடவுளின் சிலை போல
கற்சிலையாய் நானும் நிற்க...
கொழுசொலிகள் பாதம் தழுவ
கூரைப்பட்டில் சிற்பம் எழ
மணக்கோலம் பூண்டவளே... என்
மகிழ்மதியின் மகராணியே...
இலச்சத்து மின்மினிகள்
மொத்தமாய் முத்தமிட்டதோ...
எழில் கொஞ்சும் மகிழ்ச்சியோ...
என்னவளின் புன்னகையோ...
மங்கலமான சந்தனமுகமும்
மாலை சூடிய பொன் தேகமும்
மந்திரமுழக்க வேண்டலிலும்
தாளமிடும் வளையல் சத்தத்தில் ...
சுற்றார் பார்க்க சூடும் பொட்டில்
செந்திலகமும் சுகவாழ்வு தொடக்கமும்
கண்ணுக்குள் காவியக்காதலை
கருவிழிகள் எடுத்துரைக்க...
முன்ஜென்ம தேடலின் பயணம்
முடிகட்ட முடிவு கண்ட தருணம்..
யாகம் சுற்றி வரும் நம்
சுண்டுவிரல் முடிச்சுகளில் என்
மூச்சுக்காற்றும் முடிவில்லா
புயல் சின்னமானதோ..
அறுசுவை உணவுகளின்
சுவைநாடிச் சொல்லும்...
ஆரவாரம் பொங்கும்
புதுவாழ்வுத் தீஞ்சுவையில்..
இன்முகத்தோடு வந்த என்
இதயத்தின் எழிலரசி...
ஆரத்திப் பொட்டு கட்டிய
அதிசயப் பேரழகி...
விடியலில் விளக்கேற்றி...
காலையில் கைகோர்த்து...
கேசத்தில் பூச்சூடி.
அந்தியில் மோகமுற்று...
மல்லிகையில் புதையிலிட்டு...
மையம் கொண்ட தென்றலாய்...
இரவினில் எனை அணைத்தாள்....
இன்றும் என் கல்யாணக்கனவுகளில்...
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro