Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

22


அனைவரும் உண்ணுவதற்காக செல்ல மாறன் முன்னே சென்று விட்டான் பந்தியை கவனிக்க.இளவரசி சென்றதும் இலக்கியா பின்னோடேட செல்ல போக மஹாலட்சுமியோ "ஏய்ய் நில்லுடி "என்று கத்தினாள் .

இலக்கியாவோ சட்டென்று நின்றவள் சிரிப்புடன் "என்ன அண்ணி "என்க

அவளோ "யாருக்கு யாரடி அண்ணி எந்த உரிமைல நீ என் பொண்ணுக்கு சடங்கு செஞ்ச ?பார்க்க நல்லா நல்ல சம்பளத்தோடு ஒரு பையன் கெடச்சுட்டா போதுமே வளச்சு போட்ருவீங்களே."என்க

அவளோ கொஞ்சம் கொஞ்சமாய் கனலாய் மாறியவள் கண்கள் அக்னி பிழம்பாய் சிவக்க "எனக்கு வளச்சு போடணும்னு எந்த அவசியமும் இல்ல .உங்க தம்பி தான் சொல்லிட்டாரே எனக்கு என்ன உரிமை இருக்குன்னு எது கேக்குறதா இருந்தாலும் அவர் கிட்ட கேட்டுக்கோங்க "என்றவள் மீண்டும் திரும்பி நடக்க போக

அவளோ அவளின் கையை பிடித்தவள்"மரியாதையா என் தம்பி வாழ்க்கை விட்டு விலகி போயிரு இல்ல "என்க

அவளோ புருவத்தை உயர்த்தியவள் "முடியாது என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க "என்று கூறிவிட்டு நடக்க

மஹாலட்சுமியோ "என்ன திமிரோடு உனக்கு "என்று கையை ஓங்க

இலக்கியாவோ அவளின் கையை பிடித்தவள் கீழே உதறிவிட்டால் "திருப்பி கை ஓங்க ரொம்ப நேரம் ஆயிடாது .அவரோட அக்கா அப்டிங்குற ஒரே காரணத்துக்காக பொறுத்து போறேன் ஒவ்வொரு தடவையும் இப்டி போவேன்னு நினைக்காதீங்க."என்க

சாந்தியோ "நாங்க கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி அவனை பெரிய படிப்புலாம் படிக்க வைப்போம் எவளோ ஒருத்தி நீ வந்து என் பேத்தி இடத்தை பிடிப்பை நாங்க பாத்துகிட்டு இருப்போமா "என்க

அவளோ ஏளனமாய் சிரித்தவள் "எது கஷ்டப்பட்டு ஆளாக்குனீங்களா ?அவரோட பொறந்த நாள் ஞாபகம் இருக்கா உங்களுக்கு ?"என்க

சாந்தியோ "அது அது "என்க

அவளோ சிரித்தவள் "தெரியலேல..... பெத்து போட்ட பையன இது வரைக்கும் ஒரு நாளாச்சு பாசமா கவனிச்சிருப்பீங்களா நீங்க ?அவருக்கு என்ன புடிக்கும்? என்ன சாப்பிடுவாரு? நல்ல சட்ட போடுவாரா ?இவ்ளோ என் ஒழுங்கா காலேஜ்க்கு பீஸ் காட்டுனீங்களா ?தேவை இல்லாம என் கிட்ட வாய குடுத்து வாங்கி கட்டிக்காதீங்க .நா இளமாறன் இல்ல எல்லாத்துக்கும் பொறுத்து போகுறதுக்கு பட்டு பட்டுனு முகத்துக்கு நேரா கேட்ருவேன் அப்டி கேட்டா அசிங்கம் உங்களுக்கு தான்.என்கிட்டே நல்ல விதமா நடந்துக்கிட்டிங்கன்னா நானும் நல்ல விதமா நடந்துக்குவேன் இல்லேனா .... .புருஞ்சுருக்கும்னு நினைக்குறேன் .இன்னொருமுறை வாழக்கையை விட்டு போ அது இதுனு பேசுனீங்க.... மனுஷியா இருக்க மாட்டேன் " என்று பட படவென புரிந்தவள் சென்று விட இவ்வளவு நேரமாய் மறைந்திருந்து அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ராஜாவோ மனதில் சபாஷ் போட்டுக்கொண்டான் அவளிற்கு .

அதன் பின் அவ்விடம் விட்டு செல்ல நினைத்தவன் ஓரடி எடுத்து வைக்க தன் அன்னையும் தமக்கையும் பேசுவது காதில் விழ ஏதோ உள்ளுணர்வு உந்த அங்கேயே நின்றான் ராஜா .அவர்கள் பேசுவதை கேட்க கேட்க அவனிற்கோ மனம் தீப்பிழம்பாய் கொதிக்க முதல் முதலில் தன் உடன் பிறந்த சகோதரியின் மேல் வெறுப்பு பன் மடங்காய் உயர்ந்தது .தான் என்ன செய்ய வேண்டுமென்பதையும் முடிவெடுத்துக்கொண்டவன் மேலே ஏறினான் .

அவ்விடம் விட்டு நகர்ந்தவன் மனதில் அவர்கள் கூறிய வார்த்தைகளே ஒலிக்க தூரத்தில் தெரிந்த மாறனின் முகத்தை பார்க்க அதுவோ சிரிப்பில் உறைந்து பிரகாசமாய் இருந்தது .

இது நீடிக்க வேண்டுமெனில் அதற்காக தான் செய்ய போகும் செயல் சேரி தான் என்று நினைத்துக்கொண்டவன் மனதில் அங்கே சிறு குழந்தை போல் கள்ளம் கபடமில்ல முகத்துடன் அமர்ந்து உண்டுகொண்டிருந்த இளவரசியை பார்த்து மானசீகமாய் மன்னிப்பு கேட்டுக்கொண்டான் .

மாறனோ இளவரசியின் அருகில் அமர்ந்து சிரித்தபடி உண்டுகொண்டிருந்த இலக்கியாவை பார்த்தவனின் மனதில் எண்ண அலைகள் நேற்றைய பொழுதை நோக்கி சென்றது .

வேலை விட்டு வந்ததும் தனது தம்பியையும் தந்தையையும் அழைத்தவன் வெளியே கோயிலிற்கு செல்ல வேண்டுமென்று கூற அவர்களும் உடை மாற்றி விட்டு வந்தனர் .சாந்தியும் மகாலட்சுமியும் வெளியே கடை தெருவிற்கு சென்றிருந்தனர் .ஆதலால் இவர்கள் சென்றது அவர்களுக்கு தெரியாது .அவர்கள் சென்றது கூடலழகர் பெருமாள் கோயிலிற்கு .

அவனின் தந்தையும் சரி அவனின் தம்பியும் சேரி இது வரை அவனிடம் என் இங்கு அழைத்து வந்தாய் என்று கேட்காமல் வர அவனும் கூறாமலே வந்தான் .அங்கே பெருமாளை தரிசித்து முடித்து வந்து அங்கிருந்த திண்டில் அவர்கள் அமர இலக்கியாவின் குடும்பமும் சற்று நேரத்தில் வந்து அமர்ந்தது .

அப்பொழுதே விளங்கி விட்டது சத்தியமூர்த்திக்கு தன் மகன் எதற்காக அழைத்து வந்திருக்கிறான் என்று .சங்கரர் "என்னப்பா மாறா திடீர்னு கூப்டு இங்க வர சொன்ன ?"என்க

அவனோ பட்டென்று கூறி விட்டான் "அப்... அது ....மாமா எனக்கு இலக்கியாவை புடுச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்குறேன் அதான் பெரியவங்க கிட்ட சொல்லிரலாம்னு கூப்பிட்டேன் ."என்க

இலக்கியாவின் குடும்பத்தினரிற்கு இது அதிர்ச்சி என்றாலும் ஆனந்த அதிர்ச்சியாகவே இருந்தது .

சத்யமூர்த்தி எதிர்பார்த்தேன் என்று புன்னகைத்தவர் "என் பையனுக்கு உன் பொண்ண கட்டி தர சம்மதமா சங்கரா ?"என்க

அவரோ "எனக்கு சம்மதம் தான் சத்யா ஆனா மாரனோட அம்மா...."என்று இழுக்க

சத்யமூர்த்தியோ "அவ கொஞ்சம் ஒரு மாறி சங்கரா .உன்கிட்ட சொல்றதுக்கு என்ன மாறான இளவரசிக்கு கட்டி கொடுக்கணும்னு அவளுக்கு ஆச .இப்போ இதை சொன்ன தாம் தூம்னு குதிப்பா ."என்க

சங்கரரோ மேலும் தயங்கினார் அவரின் தயக்கத்தை உணர்ந்த

மாறனோ "நாளைக்கு இளவரசியோட விஷேஷத்துல இவளை வருங்கால மனைவியா நா அறிமுகப்படுத்த போறேன் மாமா.குட்டிமாவுக்கு இன்னும் ஒரு மாசத்துல பதினெட்டு வயசு முடுஞ்சுரும் .அதுகப்புறோம் என் அம்மாவையும் அக்காவையும் அடக்க முடியாது .அதான் அதுக்கு முன்னாடியே எல்லார்கிட்டயும் அறிமுகப்படுத்தீரலாம்னு நினைக்குறேன் "என்க

அவறிற்கும் சரி என்று பட்டது .சங்கரர் தனது மனையாளை பார்க்க அவரும் கண்கள் மூடி திறந்து தன் சம்மதத்தை தெரிவித்தார் .இரு குடும்பமும் சம்மதத்தை உறுதிப்படுத்திக்கொள்ள சிறிது நாட்களுக்கு பின் திருமண தேதியை குறித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து விடை பெற்று வந்தனர் .இலக்கியாவிற்கோ திடு தொப்பென்று என் இந்த முடிவு என்ற குழப்பத்தில் இருந்தவள் அவரின் தந்தை கூறிய காரணத்தை கேட்டதும் மாறனை தான் பார்த்தாள்.அவள் அறிந்திருந்தால் மாறன் இளவரசியை தன் முதல் குழந்தையாய் நினைத்து அன்பு காட்டியதை .அவளின் பார்வையை உணர்ந்த மாறனோ சிரித்தவன் கண்களை மூடி திறந்தான் எனக்கு ஒன்றுமில்லை என்பதை போல் .

அனைவரும் பேசி முடித்து விட்டு வெளியே வர ராஜாவோ தன் அண்ணனா இப்படி ஒரு காரியத்தை துணிந்து செய்தது என்று நம்பாமல் அவனை பார்த்தபடி வர மாறனோ அவனின் என்ன ஓட்டத்தை புரிந்து சிரித்தவன் "டேய்ய் தம்பி நா குடும்பத்துக்காக எதை வேணாலும் இழப்பேன் டா ஆனா... இலக்கியா .... முடியாது டா .என்ன நம்பி ஒரு பொண்ணு இருக்கா அப்டினு தெரியாததால் தான அம்மாவும் அக்காவும் இப்டி ஒரு முடிவெடுத்தாங்க .இப்போ தெரிஞ்சா எதுவும் செய்ய மாட்டாங்க டா "என்று கூறினான்.இதை எல்லாம் நினைத்துப்பார்த்தவன் அடுத்து சிறு சிரிப்போடு உணவுண்ணுவதற்காக சென்றான் .


அவன் அறியவில்லை அவனின் அன்னையும் தமக்கையும் தான் நினைத்தது நடக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று .விதி மாறனிற்கு மேலும் என்ன வைத்திருக்கிறதோ .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro