Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உனக்கென்றே உயிர் கொண்டேன் -2

இந்த இடத்தோட பேர் எனது என்று கேட்டான் அக்னி.

இந்த இடத்தோட பேர் பஞ்சவனம் என்று சொன்னாள் தென்றல்.

பஞ்சவனம் இந்த இடத்தோட பேர் ரொம்ப வித்தியாசமா இருக்குதுல்ல என்று கேட்டான் அக்னி.

ம்ம்ம் ஆமா  என்று சொன்னாள் தென்றல்.

ஏங்க உங்களுக்கு எப்படி இந்த இடத்துல உள்ள எல்லா விஷயமும் தெரியுது என்று கேட்டான் அக்னி.

அது ஒண்ணுமில்ல நான் இங்க வந்து ரொம்ப நாள் ஆகுது அதான் விஷயம் என்று சொன்னாள் தென்றல்.

என்னங்க சொல்றிங்க இங்க வந்து ரொம்ப நாள் ஆகுதா .அப்போ நீங்க நம்ம உலகத்துல ரொம்ப நாள் உயிருக்கு போராடிட்டு இருக்கீங்களா என்ன என்று கேட்டான் அக்னி.

அப்படி இல்லங்க இந்த உலகத்தை பொறுத்தவரைக்கும் 1 வருஷம் அப்படின்னா அங்க ஒருநாள் .அப்படி பார்த்தா இங்க இருக்க சூரியன் நான் வந்த பிறகு கிட்ட தட்ட தொண்ணூறு நாள் தோன்றி மறைஞ்சு இருக்கு.அப்படின்னா அங்க ஆறு மணி நேரத்துகிட்ட உயிருக்கு போராடிட்டு இருக்கேன் போல என்றாள் தென்றல் .

என்னங்க நீங்க இவ்ளோ சாதரணமா சொல்லிட்டு இருக்கீங்க என்று கேட்டான் அக்னி.

இப்போ என்ன என்ன பண்ண சொல்றிங்க .அய்யோ அம்மான்னு அழுதா எல்லாம் சரியா போயிடுமா .பாத்துக்கலாம் விடுங்க. என்று சொன்னாள் தென்றால்.

இல்லங்க நான் இங்க வந்து பாதி நாள் கூட ஆகல உண்மையா எனக்கே கொஞ்சம் பதட்டமாதான் இருக்கு .ஆனா உங்களை பாத்தா கொஞ்சம் கூட பதட்டமா இல்ல.அதோட உங்களுக்கு தப்பிச்சு  போக இருந்த வாய்ப்பை  நான் கெடுத்தும் விட்டுட்டேன்.அப்போ கூட நீங்க  என்மேல கோப படவே இல்ல .உங்களால எப்படி இதெல்லாம் முடியுது என்று கேட்டான் அக்னி.

நம்ம உலகத்துல ஒரு விஷயம் சொல்வாங்க அதை நான் ரொம்ப நம்புவேன்.நமக்கு ஒரு விஷயம் நடக்கும்னு இருந்தா அது நடந்தே தீரும்.நம்ம என்ன முட்டுனாலும் மோதுனாலும் நமக்கு என்ன கிடைக்குமோ அது கிடைச்சே  தீரும்.இப்போ உதாரணத்துக்கு மரத்துல மாம்பழம் இருக்குன்னு வச்சிக்கோங்க அதை மரத்துல ஏறி பறிச்சு சாப்பிட சிலர் முயற்சி பண்ணுவாங்க.சிலர் கீழ விழுந்தா எடுத்து சாப்பிடலாம்னு நினைப்பாங்க.நான் முதல் ரகம் .மரத்துல ஏறி பழம் பறிக்க முயற்சி பண்ணுறவ.எனக்கு அடி படுதுங்கறதுக்காக எல்லாம் நான் சோர்ந்து போக மாட்டான்.100 முறை ஏறி விழுந்து அப்புறம் கூட எனக்கு அந்த பழம் கிடைக்கலன்னாலும் நான் 101 வது முறை கூட முயற்சி பண்ணதான் செய்வேன்.ஏனா அது என்னோட குணம்.இனி எனக்கு அந்த உலகத்துல வாழ குடுத்து வச்சிருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது.ஆனா நான் என்னோட வாழ்க்கைக்கான போராட்டத்த நான் எப்போவும் நிறுத்த மாட்டேன் என்று சொன்னாள் தென்றல்.

வாழ்க்கையில நிறைய கஷ்ட பட்டுடிங்களோ இவ்ளோ கருத்தா பேசறீங்க என்று கேட்டான் அக்னி.

ஹாஹா கஷ்டப்பட்டாதான் கருத்து வருமா  அப்படி எல்லாம் யார் சொன்னது உங்ககிட்ட .இது சும்மா நான் சொல்றது .ஆமா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க பைக்ல போறப்போதான உங்களுக்கு விபத்து ஆச்சுன்னு சொன்னிங்க .கவன குறைவா ஏதாவது இருந்திங்களா என்ன என்று கேட்டாள் தென்றல்.

ம்ம்ம் ஆமாங்க கொஞ்சம் கவன குறைவாதான் இருந்தேன் என்று சொன்னான் அக்னி.

கவன குறைவா இருக்குற அளவுக்கு என்ன நடந்துச்சு என்று கேட்டாள் தென்றல்.

உக்காந்து பேசலாமா என்று கேட்டான் அக்னி.

ஓ தாரளமா உக்காரலாம்.எனக்கு கூட கால் ரொம்ப வலிகுத்துங்க என்று சொன்ன  தென்றல் அங்கிருந்த பாறை ஒன்றில் அமர்ந்தாள்.அவளுக்கு எதிரே உள்ள பாறையில் அமர்ந்தான் அக்னி.

என்னோட ஆபிஸ்ல உள்ள ஒரு பொண்ண லவ் பண்ண கிட்ட தட்ட  ரெண்டு வருஷம் லவ் பண்ண அந்த பொண்ணுகிட்ட லவ் சொல்லவே இல்லை. அப்புறம் ஒருநாள் லவ் சொன்ன உடனே ஒத்துக்கிட்டா .அப்பறம் ரெண்டு வருஷம் லவ் பண்ணோம்.  அவ என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்தேன் நல்லாத்தான் போச்சு எல்லாம் கடந்த ஒரு மாசமா ஒரே பிரச்சனை .ரெண்டு வருசமா ஒண்ணும் சொல்லாதவ கடந்த ஒரு மாசமா வீட்ல ஒத்துக்கல ரொம்ப சண்டைன்னு சொன்னா.நானும் அவ வீட்ல போய் பேசுறேன்னுதான் சொன்ன ஆனா அவ வேண்டாம்னு சொல்லிட்டா.ஆனா திடீர்னு நேத்து வீட்ல பையன் பாதுட்டாங்க கல்யாணம் ஆக போகுதுன்னு சொல்லிட்டா .எனக்கு ஒண்ணுமே புரியல.என்கிட்ட என்ன விட்டுட்டு உனக்கு வேற நல்ல பொண்ணு கிடைப்பான்னு சொல்லிட்டா.4 வருஷ லவ் ரெண்டு நிமிஷ வார்த்தையில் தூக்கி போட்டுட்டா .எனக்கு சண்டை  போட கூட தோணல அவளை நினைச்சும் ரொம்ப கஷ்டமாதான் இருந்துச்சு .எல்லாம் சந்தோசமும் நொடியில முடிஞ்சு போச்சு.ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.ஆனா அதுக்காக எல்லாம் நான் சாக நினைக்கல.ஏதோ ஒரு எண்ணத்துல வந்ததில லாரி வந்ததை கவனிக்கல .ஆனா என்மேல தப்பு இல்லங்க லாரிதான் என்மேல மோதிச்சு என்று சொன்னான் அக்னி.

மம் அது சரி இப்போ யார் மேல  தப்பு இருந்தா என்ன இப்போ நம்மதான் இங்க வந்தாச்சே.அங்க என்ன நிலமையில இருந்தா என்ன நம்ம இங்க சந்தோசமா இருக்க வேண்டியதுதான்.அந்த உலகத்துல என்னதான் ஆயிரத்து எட்டு பிரச்சனை இருந்தாலும் இங்க நம்ம அந்த உலகத்துக்கு போறது மட்டும்தான் பிரச்சனையா இருக்கும்.இங்க பெரியவன் சின்னவன்னு யாரும் கிடையாது .எல்லோரும் சமம்தான் பசி இல்ல பட்டினி  இல்ல வேற்றுமை இல்ல.எதுவும் இல்ல இங்க சந்தோசமா இருக்கலாம் என்று சொன்னாள் தென்றல்.

இங்கதான் நம்ம சந்தோசமா இருக்கோம்னு சொல்றிங்களே அப்புறம் எதுக்கு அந்த உலகத்துக்கு போக ஆசை படுறீங்க .இங்கேயே நல்லா ஜாலியா இருக்க வேண்டியதுதான என்று கேட்டான் அக்னி.

விருந்து வீட்ல என்னதான் ராஜ மரியாதை கிடைச்சாலும் அளவு தாண்டுனா கஷ்டம்தான் அதே நேரம் நம்ம வீட்ல இருக்கும்போது பழைய சாதம் சாப்பிட்டாலும் சந்தோசமா இருக்கும்.நான் இங்க இருக்கணும்னு சொல்லல.இங்க இருக்க கொஞ்சம் நாள் சந்தோசமா இருக்கலாம்னு சொல்லுறேன் அவ்ளோதான் என்று சொன்னாள் தென்றல்.

ஏங்க உங்க கிட்ட நான் ஒண்ணு கேக்கவா என்று கேட்டான் அக்னி.

கேளுங்க என்று சொன்னாள் தென்றல்.

நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா என்று கேட்டான் அக்னி

வாழ்க்கை நமக்கு கொடுக்க நிறைய பிரச்சனை வச்சிருக்க்கு.அதுல காதல் நம்மளா தேடி  போற பிரச்சனை எனக்கு சந்தோஷத்தை   தேடி போய்தான் வழக்கம் பிரச்னை தேடி போய் வழக்கம் இல்ல என்று சொன்னாள் தென்றல்.[me; கருத்து மக்களே].

ரொம்ப தெளிவா இருக்கீங்க நீங்க என்று சொன்னான் அக்னி.

நன்றி.அப்புறம் என்ன ஜி உங்களுக்கு பசிக்கலயா வாங்க அப்டியே ஏதாவது சாப்பிட கிடைக்குத்தான்னு  பாக்கலாம் என்று சொன்னாள் தென்றல்.

சரி என்று எழுந்தான் அக்னி.

அவள் ஒரு அடி எடுத்து வைக்க போக அக்னி அவளை அழைத்தான் .அவள் அவனை திரும்பி பார்த்தாள்.

ஏங்க நீங்க எப்படி இங்க வந்திங்க உங்களுக்கும் ஏதாவது ஆக்சிடன்ட் ஆச்சா என்ன என்று கேட்டான் அக்னி.

ம்ம்ம் ஆமாங்க ஆக்சிடன்ட்தான் ஆச்சு என்று சொன்னாள் தென்றல்.

ம்ம்ம் நல்லா வாழனும்னு நினைக்குறவங்க வாழ்க்கை எல்லாம் ஏதோ விபத்துல இப்படி கேள்விகுறி ஆகுதுல்ல .ச்சே இந்த மாதிரி விஷயம் எல்லாமே இந்த நாலு பேர ஏமாத்தி நல்லா   இருக்கவங்களுக்கு நடக்கவே நடக்காதா.தான் உண்டு தன்னோட வேலை உண்டுன்னு இருக்கவங்களுக்குத்தான் இப்படி எல்லாம் ஆகுமா.என்னதான் இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க என்றான் அக்னி.

நம்மளால ஒரு விஷயம் கட்டுப்படுத்த முடியலன்னா அதை பத்தி யோசிச்சு கவலை பட கூடாதுன்னு நான்  எப்போவும் நினைப்பேன்.அதையே நீங்களும் பண்ணா உலகத்துல  எதுவும் மாறாது ஆனா உங்களுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் என்று சொன்னாள் தென்றல்.

ம்ம்ம் நீங்க சொல்றதும் சரிதான் .நீங்க பேசுறது எல்லாமே ரொம்ப கருத்தாவே இருக்குங்க என்றான் அக்னி.

நிறையபேர் சொல்லி இருக்காங்க என்று சொன்னாள் தென்றல்.

ம்ம் அப்போ நீங்க ஒரு கருத்து கண்ணம்மாதான் என்றான் அக்னி .அவன் சொன்னதை கேட்டு சிரித்த தென்றல் அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.

ஏங்க நீங்க ரொம்ப ஜாலியா எதா இருந்தாலும் பாசிடிவா பாக்குறிங்க.உங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் உங்களை இப்போ உயிருக்கு போராடிட்டு இருக்குற மாதிரி பாத்தா ரொம்ப வேதனை படுவாங்கல்ல என்று கேட்டான் அக்னி.

அட என்னங்க நீக்க இப்போ அதெல்லாம் யோசிச்சா நம்ம மனசுக்கு கஷ்டமா இருக்கும்.நான் மனசு வேதனை பட்டா எல்லாம் சரி ஆகிடுமா அதனால அவங்களை பத்தி எல்லாம் இப்போ யோசிக்காம இருக்குறது நல்லது.இப்போ உங்களோட அம்மா அப்பா மட்டும் சந்தோஷ படுவங்களா என்ன என்று தென்றல்  கேட்டாள்.

எனக்காக வேதனை பட அம்மா அப்பா  எல்லாம் இல்லங்க இப்போ எனக்காக அழ என் பிரன்ட்ஸ் இருக்கலாம் பாவம் என்னோட காயத்திரிக்கு எனக்கு அடி பட்ட விஷயம் தெரியுமோ தெரியாதோ என்று சொன்னான் அக்னி.

ஜி நீங்க ஏன் ஜி இந்த மாதிரி அந்த உலகத்துல உள்ள விஷயத்த எல்லாம் இப்போ யோசிச்சு குழப்பிக்கிட்டு இருக்கீங்க.அங்க அழுதாலும் சிரிச்சாலும்  நமக்கு தெரியவா போகுது இங்க ஜாலியா இருப்போம்.என்றாள் தென்றல்.

எந்த மாதிரி ஒரு சூழ்நிலையிலயும் உங்கள மாதிரி சிரிக்க கத்துகிட்டா ரொம்ப  நல்லா இருக்கும் என்று சொன்னான் அக்னி.

அழுறதை விட சிரிக்கிறது ரொம்ப ஈஸி .நான் கஷ்டமானதை விட ஈஸியான விஷயத்தைதான் பண்ணுவேன் அதனாலதான் நான் சிரிக்கிறேன் என்று சொன்னாள் தென்றல்.

அவள் அக்னி கண்ணுக்கு இறக்கை இல்லாத தேவதை போல தெரிந்தாள்.இருவரும் கொஞ்சம் தூரம் நடந்து சென்றார்கள்.அப்போது இருவர் சண்டை போட்டு கொள்வது போல தெரிந்தது .ஒரு பெண் மற்றும் ஆண் ஏதோ கோபமாக பேசுவது போல இருந்தது.அந்த பெண்  முகம் தெரிந்தது ஆனால் ஆண் முகம் தெரியவில்லை

என்னங்க அங்க  பாருங்க யாரோ ரெண்டு பேர் சண்டை போடுற மாதிரி இருக்கு வாங்க போய் பாக்கலாம் என்று சொன்னான் அக்னி.

அட போங்க அடுத்தவங்க சண்டைக்கு நடுவுல நம்ம போனா தேவை இல்லாத பிரச்சனைதான் வரும்  என்று  சொன்னாள் தென்றல்.

அப்படி எல்லாம் விட கூடாது வாங்க போய் அவங்க பிரச்னை தீர்த்து வைக்கலாம் என்று அவளை இழுத்து சென்றான் அக்னி.

அவர்கள் இருவரும் சண்டை போட்டு  கொண்டிருந்த இருவர் அருகில்  செல்ல அப்போதுதான் அந்த ஆண் முகம் தெரிந்தது.இருவரும் மிகவும் வேகமாக அவர்கள் அருகில் சென்றார்கள்.

சார் சார் சண்டை போடாதீங்க நிறுத்துங்க என்று சொன்ன படி அந்த ஆண் அருகில் சென்றான் அக்னி.பெண் அருகில் சென்றாள் தென்றல்.

அவர்கள் இருவரையும் பார்த்து சண்டை போட்டு கொண்டிருந்தவர்கள் மௌனம் ஆனார்கள்.

நீங்க டைரக்டர் நிலன் சக்கரவர்த்திதான என்று கேட்டான் அக்னி.

ம்ம்ம் ஆமா என்றான் நிலன்.

ஒழுங்கா கார் கூட ஓட்ட தெரியல உங்களுக்கு எல்லாம் எதுக்கு கார் என்று கத்தினாள் அவள்.

மேடம் கொஞ்சம் பொறுமையா இருங்க சார் நல்லா கார் ஒட்டுவாருன்னு நான் கேள்வி பட்டுருக்கேன்.இவர் எவ்ளோ பெரிய டைரக்டர் அவர் ஏன் உங்க மேல மோத போறாரு என்றான் அக்னி.

ஏன் பெரிய டைரக்டர் எல்லாம் ஆக்சிடன்ட் பண்ண மாடங்களா என்ன என்றாள் தென்றல்.

அதான என்ன பெரிய டைரெக்டரோ நான் இதுக்கு முன்னாடி ஒரு பேப்பர்ல கூட இவரை பத்தி  பார்த்துல இல்ல என்றாள் அவள்.

அதை கேட்ட நிலன்க்கு கோபம் வந்தது .

நீங்க பாக்கலன்னா நான் டைரக்டர் இல்லன்ன்னு ஆகிடுமா என்று கேட்டான் நிலன்.

நீங்க யாரா வேணா இருங்க மிஸ்டர் எனக்கு கவலை இல்ல என்ன இடிச்சத்துக்கு நீங்க எனக்கு பதில் சொல்லிதான் ஆகணும் .உங்களாலதான் இப்போ சம்மந்தமே இல்லாத ஒரு இடத்துல வந்து மாட்டிகிட்டோம் என்று அவள் கத்தினாள் .

நிலனை பொறுமையாக இருக்கும் படி சைகை செய்தான் அக்னி.

அட என்ன மேடம் நீங்க .அவர் வேணும்னு பண்ணல ஏதோ தெரியாம பண்ணிட்டாரு அதனால ப்ளீஸ்  கொஞ்சம்  நேரம் அமைதியா இருங்க என்று சொன்னான் அக்னி.

நான் எதுக்கு அமைதியா இருக்கணும் என்று கோபமாக கேட்டாள் அவள்.

உங்க பேர் என்ன என்று கேட்டாள் தென்றல்.

என்னோட பேர் பிந்து என்றாள் அவள்.

இங்க பாருங்க பிந்து நான் உங்களுக்கு எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்கிறேன் என்று சொன்னாள் தென்றல்.

அக்னியும் நிலனிடம் கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லி சைகை செய்தான்.நிலன் முகத்தில் கோபம் அப்பட்டமாய் தெரிந்தாலும் அமைதியாக இருந்தான்.பிந்து கண்ணாலேயே நிலனை எரித்தாள்.

தென்றல் இந்த இடத்தை பற்றி நன்றாக விழக்கினாள்.அதை எல்லாம் கேட்ட நிலன் மௌனமாக இருந்தான்.ஆனால் பிந்து கோபமாக இருந்தாள்.

இங்க பாரும்மா நீ சொல்றது  எல்லாம் கேக்க படத்துல வர்ற மாதிரி இருக்கு.என்ன இந்த ஆளோட படத்துக்குத்தான் உக்காந்து கதை எழுதிட்டு இருக்கீங்களா.இப்போ என்ன மாதிரி ஒரு கதாபாத்திரம் இந்த இடத்துல இருந்தா என்ன மாதிரி பண்ணுவாங்கன்னு சோதனை பண்ணி பாக்குறிங்க அப்படித்தான்.இதெல்லாம் நான் நம்ப மாட்டேன் எனக்கு நிறைய வேலை இருக்கு என்று சொன்னவள் எழுந்து நடக்க ஆரம்பிக்க தென்றல் அவளை அழைத்தாள்.

பிந்து கொஞ்சம் நில்லுங்க .என்கூட வாங்க நீங்க தனியா போனா எத்தவது பிரச்சனையில மாட்டிப்பிங்க என்று சொன்னாள் தென்றல்.

இந்த பிரச்னையில என்ன மாட்டி விட்ட ஒருத்தர் கூட நா இருந்தா எப்படி என்னால பிரச்னையில இருந்து தப்பிக்க முடியும்.நான் தனியாவே போறேன் என்றாள் பிந்து.

ஆஹ் போ நேரா போய் தப்பிச்சிடு என்ன  ஆகிட போகுது .தென்றல் நீ இங்க வாம்மா அந்த மாதிரி ஆள் கிட்ட எல்லாம் என்ன பேசுனாலும் வேலைக்கே ஆகாது.திமிர் மட்டும்தான் அவங்ககிட்ட இருக்கும் என்று சொன்னான் நிலன்.அவன் சொன்னதை கேட்டு கோபம் கொண்ட பிந்து அவனை திட்டுவதற்காக திரும்பி அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

என்ன மிஸ்டர் உங்க மனசுல நீங்க என்ன பெரிய ஆள்ன்னு நினைப்பா என்று கேட்டாள் பிந்து.

ஆமா பெரிய ஆள்தான் அதுக்கு இப்போ என்ன என்றான் நிலன்.

பணத்தால மட்டும் பெரிய ஆளுதான் இப்படி பேசுவாங்க என்று சொன்னாள்  பிந்து.நிலன்க்கு கோபம் வந்தது.

வார்த்தையை அளந்து பேசுங்க பிந்து  என்று அவன் கோபம் கொள்ள அக்னி மற்றும் தென்றல் அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.

என்ன என்ன பண்ணுவ என்று கேட்டாள் பிந்து .நிலன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தான் .

என்ன அமைதி ஆகிட்ட பேசு என்று சொன்னாள் பிந்து.

உன்ன மாதிரி ஒரு பொண்ணுகிட்ட பேச எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல .உன் முகத்தை பாக்க கூட பிடிக்கல.நீ இவங்க கூட போய் தொலை நான் தனியாவே போய்க்கிறேன் என்று கத்தி சொன்ன நிலன் திரும்பி நடக்க ஆரம்பிக்க.அவன் சொன்னதை கேட்டு மௌனமாக இருந்த பிந்துக்கு அந்த இடம் சுற்ற ஆரம்பித்தது போல இருந்தது.அவள் தலையை பிடித்து கொண்டாள்.தென்றல் அதை கவனித்தாள்.

பிந்து என்ன ஆச்சு என்று கத்தியவள் அவள் அருகில் வர  .தென்றல் குரல் கேட்டு திரும்பியன் பார்த்தது பிந்து மயக்கம் போட்டு விழுவதைதான் அதை  பார்த்ததும் அவள் அருகில் வந்தான்.

தென்றல் அவளை தட்டி எழுப்பி கொண்டிருந்தாள் .நிலன் அவள் அருகில் வந்தான்.எல்லோரும் பதட்டம் அடைந்தார்கள்.

என்ன ஆச்சு தென்றல் பிந்துக்கு கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி கூட நல்லாத்தான இருந்தாங்க என்னதான திட்டுனாங்க என்று புரியாமல் கெட்டவன் பிந்து கன்னத்தை தட்டினான் .அவன் முகத்திலும் பதட்டம் தெரிந்தது

எல்லாத்துக்கும் வெறுப்புதான் காரணம் .நீங்க அவரங்கள வெறுப்புல திட்டனதுனதுனாலதான் அவங்க மயக்கம் போட்டுருக்காங்க.நீங்க பெரிய ஆளா இருக்கலாம் உங்களை யாரும் திட்டி பேசாம இருக்கலாம் அதனால உங்களை திட்டி பேசுன  ஒரே காரணத்துக்காக அவங்க மேல இவ்ளோ வெறுப்பை காட்டுவிங்களா என்று கேட்டாள் தென்றல்.

தென்றல் எதுக்கு அவரை சொல்றிங்க பிந்து கூடத்தான் கோபமா திட்டுனாங்க என்று சொன்னான் அக்னி.

அவங்க கோப பட்டாங்க இவர் வெறுப்பை காமிச்சிருக்காரு. கோபத்துக்கும் வெறுப்புக்கும் வித்யாசம் இருக்கு.என்று சொன்னாள் தென்றல்.நிலன் முகம் மாறியது.

இப்போ நான் என்ன பண்ணா இவ சரி ஆவா என்று கேட்டான் நிலன். அவனை   பார்த்தாள் தென்றல்.

மயங்கி இருந்த பிந்து எழுந்திருக்க ஆரம்பித்தாள்.நிலன் முகத்தில் தெளிவு தோன்றியது.

செஞ்ச தப்ப உணர்ந்தாலே இந்த இடத்துல பண்ண தப்பு சரி ஆகிடும் என்றாள் தென்றல்.பிந்து கண்ணை திறந்தாள்.

எல்லோருக்கும் நிம்மதியானது.



அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் மக்களே அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது அபிராமி G. N

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro